என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வீட்டுக்குள் புகுந்து அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அரியாங்குப்பம் தேங்காய்திட்டு வீதியை சேர்ந்தவர் ஏழுமலை இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 34) இவர் அரியாங்குப்பம் மார்கெட் பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு புவனேஸ்வரி தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 4 மணியளவில் ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயன்றார்.

    இதனால் திடுக்கிட்டு எழுந்த புவனேஸ்வரி திருடன் திருடன் என அலறிய போது புவனேஸ்வ ரியை கீழே தள்ளி விட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து புவனேஸ்வரி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா க்களை ஆய்வு செய்து செயினை பறிக்க முயன்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • சி.பி.ஐ. இயக்குனரிடம் வையாபுரி மணிகண்டன் புகார்
    • அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் டெல்லி சி.பி.ஐ. இயக்கு னருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கதிர்காமம் அரசு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரிக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் கொள்முதல் செய்வது வரை மிகப்பெரும் முறைகேடுகள் நடந்து வருகிறது.

    மருத்துவ கல்லூரியில் தற்காலிக பணி நியமனம் செய்வதிலும் எந்த நியமன விதிகளும் கடைபிடிக்கப்படு வதில்லை. நீட் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களை சேர்க்காமல் புறக்கணி க்கின்றனர்.

    சுயலாப நோக்கோடும், ஆதாயம் பெற்று மருத்து வக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவகல்வியில் என்.ஆர்.ஐ. மருத்துவ இடங்களை விற்று வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ இடங்களை தாரை வார்க்கின்றனர்.

    தற்போது பிரெஞ்சு வாழ் மக்கள் உள் ஒதுக்கீடு என புதிதாக விஞ்ஞானரீதி யிலான ஊழலில் இறங்கி யுள்ளனர். என்.ஆர்.ஐ.யிடம் பெற வேண்டிய சுமார் ரூ. 1 கோடிக்கும் மேலான கட்டணத்தை பெறாமல் தன்னிச்சையாக கட்டணத்தை சுமார் ரூ.4 லட்சமாக குறைக்கின்றனர்.

    இதனால் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.

    தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் மீது எழுந்து வரும் ஊழல் புகார்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே இனியும் தாமதிக்காமல், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மீது சி.பி.ஐ உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.
    • கட்டண பாக்கியை கோர்ட்டில் செலுத்திவிடுவதாக தலைமை செயலக அதிகாரிகள் கோர்ட்டு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பணிக்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களை சேர்ந்த வாகனங்களும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    இதற்கான வாடகை பாக்கி ரூ.1 கோடியே 28 லட்சம் தொகையானது 2 தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு தரப்பட வேண்டி இருந்தது. ஆனால் ரூ.77 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதி தொகை வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக டிராவல்ஸ் நிறுவனங்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த கோர்ட்டு வாடகை பாக்கியை செலுத்த உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை. டிராவல்ஸ் உரிமையாளர்கள் கோர்ட்டை அணுகவே தலைமை செயலகம், தேர்தல் துறை, கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கடந்த 2021-ல் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின் பேரில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வாடகை பாக்கியை தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை கட்டண பாக்கி தரப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து மீண்டும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி இளவரசன் தலைமை செயலகம், தேர்தல்துறை, கலெக்டர் அலுவலக மேஜை, நாற்காலி, ஏ.சி. மெஷின்கள், வாகனங்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    அதை நிறைவேற்றும் வகையில் கோர்ட்டு அமீனாக்கள் தலைமை செயலகத்துக்கு வந்தனர். தலைமை செயலாளர் அலுவலகத்துக்கு வந்த அவர்கள் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

    ஜப்தி நடவடிக்கை தொடர்பான தகவல் உடனடியாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சட்டத்துறை செயலாளர் செந்தில்குமாருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடனும் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதன் பின் கட்டண பாக்கியை கோர்ட்டில் செலுத்திவிடுவதாக தலைமை செயலக அதிகாரிகள் கோர்ட்டு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர். இதன் காரணமாக புதுவை தலைமை செயலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார்.
    • கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் ஓசை மணி. இவரது மகன் பாலமுருகன் (வயது 28). ரவுடியான இவர் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் தொடர்புடையவர்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார். திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட அவர் காரைக்கால் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாலமுருகனை தாக்கி கீழே தள்ளி வயிற்றில் மிதித்து தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த அவரை அங்கிருந்துவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக னியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கடலூரை சேர்ந்த சூர்யா (25), விஷ்ணு (22) தேவ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் கடலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யா, விஷ்ணு, தேவ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் தலைமை செயலகம் அருகே செயற்கை மணல்பரப்பு உருவாக்கினர்.
    • நேரத்துக்கு ஏற்ப முகங்களை மாற்றி அரசியல் செய்யும் அரசியல்வாதி களுக்கு மீனவர்கள் இடம் தரவேண்டாம்.

    புதுச்சேரி:

    காலப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி, பெரிய காலப்பட்டு, சின்ன காலப்பட்டு, கணபதி செட்டிக்குளம் ஆகிய 4 மீனவ கிராமங்களிலும் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்டு ள்ளது.

    இப்பிரச்சினை குறித்து மீனவ கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

    கடல் அரிப்பை தடுக்க முதல்கட்டமாக ரூ.40 லட்சத்தில் கற்கள் கொட்டப்பட்டது. மீண்டும் ரூ.35 லட்சத்தில் 2-ம் முறையாக கற்கள் கொட்டப்பட்டது. மீன்வள த்துறை அமைச்சருடன் பார்வையிட்டு ரூ.6 கோடியே 36 லட்சத்தில் மேலும் கற்கள் கொட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூ.25 கோடி செலவில் தடுப்பு பணிகள் மேற்கொள்ள திட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

    தூண்டில் முள் வளைவு அமைக்க சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கு ரூ.19 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதா ரத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அனைத்துகள் பணிகளையும் செய்து வருகிறேன்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் தலைமை செயலகம் அருகே செயற்கை மணல்பரப்பு உருவாக்கினர்.

    இதனால்தான் தமிழக பகுதியில் கடல் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டது. புதுவை அரசை கலந்து ஆலோசிக்காமல் தமிழ கத்தில் கற்கள் கொட்டியதால் தற்போது புதுவை நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அப்போதைய எம்.எல்.ஏ. ஷாஜகான் இந்த திட்டங்களை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

    மீனவர்களின் உண்மை நிலை தெரியாமல் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் இணைந்து கபநாடகம் அரங்கேற்றி வருகின்றனர்.

    4 கிராமங்களையும் காக்க தூண்டில் முள் வளைவு அமைக்கப்படும். இந்த பணியில் தொய்வு ஏற்பட்டால் மீனவர்களோடு இணைந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

    நேரத்துக்கு ஏற்ப முகங்களை மாற்றி அரசியல் செய்யும் அரசியல்வாதி களுக்கு மீனவர்கள் இடம் தரவேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டிய முறைகள் குறித்து செயல்முறை விளக்க கருத்தரங்கு ஓட்டல் அக்கார்டில் நடந்தது.
    • புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியா பாரிகள் சங்க செயலாளர் சுதாகர், முன்னாள் செயலாளர் அசோகன், நிஷாந்த் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பொறுப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கே வழங்கியுள்ளது. இதற்கான தனி கணினி கண்காணிப்பு வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த வலைதளத்தில் பதிவு செய்யும் வழிகள், கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டிய முறைகள் குறித்து செயல்முறை விளக்க கருத்தரங்கு ஓட்டல் அக்கார்டில் நடந்தது.

    புதுவை மாசு கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பங்கேற்று விளக்கமளித்தார். புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்க செயலாளர் சுதாகர், முன்னாள் செயலாளர் அசோகன், நிஷாந்த் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • அமலோற்பவம் லுார்து அகாடமி, பிளஸ்1 மாணவர்கள் பூவராகவன், நவீனபிரியன் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
    • முன்னாள் சர்வ தேச தடகள விளையாட்டு வீராங்கனை காயத்ரி ஆகி யோர் வழங்கினர்.

    புதுச்சேரி:

    சென்னை அண்ணா நகரில் எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்லுாரி அரங்கில் நடந்த விளையாட்டுத்துறை சார்ந்த வினாடி வினா போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 720 மாணவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியை வினாடி வினா தொகுப்பாளர் ரகு நடத்தினார்.

    தகுதி தேர்வாக நடந்த இத்தேர்வில் 6 இணை யர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர் களில், 3 இணையர்கள் அமலோற்பவம் லுார்து அகாடமி மாண வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 6 இணையர்கள் பங்கு கொண்ட இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடந்த 6 சுற்றுகளிலும் பதிலளித்து அமலோற்பவம் லுார்து அகாடமி, பிளஸ்1 மாணவர்கள் பூவராகவன், நவீனபிரியன் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    இவர்களுக்கு ரூ.25,000 ரொக்கப்பரிசும் ரூ.25,000மதிப்புள்ள மிதி வண்டியும் பரிசாக வழங் கப்பட்டது. பரிசுகளை, முன்னாள் பிரபல ஹாக்கி வீரரும் பயிற்சியாளரு மான வாசுதேவன்பாஸ்கரன் மற்றும் முன்னாள் சர்வ தேச தடகள விளையாட்டு வீராங்கனை காயத்ரி ஆகி யோர் வழங்கினர்.

    போட்டியில் பரிசு பெற்ற அமலோற்பவம் லுார்து அகாடமி மாணவர்கள் பூவராகவன், நவீனபிரியன் ஆகியோரை, அகாடமியின் நிறுவனரும், அமலோற்பவம் பள்ளியின் தாளாளருமான லுார்துசாமி பாராட்டினர்.

    • எம்.ஐ.டி.கல்லூரியில் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் ஆன்லைன் மூலகமாக பயிற்சி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லூரி), சென்னை ஐஸ்கேல் ப்ரோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்து கொண்டது.

    எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் ஆன்லைன் மூலகமாக பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கங்கள் ஆகும்.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், ஐஸ்கேல் ப்ரோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட் ராமகிருஷ்ணன், வித்யா சந்திரசேகரன் இயக்குனர், இணை நிறுவனர் கணபதி ராமன் சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயர், மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.

    • கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் யு.கே.வி. நகரை சேர்ந்தவர் சிம்காசலம். இவரது மகள் மிசெல்லா மவுனிகா (வயது 22). பெற்றோரை இழந்த இவர் தனது மாமா கோட்டா தருமூர்த்திலு வீட்டில் தங்கியிருந்து பி.எஸ்சி. நர்சிங் 2-வது ஆண்டு படித்து வந்தார்.

    மிசெல்லா மவுனிகா குருசாம்பேட்டையை சேர்ந்த சின்னா என்பவரை காதலித்து வந்தார். கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மவுனிகா வேதனையில் இருந்து வந்தார். காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவையில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில் உலக பிரசித்திபெற்றது
    • கோவிலின் 63-வது வருட பிரமோற்சவ விழா அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதுச்சேரி:

    புதுவையில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில் உலக பிரசித்திபெற்றது. கோவிலின் 63-வது வருட பிரமோற்சவ விழா அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    யானைக்கொடி ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    விழா வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை வேளையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. வருகிற 26-ந் தேதியன்று சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாணமும், 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    31-ந் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவமும், பவுர்ணமி கடல் தீர்த்தவாரியும், வெள்ளி மூஷிக வாகன வீதி உலாவும், செப்டம்பர் 1-ந்தேதி வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. செப்டம்பர் 7-ந் தேதி ஊஞ்சல் உற்சவம், 13-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.

    • ரூ.ஒரு கோடியே 56 லட்சத்தில் கட்ட பணிகள் தொடங்கியது.
    • போக்குவரத்து கடந்த 18-ம் தேதி இரவு முதல் நிறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு- தேங்காய்த்திட்டு பகுதியை இணைக்கும் வடிகால் கால்வாய் மரப்பாலம் 100 அடி சாலையின் அடியில் செல்கிறது.

    மழை காலத்தில் தண்ணீர் தேங்கி ஏற்படும் பிரச்சி னையை சமாளிக்க இந்த வாய்க்காலை ரூ.ஒரு கோடியே 56 லட்சத்தில் கட்ட பணிகள் தொடங்கியது. புதுவை- கடலூர் பிரதான சாலையான 100 அடி சாலையில் போக்குவரத்து கடந்த 18-ம் தேதி இரவு முதல் நிறுத்தப்பட்டது.

    இப்பணி காரணமாக திங்கட்கிழமையான நேற்று மரப்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வருகிற 28-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர்.

    ஆனால் கடந்த 3 நாட்களாக பாலத்தின் ஒரு பகுதியில் உடைக்கும் பணி மட்டுமே நடந்து வருகிறது. திட்டமிட்டபடி வருகிற 28-ந் தேதிக்குள் பணிகள் முடிய வாய்ப்பே இல்லை. இதனால் ஒரு மாதத்திற்கும் மேல் இந்த பணிகள் நடை பெறும் என கூறப்படுகிறது.

    இதனால் ஒரு மாதத்திற்கு மரப்பாலம் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கும் அபாயம் உள்ளது. போக்கு வரத்தை சீரமைக்கும் வகையில் கூடுதல் போலீ சாரும் ஈடுபடுத்தப்பட வில்லை. புவன்கரே வீதி வழியாக வரும் வாகனங்களால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடலூர் சாலை-புவன்கரே வீதி சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் வரை நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    கனரக வாகனங்கள் இவ்வழியே செல்லக்கூடாது என போக்குவரத்து போலீ சார் அறிவித்திருந்தினர். ஆனால் இந்த உத்தரவை போலீசாரே கண்டு கொள்ள வில்லை.

    கனரக வாகனங்கள் வந்து திரும்ப முடியாமல் இப்பகுதியில் நெரிசல் அதிகரிக்க காரணமாகிறது. பணி நேரத்தில் குப்பை அள்ளிச்செல்லும் வாகனங்களாலும் கடுமை யான நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் போலீசாருடன் ஒவ்வொரு சந்திப்பிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    வாகனங்களை முந்திச்செல்லும்போது பொதுமக்கள் இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை, மாலை நேரத்தில் பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பெற்றோர்கள், ஊழியர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த காலத்தில் இந்த பணிகளை செய்தி ருக்கலாம். தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில் இந்த பணிகளை மேற்கொண்டி ருப்பது தவறானமான செயல் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இரவு, பகலாக இந்த பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • ஹைமாஸ் மின் விளக்குகள் எரியாமல் இருந்தது.
    • எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவுக்கு தொடர் புகார் வந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சுல்தான்பேட்டை, ஆத்து வாய்கால்பேட், மூர்த்தி நகர், பட்டாணிகளம், உத்திர வாகினிப்பேட், பெரியபேட், புதுபேட், ஒதியம்பட்டு, கொம்பாக்கம் ஆகிய பகுதி களில் பல ஆண்டுகளாக ஹைமாஸ் மின் விளக்குகள் எரியாமல் இருந்தது.

    இதுபற்றி தொகுதி எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவுக்கு தொடர் புகார் வந்தது. இதனையடுத்து சிவா எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் 70 எல்.இ.டி ஹைமாஸ் மின் விளக்குகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் மணிகண்டன், அவைத் தலைவர் ஜலால் , கபூர், ரமணன், சபரி நாதன், காளிதாஸ், மிலிட்டரி முருகன், பக்ரூத், சர்மா, ஹாஜிபாய், சிராஜிதீன், கந்தசாமி, திலகர், சக்திவேல், சுப்பிரமணி, கார்த்திகேயன், சுல்தான், அஜஸ்ரப்அலி, அரி, ரகு, அய்யனார் மற்றும் ஊர் பொது மக்கள், ஜமாத் தார்கள் கலந்துகொண்டனர்.

    ×