என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் என்.ஆர்.ஐ. இடங்கள் விற்பனை
- சி.பி.ஐ. இயக்குனரிடம் வையாபுரி மணிகண்டன் புகார்
- அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் டெல்லி சி.பி.ஐ. இயக்கு னருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை கதிர்காமம் அரசு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரிக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் கொள்முதல் செய்வது வரை மிகப்பெரும் முறைகேடுகள் நடந்து வருகிறது.
மருத்துவ கல்லூரியில் தற்காலிக பணி நியமனம் செய்வதிலும் எந்த நியமன விதிகளும் கடைபிடிக்கப்படு வதில்லை. நீட் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களை சேர்க்காமல் புறக்கணி க்கின்றனர்.
சுயலாப நோக்கோடும், ஆதாயம் பெற்று மருத்து வக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவகல்வியில் என்.ஆர்.ஐ. மருத்துவ இடங்களை விற்று வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ இடங்களை தாரை வார்க்கின்றனர்.
தற்போது பிரெஞ்சு வாழ் மக்கள் உள் ஒதுக்கீடு என புதிதாக விஞ்ஞானரீதி யிலான ஊழலில் இறங்கி யுள்ளனர். என்.ஆர்.ஐ.யிடம் பெற வேண்டிய சுமார் ரூ. 1 கோடிக்கும் மேலான கட்டணத்தை பெறாமல் தன்னிச்சையாக கட்டணத்தை சுமார் ரூ.4 லட்சமாக குறைக்கின்றனர்.
இதனால் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.
தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் மீது எழுந்து வரும் ஊழல் புகார்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே இனியும் தாமதிக்காமல், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மீது சி.பி.ஐ உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.






