என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்-பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆவேசம்
- கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் தலைமை செயலகம் அருகே செயற்கை மணல்பரப்பு உருவாக்கினர்.
- நேரத்துக்கு ஏற்ப முகங்களை மாற்றி அரசியல் செய்யும் அரசியல்வாதி களுக்கு மீனவர்கள் இடம் தரவேண்டாம்.
புதுச்சேரி:
காலப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி, பெரிய காலப்பட்டு, சின்ன காலப்பட்டு, கணபதி செட்டிக்குளம் ஆகிய 4 மீனவ கிராமங்களிலும் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்டு ள்ளது.
இப்பிரச்சினை குறித்து மீனவ கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-
கடல் அரிப்பை தடுக்க முதல்கட்டமாக ரூ.40 லட்சத்தில் கற்கள் கொட்டப்பட்டது. மீண்டும் ரூ.35 லட்சத்தில் 2-ம் முறையாக கற்கள் கொட்டப்பட்டது. மீன்வள த்துறை அமைச்சருடன் பார்வையிட்டு ரூ.6 கோடியே 36 லட்சத்தில் மேலும் கற்கள் கொட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூ.25 கோடி செலவில் தடுப்பு பணிகள் மேற்கொள்ள திட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
தூண்டில் முள் வளைவு அமைக்க சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கு ரூ.19 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதா ரத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அனைத்துகள் பணிகளையும் செய்து வருகிறேன்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் தலைமை செயலகம் அருகே செயற்கை மணல்பரப்பு உருவாக்கினர்.
இதனால்தான் தமிழக பகுதியில் கடல் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டது. புதுவை அரசை கலந்து ஆலோசிக்காமல் தமிழ கத்தில் கற்கள் கொட்டியதால் தற்போது புதுவை நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அப்போதைய எம்.எல்.ஏ. ஷாஜகான் இந்த திட்டங்களை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
மீனவர்களின் உண்மை நிலை தெரியாமல் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் இணைந்து கபநாடகம் அரங்கேற்றி வருகின்றனர்.
4 கிராமங்களையும் காக்க தூண்டில் முள் வளைவு அமைக்கப்படும். இந்த பணியில் தொய்வு ஏற்பட்டால் மீனவர்களோடு இணைந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
நேரத்துக்கு ஏற்ப முகங்களை மாற்றி அரசியல் செய்யும் அரசியல்வாதி களுக்கு மீனவர்கள் இடம் தரவேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.






