என் மலர்
புதுச்சேரி
- போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
- டெல்லி, மும்பை நகரங்களுக்கு சென்றபோது நட்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அண்ணா சாலை யில் உள்ள செல்போன் கடைக்கு சில நாட்களுக்கு முன் 2 பேர் வந்தனர்.
கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன்களை குறைவான விலையில் தருவதாக தெரிவித்தனர். சந்தேக மடைந்த கடைக்காரர் செல்போன் பெட்டியை திறந்துபார்த்தபோது சீனா தயாரிப்பு போனை வைத்திருந்தது தெரியவந்தது.
கடைக்காரர் ஒருவரை மட்டும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். விசா ரணையில் பிடிபட்டவர், கேரளா மாநிலம் பாலக்காடை சேர்ந்த உமரூல் பரூக்(28) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போன், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசா ரணையின் அடிப்படையில் தப்பியோடிய பாலக்காடை சேர்ந்த முகமது ஷூஹைப்பு(26), அவரின் நண்பர்கள் உத்திரபிர தேசத்தை சேர்ந்த முசையித் (30), டாலிப் சவுத்ரி, ஜிஸ்அன் சௌத்ரி, காஷிப் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் உமர்பாரூக், காஷூப், ஷூஹைப்பு ஆகியோரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில், அனைவரும் ஜவுளி உட்பட பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தனர். டெல்லி, மும்பை நகரங்களுக்கு சென்றபோது நட்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது போலி செல்போன்களை ஐபோன் எனக்கூறி வியாபாரம் செய்ய திட்டமிட்டனர். அதன்படி தமிழகம் உட்பட பல இடங்களில் மோசடியில் இறங்கியது தெரியவந்தது.
இந்த வழக்கில் மேலும் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் தகவலின்பேரில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 போலி ஐபோன், 35 போலி ஐபோன் ஏர்பாட், 15 போலி புளூடூத் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணைக்கு பின் குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய போலீசார் விசா ரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
- அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் இப்பணியை தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது சரிபார்ப்பதை தேசிய தலைமையில் அறிவுறுத்தலின்படி தொடங்கி உள்ளனர்.
அதன் படி லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.
லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் தொடங்கிய இந்நிகழ்ச்சியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் லதா உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் அலுவலக செயலாளர் கவுரிசங்கர், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, லாஸ்பேட்டை தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், கார்த்திகேயன், திருமால், செல்வாஸ் அசோகன், விஜய பூபதி, மணிமேகலை, ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது போல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் இப்பணியை தொடங்கி உள்ளனர்.
- சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் பங்குத்தந்தை அந்தோணி ரோச் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- பல்நோக்கு அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தூய இதய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பல்நோக்கு அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் ஜான் ஹில்டா தலைமை தாங்கினார். சிறப்பு சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் பங்குத்தந்தை அந்தோணி ரோச் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் கண்காட்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளிடம் தங்களது படைப்புகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்து வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.
இந்த கண்காட்சியில் சந்திரராயன்-3 வெண்கலம் நேற்று சந்திரனில் இறங்கியதை தத்துரூபமாக பேப்பர் அட்டைகளைக் கொண்டு செய்து வைத்திருந்தது பலரையும் வியக்க வைத்திருந்தது.
இதில் விண்கலம் சந்திரன், ராக்கெட் போன்ற விண்வெளியில் இருப்பது போன்று தயார் செய்து வைத்திருந்தனர். கண்காட்சியை காண தமிழக, புதுச்சேரியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு சென்றனர்.
- பால் உற்பத்தி பெருக்கம், தீவன பராமரிப்பு, கால்நடைகளுக்கான காப்பீடு பற்றி விளக்கிக் கூறினார்.
- முகாமிற்கான ஏற்பாடுகளை பல்நோக்கு ஊழியர் தம்புசாமி செய்திருந்தார் .
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண்துறை கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தில் கால்நடைகளில் இனவிருத்தி பால் உற்பத்தி பெருக்குவது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் கோர்க்காடு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவில் அருகில் நடந்தது.
முகாமை வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கரிக்கலாம் பாக்கம் அரசு கால்நடை டாக்டர்கள் ப்ரீத்தா, தாமரை செல்வி, செல்வமுத்து ஆகியோர் கறவை மாடுகளின் மேம்பாடு, பால் உற்பத்தி பெருக்கம், தீவன பராமரிப்பு, கால்நடைக ளுக்கான காப்பீடு பற்றி விளக்கிக் கூறினார்.
முகாமில் கரிக்கலாம்பக்கம், கோர்க்காடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு கால்நடை வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
இறுதியில் விவசாயிகளுக்கு கால்நடை சத்துடானிக் இலவசமாக வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை பல்நோக்கு ஊழியர் தம்புசாமி செய்திருந்தார் .
- ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு
- படடேல் சாலை வழியாக ஓடி 5 கி.மீ. தூரத்தை கடந்து அவர்கள் மீண்டும் காந்தி சிலையை அடைந்தனர்.
புதுச்சேரி:
எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்பு ணர்வை வலியுறுத்தி புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.
கடற்கரை காந்தி சிலை அருகே இந்த ஓட்டத்தை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக ஓட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரை சாலை, சுப்பையா சாலை, ரெயில் நிலையம், காந்தி வீதி, சின்ன மணிக்கூண்டு, புஸ்சி வீதி, அண்ணா சாலை, படடேல் சாலை வழியாக ஓடி 5 கி.மீ. தூரத்தை கடந்து அவர்கள் மீண்டும் காந்தி சிலையை அடைந்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் சித்ராதேவி, இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் சேதுராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் மாணவர் கவுதம் முதல் இடத்தையும், தீனதயாளன் 2-வது இடத்தையும், புகழேந்தி 3-வது இடத்தையும்பிடித்தனர். பெண்கள் பிரிவில் சோனாலி முதல் இடத்தையும், தமிழரசி, பிரியதர்ஷினி முறையே 2, 3-வது இடத்தை பிடித்தனர். இவர்கள் உள்பட ஆண்கள் பிரிவில் 23 பேர், பெண்கள் பிரிவில் 23 பேர் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவர்கள் மாநில அளவில் வருகிற 8-ந்தேதி நடை பெறும்மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
- பணியில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் செய்து வருகின்றனர்.
- ஆகாயத்தாமரைகள் சுழ்ந்து கொண்டு கழிவு நீரும் கலந்து வருவதால் இருப்பதால் கொசு தொல்லையால் அவதிப்பட்டும், நோய் வாய்ப்பட்டும் காணப்படுகின்றனர்.
புதுச்சேரி:
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பெரிய ஏரியில் 100 நாள் வேலை செய்து நடந்து வருகிறது.
இந்த பணியில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் மது பாட்டில்கள், முள்புதர்கள் சிதைந்து காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் அவ்வப்போது காயமடைந்து வருகின்றனர்.
இந்த ஏரியை கிருமாம்பாக்கம் கோவில் சார்பில் குத்தகை விடப்பட்டு அதிக விலைக்கு ஏலம் எடுத்து மீன் வியாபாரம் நடந்து வரும் இந்த ஏரியில் 100நாள் ஆட்களை கொண்டு ஆகாய தாமரை அகற்றுவது பலரையும் கேள்வி எழுப்ப செய்கிறது.
100 நாள் வேலைக்கு பல வாய்க்கால்கள் குளங்கள் இருந்தும் அதனை கண்டறிந்து இன்று வரை தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. கிருமாம்பாக்கம் பகுதியில் சாவடி குளம் என்னும் குளம் ஊருக்கு மத்தியில் இருந்து வருகிறது.
இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் சுழ்ந்து கொண்டு கழிவு நீரும் கலந்து வருவதால் இருப்பதால் கொசு தொல்லையால் அவதிப்பட்டும், நோய் வாய்ப்பட்டும் காணப்படுகின்றனர்.
100 நாள் வேலையில் இயந்திரத்தைக் கொண்டு ஊரக தொழிலாளர்களை கொண்டு சாவடிகுளத்தை தூர்வார வேண்டும். மேலும் பல குளங்களை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருமாம்பாக்கம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
- கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மதிய உணவு சமைப்பவர், ரொட்டிபால் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி கருவடிகுப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.
கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து ஊழியர்களின் கடமைகள், முக்கியத்துவம் குறித்தும், அவர்களின் கடின உழைப்பையும் பாராட்டி, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் சத்தியசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஸ்ரீமதுசூதன்சாய் பிறந்தநாளையொட்டி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிறு தானிய மிட்டாய் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் வரவேற்றார். கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு நன்றி கூறினார். கல்வித்துறை துணை இயக்குனர் சிவராமரெட்டி, அறக்கட்டளை தேசிய மேலாளர் அல்லட்சந்தோஷ் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் தலைமையில் அதிகாரிகள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டுக்கு திரும்பிய நேரு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
- துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நலக்கு றைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு. கடந்தவாரம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரு சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டுக்கு திரும்பிய நேரு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இதனிடையே சில நாட்களாக அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நலக்கு றைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்களுக்கு முறை ப்படி கலந்தாய்வைக்கூட நடத்த முடியாமல் புதுவை அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற முடியவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்து மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு எந்த திட்டமிடலும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியது. இந்த கோப்பையும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முறைப்படி தயாரித்து அனுப்பாததால் பல்வேறு விளக்கங்களை மத்திய அரசு கோரியுள்ளது.
இதனால் இன்றுவரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. காலத்தோடு மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாமல் புதுவை மாநில மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு முறை ப்படி கலந்தாய்வைக்கூட நடத்த முடியாமல் புதுவை அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளி மாணவ ர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எண்ணம் உண்மையாக இருந்தால், சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர், அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்து சென்று அனுமதி பெற வேண்டும்.மாணவர்களின் எதிர்கால த்தோடு விளையாட கூடாது. இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற முடியவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்து மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடிக்கு பா.ஜனதா பாராட்டு
- மாநில அரசும், பா.ஜனதா அமைச்சர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-
புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவி அளிக்க வேண்டுமென மாநில அரசும், பா.ஜனதா அமைச்சர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி மத்திய அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் பல் வேறு திட்டங்கள் அரியாங்குப்பம் தொகுதியில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வீராம்பட்டினம் பார்ப்பான் குளம் 3.16 லட்சம் ரூபாயிலும், காக்காய ந்தோப்பில் நீட்டு குளம் 3.57 லட்சம் ரூபாயிலும் ஆழப்படு த்தப்பட்டு உள்ள தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
மக்களுக்கும் தரமான குடிநீர் கிடைக்க வழி செய்யப் பட்டுள்ளது. அரியாங்குப்பம் மேற்கு அருந்ததிபுரம் சுடுகாடு வாய்க்கால் 2.18 லட்சம் ரூபாயில் துார்வா ரப்பட்டு உள்ளது.
இது போல் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி யுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அரியாங்குப்பம் தொகுதி வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு, அரியாங்குப்பம் தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ராஜி தகாத வார்த்தைகளால் திட்டி தனுஷ் குமாரை தடியால் தாக்கினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
காட்டேரிக்குப்பம் அருகே சந்தை புதுக்குப்பம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சுதர்சன் இவரது மகன் தனுஷ் குமார் (வயது 18) இவருக்கும் தமிழக பகுதியான தொள்ளாமூரை சேர்ந்த ராஜீ என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனுஷ் குமார் சந்தை புதுக்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள மைதானத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த ராஜி தகாத வார்த்தைகளால் திட்டி தனுஷ் குமாரை தடியால் தாக்கினார்.
மேலும் இனிமேல் எங்களிடம் பிரச்சினை வைத்துக்கொண்டால் வெட்டிக் கொலை செய்து விடுவேன் என்று தனுஷ் குமாரை மிரட்டி விட்டு சென்றார். இந்த தாக்குதலில் காயமடைந்த தனுஷ் குமார் காட்டேரி குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தனுஷ் குமாரின் தாய் மஞ்சுமாலா காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு கவர்னர் மாளிகையில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிக்கை வெளி வருகிறது.
- இந்த கல்வி ஆண்டே மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி பெற்று அரசாணையை வெளியிட வேண்டும்
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருப ர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் அதிகார வர்க்கம் என்பது 2, 3 பிரிவு களாக பிரிந்து கிடக்கிறது. தேர்ந்தெடு க்கப்பட்ட அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு கவர்னர் மாளிகையில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிக்கை வெளி வருகிறது. இது மக்களால் தேர்ந்தெடுத்த அரசை பின்னுக்கு தள்ளுவதாகும். புதுவை தலைமை செயலாளர் நிர்வாக விவகாரத்தில் தலையிடுகிறார். குறிப்பாக அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம், பணியிட மாற்றம் போன்ற பல்வேறு விஷயங்களை முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தா மல் அரசு நிர்வாகம் செயல்படுகிறது.
இது தேவை யற்ற குழப்ப ங்களை உருவாக்கி வருகிறது. மாநில தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தலைமை செயலாளர் அரசின் அறிவுறு த்தல்களை செயல்படுத்தாமல் இருப்பதை பா.ஜனதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியான நிகழ்வாக இல்லை.
மருத்துவ கல்வியில் 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு நிறை வேற்றப்படாமல் உள்ளது. இதில் காலதாமதம் ஏன் என முதல்-அமைச்சரும், கவர்னரும் தெரிவிக்க வேண்டும்.
தலைமைச் செயலாளர் டெல்லிக்கு சென்று இந்த கல்வி ஆண்டே மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி பெற்று அரசாணையை வெளியிட வேண்டும்
புதுவை நோணாங்குப்பம், தேங்காய்திட்டு ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான ஆற்று படுகை, கடற்கரையோரங்களில் தனியார் சார்பில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகிறது. படகு விபத்தை தொடர்ந்து அதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்து ள்ளது. அங்கு சுற்றுலா துறையே படகுகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






