search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் கோவிலில் 63-வது பிரம்மோற்சவ விழா
    X

    மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.

    மணக்குள விநாயகர் கோவிலில் 63-வது பிரம்மோற்சவ விழா

    • புதுவையில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில் உலக பிரசித்திபெற்றது
    • கோவிலின் 63-வது வருட பிரமோற்சவ விழா அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதுச்சேரி:

    புதுவையில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில் உலக பிரசித்திபெற்றது. கோவிலின் 63-வது வருட பிரமோற்சவ விழா அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    யானைக்கொடி ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    விழா வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை வேளையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. வருகிற 26-ந் தேதியன்று சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாணமும், 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    31-ந் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவமும், பவுர்ணமி கடல் தீர்த்தவாரியும், வெள்ளி மூஷிக வாகன வீதி உலாவும், செப்டம்பர் 1-ந்தேதி வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. செப்டம்பர் 7-ந் தேதி ஊஞ்சல் உற்சவம், 13-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.

    Next Story
    ×