என் மலர்
புதுச்சேரி
- தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தங்கள் வேலைவாய்ப்பு தகுதியை மாணவர்கள் பதியலாம்.
புதுச்சேரி:
புதுவை தொழிலாளர் துறை செயலர் முத்தம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்ய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைனில் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.
2022-23-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் விபரங்கள் மட்டும் கல்வி இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு வேலைவாய்ப்பகத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே புதுவை, காரைக்கால் பிராந்திய 10-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிய வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம். தொழிலாளர் துறை இணையதளத்தில் சான்றிதழ் பதிவு செய்யும் செயலி லிங்க் தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தங்கள் வேலைவாய்ப்பு தகுதியை மாணவர்கள் பதியலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
- தலைமை நீதிபதியும் ஒரு விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது
புதுச்சேரி:
புதுவை தீயணைப்பு துறையில் டிரைவராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவரின் மனைவி சுந்தரி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களின் மகன் விஷால், மன வளர்ச்சி குன்றியவர். இருப்பினும் நயினார்மண்ட பத்தில் வலு தூக்கும் பயிற்சி பெற்று வந்தார்.
உள்ளூரில் பல போட்டிகள் பரிசு பெற்ற இவர் ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
இதில் 4 வெள்ளி பதக்கம் பெற்றார். கடந்த 11-ந் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். மேலும் இரும்பு மனிதன் என்ற பட்டத்தையும் பெற்றார்.
இவரை பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். புதுவை திரும்பிய விஷாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கேள்விப்பட்ட புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், விஷாலையும், பயிற்சியாளர் பாக்யராஜையும் தனது அறைக்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தலைமை நீதிபதியும் ஒரு விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது
- திரளான பக்தர்கள் தரிசனம்
- ஸ்ரீ சீதா ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை தெபாசம்பேட் வீதி, ஸ்ரீமத் ஆழ்வார் சபையில் உள்ள ஸ்ரீ வேணுகோபால்சாமி தேவஸ்தான பிரகார வளாகத்தில் ஸ்ரீமதி ருக்மணி தேவி மண்டபத்தில், ஸ்ரீ சீதா ராமர் சன்னதியாகவும், உற்சவ மூர்த்தியாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ சீதா ராமர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஸ்ரீ சீதா ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெண் அழைப்பு நடத்தப்பட்டு திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
- நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
- நமச்சிவாயம் இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை வார்டு முல்லை நகர் சேரன் வீதியில் பழைய சாலையை மாற்றி புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுறம் வாய்க்கால் அமைக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
புதுவை நகராட்சி மூலம் பணிகள் தொடங்க பூமி பூஜை நடந்தது.நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் உதவி பொறியாளர் நமச்சிவாயம் இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்.
- வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- தி.மு.க. கோட்டக்குப்பம் நகர இளைஞரணி நிர்வாகி பிரேம் ஏற்பாட்டில் நடந்தது.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை ரவுண்டா னாவில் தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. கோட்டக்குப்பம் நகர இளைஞரணி நிர்வாகி பிரேம் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி கலந்து கொண்டு வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு சைவ உணவு, 5 விதமான பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் நகர் மன்ற உறுப்பினர்கள் வீரப்பன், சண்முகம், ஸ்டாலின்சுகுமார், சுகுமார் ஜாகிர், நாசர், பாரூக், அன்சாரி மற்றும் தி.மு.க. நகர இளைஞரணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவு
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர் பங்கஜ்குமார்ஜா, இயக்குனர் முத்துமீனா ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்த திட்டத்தின் விண்ணப்பத்துடன் ரேஷன்கார்டு, ஆதார், போட்டோ உட்பட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை துறைரீதியில் பதிவு செய்ய பல மாதமாகும். இந்த திட்டத்தை விரைவுபடுத்த அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ. க்கள் நாஜிம், கல்யாண சுந்தரம், நாக தியாகராஜன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர் பங்கஜ்குமார்ஜா, இயக்குனர் முத்துமீனா ஆகியோர் பங்கேற்றனர்.
ஒரு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யவே அரை மணிநேரம் தேவைப்படுகிறது. தேவையற்ற விதிமுறைகளை வகுத்து திட்டத்தை தாமதப்படுத்து கின்றனர் என எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அப்போது துறை இயக்குனர் முத்துமீனா, துறையில் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அவுட்சோர்சிங் மூலமாகவோ, தேசிய தகவல் மையம் அல்லது, பொது சேவை மையங்கள் மூலமாகவோ 70 ஆயிரம் விண்ணப்ப ஆவணங்களை பதிவேற்றம் செய்து பயனாளிகளுக்கான அடையாள அட்டையை விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வேண்டுகோள்
- காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது இதை எதிர்காமல் தற்போது ஆட்சியின் போது எதிர்த்து மலிவு அரசியல் செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள பெரிய மார்க்கெட் கட்டிடங்கள் 200 ஆண்டுகள் பழமையானதாகும். மார்க்கெட்டை நவீனம யமாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 55 கோடி ஒதுக்கினார்.
அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது இதை எதிர்காமல் தற்போது ஆட்சியின் போது எதிர்த்து மலிவு அரசியல் செய்கின்றனர். இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே வியாபாரிகள் எதிர்கட்சிகளின் தூண்டுதலுக்கு செவிசாய்க்காமல் பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும்.
மார்க்கெட் பகுதி தற்போது சுகாதாரமற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே 2 முறை தீ விபத்துக்குள்ளா கியுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஈரடுக்கு வாகன நிறுத்துமிடம், சுகாதார வசதியுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய கட்டுமானங்கள் அமைக்க வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
- துணை சபாநாயகர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் துணை சபாநாயகராக இருப்பவர் ராஜவேலு(64). இவருக்கு திடீ ரென தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்த டாக்டர்கள், துணை சபாநாயகரின் உடல்நிலை சீராக உள்ள தாக தெரி வித்துள்ளனர். இருப்பினும், துணை சபாநாயகர் ராஜவேலு ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதால் முழு உடல் பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுருத்தியுள்ளனர். பரிசோதனைக்கு பின் இன்னும் ஒரிரு நாளில் துணை சபாநாயகர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
- அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்
- ஒரு வருட கால போட்டித்தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கான பயிற்சியினை அளித்து வருகிறது.
புதுச்சேரி:
மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னருக்கான தேசிய வாழ்வாதார மையம் தனியார் பயிற்சி நிறுவனம் வாயிலாக ரூ.1000-ம் மாத உதவித் தொகையுடன் கூடிய ஒரு வருட கால போட்டித்தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கான பயிற்சி யினை அளித்து வருகிறது.
இந்த ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகளை போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுக்கு இலவச போட்டித்தேர்வு பயிற்சி நூல்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன், மைய ஒருங்கி ணைப்பாளர் கோட்டூர்சாமி, குளோபல் பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்க டேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- தூர்வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ.18 லட்சத்து 39 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படுகிறது.
- ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் (100 நாள் வேலை) பாகூர் தொகுதி மதிகிருஷ்ணாவரம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட புதுகுப்பத்தில் உள்ள பெரிய குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தல், மதிகிருஷ்ணாவரம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட புதுகுப்பத்தில் உள்ள சோமு குட்டையை தூர்வாரி ஆழப்படுத்துதல், மதிகிருஷ்ணாவரம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட புதுகுப்பத்தில் உள்ள ஊமைக் குட்டையை தூர்வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ.18 லட்சத்து 39 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படுகிறது.
இதேபோல் குருவிநத்தம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட பரம்படி வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்துதல், சோரியாங்குப்பம் கிராம பஞ்சாயத்து குட்பட்ட நாகம்மாள் கோவில் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல், சோரியங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி திருமண மண்டபம் முதல் தென்பெண்ணை ஆறு வரை உள்ள வாய்க்காலை தூர்வாரி ஆடப்படுத்துதல் பணிக்கு ரூ.15 லட்சத்து 94 ஆயிரத்திலும், என மொத்தம் ரூ.34 லட்சம் செலவில் பணிகள் நடைபெற உள்ளன.
இந்த பணிகளை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக பொதுமக்கள் அமைச்சரிடம் சில கேள்விகள் கேட்டனர் பொதுமக்கள் கேட்டதாவது :-
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தை 100 நாள் வழங்க வேண்டும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பொதுமக்கள் அமைச்சரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் விரைவில் ரேஷன் கடை திறக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
மேலும் புதுகுப்பத்தில் 100 நாள் வேலை திட்டத்தை துவங்குவதற்கு முன்பு அமைச்சர் பொதுமக்களை பார்த்து குஜராத்தில் பெரிய அளவில் தலைவருடைய சிலை வைக்கப்பட்டுள்ளது அந்த தலைவருடைய பெயர் கூறுபவர்களுக்கு 25 கிலோ அரிசி பரிசாக வழங்கப்படும் என்றார். அமைச்சர் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளித்த பெண்னுக்கு 25 கிலோ அரிசியை அமைச்சர் சாய் .ஜெ.சரவணன்குமார் பரிசாக வழங்கினார். இதேபோல் இருளன்சந்தை பகுதியில் மோடி குறித்து அமைச்சர் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளித்த இருளன்சந்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 25 கிலோ அரிசியை பரிசாக வழங்கினார்.
- பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.
- அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
புதுச்சேரி:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டி மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். டைல்ஸ் வேலை பார்த்து வரும் இவரது மகன் சிவராஜன் (வயது16). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார். சிவராஜன் பள்ளிக்கு செல்போனை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.
இதனால் பயந்து போன மாணவன் வீட்டுக்கு செல்லாமல், பள்ளியி லிருந்து காரைக்கால் கடற்கரைக்கு சென்றார். இந்நிலையில், சிவராஜன் உடல், காரைக்கால் முகத்துவாரத்தை ஒட்டிய, அரசலாற்று பகுதியில் மிதந்தை கண்டு அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மாணவன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தல்
- கட்டிடம் வலுவிழந்து வருவதால் ரூ.9 கோடியில் 2 கட்டமாக பழமை மாறால் புதுப்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை போலீஸ் தலைமையக அலுவலக கட்டிடத்தை புனரமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்
டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை போலீஸ் தலைமையகம் 200 ஆண்டு பழமையானது. கட்டிடம் வலுவிழந்து வருவதால் ரூ.9 கோடியில் 2 கட்டமாக பழமை மாறால் புதுப்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ரெட்டியார்பாளையம் பேக்கரியில் தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்ட- ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.
போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து விடக்கூடாது என அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டியுள்ளேன்.
அனுமதியின்றி இயங்கும் சுற்றுலா படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர காவல்பிரிவுக்கு தேவையான படகுகள் வாங்கவும், பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






