search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்ப்பு பணி -பா.ஜனதாவினர்  தொடங்கினர்
    X

    லாஸ்பேட்டை தொகுதியில் வாக்காளர் சரிபார்ப்பு பணியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

    வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்ப்பு பணி -பா.ஜனதாவினர் தொடங்கினர்

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் இப்பணியை தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது சரிபார்ப்பதை தேசிய தலைமையில் அறிவுறுத்தலின்படி தொடங்கி உள்ளனர்.

    அதன் படி லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.

    லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் தொடங்கிய இந்நிகழ்ச்சியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் லதா உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் அலுவலக செயலாளர் கவுரிசங்கர், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, லாஸ்பேட்டை தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், கார்த்திகேயன், திருமால், செல்வாஸ் அசோகன், விஜய பூபதி, மணிமேகலை, ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இது போல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் இப்பணியை தொடங்கி உள்ளனர்.

    Next Story
    ×