search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மரப்பாலத்தில் மந்தமான பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
    X

    மரப்பாலத்தில் பாலம் உடைக்கும் பணி நடைபெற்று வரும் காட்சி.

    மரப்பாலத்தில் மந்தமான பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

    • ரூ.ஒரு கோடியே 56 லட்சத்தில் கட்ட பணிகள் தொடங்கியது.
    • போக்குவரத்து கடந்த 18-ம் தேதி இரவு முதல் நிறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு- தேங்காய்த்திட்டு பகுதியை இணைக்கும் வடிகால் கால்வாய் மரப்பாலம் 100 அடி சாலையின் அடியில் செல்கிறது.

    மழை காலத்தில் தண்ணீர் தேங்கி ஏற்படும் பிரச்சி னையை சமாளிக்க இந்த வாய்க்காலை ரூ.ஒரு கோடியே 56 லட்சத்தில் கட்ட பணிகள் தொடங்கியது. புதுவை- கடலூர் பிரதான சாலையான 100 அடி சாலையில் போக்குவரத்து கடந்த 18-ம் தேதி இரவு முதல் நிறுத்தப்பட்டது.

    இப்பணி காரணமாக திங்கட்கிழமையான நேற்று மரப்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வருகிற 28-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர்.

    ஆனால் கடந்த 3 நாட்களாக பாலத்தின் ஒரு பகுதியில் உடைக்கும் பணி மட்டுமே நடந்து வருகிறது. திட்டமிட்டபடி வருகிற 28-ந் தேதிக்குள் பணிகள் முடிய வாய்ப்பே இல்லை. இதனால் ஒரு மாதத்திற்கும் மேல் இந்த பணிகள் நடை பெறும் என கூறப்படுகிறது.

    இதனால் ஒரு மாதத்திற்கு மரப்பாலம் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கும் அபாயம் உள்ளது. போக்கு வரத்தை சீரமைக்கும் வகையில் கூடுதல் போலீ சாரும் ஈடுபடுத்தப்பட வில்லை. புவன்கரே வீதி வழியாக வரும் வாகனங்களால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடலூர் சாலை-புவன்கரே வீதி சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் வரை நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    கனரக வாகனங்கள் இவ்வழியே செல்லக்கூடாது என போக்குவரத்து போலீ சார் அறிவித்திருந்தினர். ஆனால் இந்த உத்தரவை போலீசாரே கண்டு கொள்ள வில்லை.

    கனரக வாகனங்கள் வந்து திரும்ப முடியாமல் இப்பகுதியில் நெரிசல் அதிகரிக்க காரணமாகிறது. பணி நேரத்தில் குப்பை அள்ளிச்செல்லும் வாகனங்களாலும் கடுமை யான நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் போலீசாருடன் ஒவ்வொரு சந்திப்பிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    வாகனங்களை முந்திச்செல்லும்போது பொதுமக்கள் இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை, மாலை நேரத்தில் பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பெற்றோர்கள், ஊழியர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த காலத்தில் இந்த பணிகளை செய்தி ருக்கலாம். தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில் இந்த பணிகளை மேற்கொண்டி ருப்பது தவறானமான செயல் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இரவு, பகலாக இந்த பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×