என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தூய இதய மரியன்னை பள்ளியில் நிலவில் சந்திராயன்-3 விண்கலம் உள்ளிட்ட கண்காட்சி
    X

    நிலவில் சந்திராயன்-3 விண்கலம் உள்ளிட்ட கண்காட்சி நடைபெற்ற காட்சி.

    தூய இதய மரியன்னை பள்ளியில் நிலவில் சந்திராயன்-3 விண்கலம் உள்ளிட்ட கண்காட்சி

    • சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் பங்குத்தந்தை அந்தோணி ரோச் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்‌.
    • பல்நோக்கு அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தூய இதய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பல்நோக்கு அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் ஜான் ஹில்டா தலைமை தாங்கினார். சிறப்பு சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் பங்குத்தந்தை அந்தோணி ரோச் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் கண்காட்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளிடம் தங்களது படைப்புகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்து வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.

    இந்த கண்காட்சியில் சந்திரராயன்-3 வெண்கலம் நேற்று சந்திரனில் இறங்கியதை தத்துரூபமாக பேப்பர் அட்டைகளைக் கொண்டு செய்து வைத்திருந்தது பலரையும் வியக்க வைத்திருந்தது.

    இதில் விண்கலம் சந்திரன், ராக்கெட் போன்ற விண்வெளியில் இருப்பது போன்று தயார் செய்து வைத்திருந்தனர். கண்காட்சியை காண தமிழக, புதுச்சேரியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு சென்றனர்.

    Next Story
    ×