என் மலர்
புதுச்சேரி
- மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டனர்.
- கோதண்டபாணி, கலிவரதன், கலிமுல்லா, ஜபருல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில திமுகவுக்கு 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டனர். அடுத்த கட்டமாக கழகத்தின் 23 அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைமைக் கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.
புதுவை மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பரிந்துரையின்படி, முதல் கட்டமாக இளைஞர் அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து மீனவர் அணிக்கு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று புதுவை மாநில இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஒப்புதலுடன், கழக இலக்கிய அணிச் செயலாளர், வி.பி.கலைராஜன் அறிவித்துள்ளார்.
இதன்படி, புதுவை மாநில இலக்கிய அணித் தலைவராக கலைமாமணி ராஜா, துணைத் தலைவராக பாண்டியன், அமைப்பாளராக சீனு.மோகன்தாசு, துணை அமைப்பாளர்களாக சோமசுந்தரம், தர்மராஜா, ஆளவந்தார், கோதண்டபாணி, கலிவரதன், கலிமுல்லா, ஜபருல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் சார்பில் நடைபெற்றது.
- செவித்திறன் இயல் நிபுணர் ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்து விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி:
விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டேஷன், காரைக்கால் ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஒலியியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் துறை சார்பில் பெற்றோர்களுக்கு பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக துணைத்தலைவர் சந்திரசேகர் ஆலோசனைப்படி நடந்த இந்த முகாமில் இயக்குனர் அருணா தேவி, இணை பேராசிரியர் ரம்யா, உதவி பேராசிரியர் அருண்குமார், செவித்திறன் இயல் நிபுணர் ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த முகாமில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நீங்கள் அதிக பொருட்கள் வாங்கி இருப்பதால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் உங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினார்.
- தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமாரசாமி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கல்மண்டபத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 47). விவசாயி. இவர் ஒரு வர்த்தக செயலி மூலம் நிறைய பொருட்கள் வாங்கினார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், வர்த்தக நிறுவன மேலாளர் பேசுகிறேன் என முதலில் அறிமுகமாகி கொண்டார்.
பின்னர் நீங்கள் அதிக பொருட்கள் வாங்கி இருப்பதால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் உங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கேட்ட சில தகவல்களை குமாரசாமி கொடுத்தார். பின்னர் அவர் பரிசீலனை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி குமாரசாமி 2 தவணையாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அவர்கள் காரை அவருக்கு கொடுக்கவில்லை.
மாறாக மேலும் பணம் செலுத்தும்படி கூறினர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமாரசாமி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து குமாரசாமியிடம் ரூ.8 லட்சத்து 69 ஆயிரம் மோசடி செய்தது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்...
புதுச்சேரியை சேர்ந்தவர் ரோகிணி. தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு டெலிகிராம் செயலி மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நீங்கள் இணைய வழியில் முதலீடு செய்தால் தினந்தோறும் 10 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அவர் ரூ.6 லட்சத்து 58 ஆயிரம் முதலீடு செய்தார்.
பின்னர் அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த விமல கோபாலன் என்பவர் ரூ.55 ஆயிரமும் இழந்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய இளைஞர்கள்
- சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்கியபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
மனிதர்களால் ஆராயப்படாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
நிலவியல் லேண்டர் இறங்கும் நிகழ்வு அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் காந்தி திடலில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணக்குமார், செய்தி விளம்பத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் உட்பட பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர். சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்கியபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்தனர்.
புதுவை கல்விதுறை சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் சந்திராயன் நிலவில் இறங்கும் நேரலை ஒளிபரப்பபட்டது. இதனை பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பார்த்தார். நிலவில் சந்திராயன் கால் பதித்த போது அங்கிருந்த மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பாண்டிமெரீனாவிலும் எல்.இ.டி. திரையில் நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அங்கு மூவர்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் நிகழ்வை கண்டு -கைதட்டி ஆரவாரம் செய்தனர். தேசியக் கொடியை ஏந்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது.
இதேபோல் புதுவை நகர பகுதி மட்டுமல்லாது கிராமங்கள் தோறும் பல்வேறு இளைஞர், சமூக அமைப்புகள் சார்பில் நிலவில் சந்திரயான் இறங்கிய நிகழ்வு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கிராம சாலைகளில் தேசிய கொடியுடன் இளைஞர்கள் உலா வந்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
- மருத்துவ அதிகாரி டாக்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
- மாரத்தான்போட்டியில் சுமார் 100 செவிலியர் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் செவிலியர் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் தேசிய எய்டஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எய்ட்ஸ் விழிப்பு ணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் முத்தமிழ் செல்வி, திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
போலீஸ் குழு ஆம்புலன்ஸ் குழு பங்கேற்றனர். டாக்டர் சபரி ராஜன், நர்சு ஜெயபிரதீப், செவிலியர் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பா ளர் சக்திபிரியா, உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார். மற்றும் பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மாரத்தான்போட்டியில் சுமார் 100 செவிலியர் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செவிலியர் கல்லூரி வளாகம் வரை மாரத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.
முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியை சக்திபிரியா செய்திருந்தார்.
- போக்குவரத்து போலீசாரை நிறுத்தி கண்காணிக்க பொது மக்கள் வலியுறுத்தல்
- 10 நிமிடத்துக்கு மேலாக கேட் மூடப்படுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமபடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் மிகப் பிரதான சாலையாக கடலூர்-புதுவை சாலை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன. இந்த சாலையில் கோர்ட்டு அருகே ெரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தினமும் காலை, மதியம், மாலை என அடிக்கடி பல ெரயில்கள் செல்கின்றன. குறிப்பாக புதன்கிழமையில் டெல்லி யில் இருந்து புதுவைக்கும், புதுவையில் இருந்து மற்ற பல இடங்களுக்கும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு ெரயில்கள் செல்வதின் காரணமாக அடிக்கடி ெரயில்வே கேட் மூடப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் 10 நிமிடத்துக்கு மேலாக கேட் மூடப்படுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமபடுகின்றனர்.
இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் காரணமாக காலை வேளையில் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர்.
வேலைக்கு செல்பவர்க ளும் தாமதமாக செல்லக் கூடிய நிலை உள்ளது. அதோடு அவசர வேலைக் கும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை.
இது ஒரு புறம் இருக்க ரெயில் கேட் வழியாக வருகின்ற இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் இரு சக்கர வாகனங்களை ரெயில்வே கேட் இடுக்கின் வழியாக உள்ளே நுழைந்து ெரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.
பள்ளி மாணவர்களும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடு கின்றனர். இச்செயலால் ெரயிலில் அடிபட்டு விபத்து க்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே இவை எல்லா வற்றையும் கருத்தில் கொண்டு புதுவை அரசு இந்த பகுதியில் சுரங்கப் பாதையோ அல்லது மேம் பாலமோ அமைத்து தந்தால் இதுபோன்ற சிரமத்தை குறைக்கலாம் என பொது மக்கள் கருதுகிறார்கள்.
இதற்கிடையே மரப் பாலம் 100 அடி ரோட்டில் பாலம் செப்பனிடும் பணி நடைபெறுவதால் அவ்வழியே வாகனங்கள் அனுமதிகப்பட வில்லை. இதனால் அனைத்து வாகன ங்களும் புதுவை-கடலூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. தற்போது புதுவை-கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
8 மணி அளவில் முதலியார் பேட்டை ெரயில்வே கேட் அருகே 1½ மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதியடைந்ததோடு மன உளைச்சலுக்கும் ஆளாகினர். ரெயில்வே கேட் மூடப்பட்ட பின்னர் கடலூர் நோக்கி செல்லும் வாகனங்களும், 2 வழிசாலை களிலும் அடைத்து க்கொண்டு நிற்கிறார்கள். இதனால் ரெயில்வே கேட் திறந்த பின்னர் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுற சாலையிலும் வாகனங்கள் மறித்து நிற்பது போல் வரிசையாக முண்டியடித்து நிற்கின்றனர். இதனால் எந்த பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கிறது.
பைக்குகள் மட்டுமின்றி கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களும் எதிர் நிலையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் ரெயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் போக்குவரத்து போலீசாரை அங்கு நிறுத்தி வாகனங்களை ஒழுங்கு படுத்தி நிற்க வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஆம்னி பஸ்கள், டாக்சிகள், லோடுகேரியர் என 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டது.
- இனி வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. புதுவை வடக்கு, கிழக்கு போக்குவரத்து எஸ்.பி. மாறன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் செந்தில், கீர்த்திவர்மன் தலைமையி லான போலீசார் முருங்கப்பாக்கம், நயினார்மண்டபம், லாஸ்பேட்டை பகுதியில் முக்கிய வீதிகளில் நிறுத்தி யிருந்த வாகனங்களை அகற்றினர்.
புதுவை-முதலி யார்பேட்டை கடலூர் சாலை, உப்பளம் அம்பேத்கர் சாலையில் சாலையோரம் நிறுத்த ப்பட்டிருந்த டிராவல்ஸ் வாகனங்கள், ஆம்னி பஸ்கள், டாக்சிகள், லோடுகேரியர் என 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டது.
பொதுமக்ளுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களுக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டது. இனி வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
- தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- துணை தலைவர்கள் முனுசசாமி, ஆனந்தன், செயலாளர்கள் ராஜகோபால், ரோலண்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை, காரைக்கால், ஏனாம் அரசு சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கவுரவ தலைவர் சேஷாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சங்க தவைர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முருகன், பொருளாளர் லூர்துமரியநாதன், துணை பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் முனுசசாமி, ஆனந்தன், செயலாளர்கள் ராஜகோபால், ரோலண்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பணிநிரந்தரம், சம்பள உயர்வு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, போராட்டத்துக்கு கவர்னர், முதலமைச்சர் தீர்வு காணாவிட்டால் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின்படி வரும் செப்டம்பர் 4ம் தேதி சுகாதாரத்துறை தலைமை அலுவலகம் முற்றுகை, 11ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுதல், 11ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
- புதுவை அரசை கண்டித்து நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாநில குழு உறுப்பினர் சரவணன் தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
புதுச்சேரி:
நெல்லிதோப்பு தொகுதி இளைஞர் பெருமன்றம் சார்பில் இடிக்கப்பட்ட மீன் மார்க்கெட் கட்டிடத்தை கட்டி தராத புதுவை அரசை கண்டித்து நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளைஞர் மன்ற தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு தொகுதி தலைவர் கோபி, தொகுதி குழு உறுப்பினர்கள் சிவா, ரூவியர்,ஆனந்தகுமார், பாலா, பிரசாந்த் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு தொகுதி செயலாளர் சதீஷ் பெருமான்,
ம ாநில குழு உறுப்பினர் சரவணன் தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
- மோட்டார் சைக்கிள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் போது அனல் காற்றுடன் தூசி பறக்கிறது.
- இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் - விழுப்புரம் 4 வழி சாலையில் எம்.என். குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 17 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை போடப்பட்டு வருகின்றது. இந்த புதிய சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் போது அனல் காற்றுடன் தூசி பறக்கிறது.
சாலை கட்டமைப்பு மேம்படு த்தப்பட்டு வரும் நிலையில், சாலையின் 2 புறமும் மரங்கள் இல்லாததால், அனல் வீசும் சாலையாக மாறி வருகின்றது.
இதனால் அவ்வழியாக பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தி ற்கு உள்ளாகிவருகின்றனர். கண்டமங்கலம் ெரயில்வே கேட் பகுதி, திருவண்டார் கோவில் பஸ் நிறுத்த பகுதி, திருபுவனை 4 முனை சந்திப்பு, மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பு பகுதிகளில் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் ஒரு வழி பாதையில் செல்கிறது.
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைக்காக ஏற்படுத்தப்படும் திடீர் பள்ளங்களால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மரண பயத்தில் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
- நிர்வாகிகளுடன் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
- மாவட்டம் மகளிர் அணி தலைவி வல்லி, கார்த்தி கேயன், ஆனந்தன், வெங்கடேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
சந்திராயன்-3 நிலவில் தரையிறங்கியதை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் பா.ஜனதா கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
வெற்றி கொண்டா ட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டை தொகுதி அய்யனார் கோவில் அருகில் நிர்வாகி களுடன் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பா.ஜனதா மாநில செய லாளர் லதா உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஊடகப்பிரிவு மாநில அமைப்பாளர் குருசங்கரன், குமரன் நகர் கேந்திர பொறுப்பாளரும் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செ யலாளர் சீனிவாச பெருமாள், லாஸ்பேட்டை தொகுதி பொதுச்செயலாளர் ஆறுமுகம், உழவர்கரை மாவட்டம் மகளிர் அணி தலைவி வல்லி, கார்த்தி கேயன், ஆனந்தன், வெங்கடேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
- மருத்துவ பணியாளர்கள், உபக ரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் ஏற்படுத்தாமல் உள்ளதும் தெரியவந்தது.
புதுச்சேரி:
வில்லியனூரில் ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் 4 ஆயிரம் சதுர அடியில் தரைதளம் உள்ளிட்ட 4 மாடி கட்டிடங்களுடன் ஆயுஷ் மருத்துவமனை கட்டப்பட்டு ள்ளது. ஜனாதிபதி கடந்த 7-ந் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் வில்லியனூரில் இயங்கி வந்த ஆயுர்வேதா கிளை மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்களை கொண்டு ஆயுஷ் மருத்துவ மனை இயக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆயுஷ் மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
அப்போது, பணியில் இருந்து ஆயுர்வேத பிரிவின் நோடல் அதிகாரி டாக்டர் பத்மவதம்மா, மருத்துவ அதிகாரிகள் ஜீவானந்த், முத்துலட்சுமி ஆகியோரிடம் மருத்துவமனை இயக்கம், நோயாளிகளின் வருகை, மருந்தகத்தில் விநியோ கிக்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அனைத்து தளங்களையும் சென்று ஆய்வு செய்தார்.
ஆனால், ஆயுர்வேத கிளினிக்காக செயல்பட்டதை ஆயுஷ் மருத்துவமனைக்கு மாற்றி உள்ளதும், ஆயுஷ் மருத்துவமனைக்கு என்று டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், உபக ரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் ஏற்படுத்தாமல் உள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து தமது வேதனையை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா மருத்துவமனைக்கு தேவை யான டாக்டர்கள், பணியாளர்கள், ஆம்புலன்ஸ், ஈ.சி.ஜி, எக்ஸ்.ரே, ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி ஆயுஷ் மருத்துவமனை முழு வீச்சில் இயங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.






