என் மலர்
நீங்கள் தேடியது "railway gate closing"
- போக்குவரத்து போலீசாரை நிறுத்தி கண்காணிக்க பொது மக்கள் வலியுறுத்தல்
- 10 நிமிடத்துக்கு மேலாக கேட் மூடப்படுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமபடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் மிகப் பிரதான சாலையாக கடலூர்-புதுவை சாலை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன. இந்த சாலையில் கோர்ட்டு அருகே ெரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தினமும் காலை, மதியம், மாலை என அடிக்கடி பல ெரயில்கள் செல்கின்றன. குறிப்பாக புதன்கிழமையில் டெல்லி யில் இருந்து புதுவைக்கும், புதுவையில் இருந்து மற்ற பல இடங்களுக்கும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு ெரயில்கள் செல்வதின் காரணமாக அடிக்கடி ெரயில்வே கேட் மூடப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் 10 நிமிடத்துக்கு மேலாக கேட் மூடப்படுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமபடுகின்றனர்.
இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் காரணமாக காலை வேளையில் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர்.
வேலைக்கு செல்பவர்க ளும் தாமதமாக செல்லக் கூடிய நிலை உள்ளது. அதோடு அவசர வேலைக் கும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை.
இது ஒரு புறம் இருக்க ரெயில் கேட் வழியாக வருகின்ற இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் இரு சக்கர வாகனங்களை ரெயில்வே கேட் இடுக்கின் வழியாக உள்ளே நுழைந்து ெரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.
பள்ளி மாணவர்களும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடு கின்றனர். இச்செயலால் ெரயிலில் அடிபட்டு விபத்து க்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே இவை எல்லா வற்றையும் கருத்தில் கொண்டு புதுவை அரசு இந்த பகுதியில் சுரங்கப் பாதையோ அல்லது மேம் பாலமோ அமைத்து தந்தால் இதுபோன்ற சிரமத்தை குறைக்கலாம் என பொது மக்கள் கருதுகிறார்கள்.
இதற்கிடையே மரப் பாலம் 100 அடி ரோட்டில் பாலம் செப்பனிடும் பணி நடைபெறுவதால் அவ்வழியே வாகனங்கள் அனுமதிகப்பட வில்லை. இதனால் அனைத்து வாகன ங்களும் புதுவை-கடலூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. தற்போது புதுவை-கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
8 மணி அளவில் முதலியார் பேட்டை ெரயில்வே கேட் அருகே 1½ மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதியடைந்ததோடு மன உளைச்சலுக்கும் ஆளாகினர். ரெயில்வே கேட் மூடப்பட்ட பின்னர் கடலூர் நோக்கி செல்லும் வாகனங்களும், 2 வழிசாலை களிலும் அடைத்து க்கொண்டு நிற்கிறார்கள். இதனால் ரெயில்வே கேட் திறந்த பின்னர் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுற சாலையிலும் வாகனங்கள் மறித்து நிற்பது போல் வரிசையாக முண்டியடித்து நிற்கின்றனர். இதனால் எந்த பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கிறது.
பைக்குகள் மட்டுமின்றி கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களும் எதிர் நிலையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் ரெயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் போக்குவரத்து போலீசாரை அங்கு நிறுத்தி வாகனங்களை ஒழுங்கு படுத்தி நிற்க வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






