என் மலர்
புதுச்சேரி

மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு ஓடிய கல்லூரி மாணவிகள்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
- ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு
- படடேல் சாலை வழியாக ஓடி 5 கி.மீ. தூரத்தை கடந்து அவர்கள் மீண்டும் காந்தி சிலையை அடைந்தனர்.
புதுச்சேரி:
எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்பு ணர்வை வலியுறுத்தி புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.
கடற்கரை காந்தி சிலை அருகே இந்த ஓட்டத்தை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக ஓட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரை சாலை, சுப்பையா சாலை, ரெயில் நிலையம், காந்தி வீதி, சின்ன மணிக்கூண்டு, புஸ்சி வீதி, அண்ணா சாலை, படடேல் சாலை வழியாக ஓடி 5 கி.மீ. தூரத்தை கடந்து அவர்கள் மீண்டும் காந்தி சிலையை அடைந்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் சித்ராதேவி, இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் சேதுராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் மாணவர் கவுதம் முதல் இடத்தையும், தீனதயாளன் 2-வது இடத்தையும், புகழேந்தி 3-வது இடத்தையும்பிடித்தனர். பெண்கள் பிரிவில் சோனாலி முதல் இடத்தையும், தமிழரசி, பிரியதர்ஷினி முறையே 2, 3-வது இடத்தை பிடித்தனர். இவர்கள் உள்பட ஆண்கள் பிரிவில் 23 பேர், பெண்கள் பிரிவில் 23 பேர் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவர்கள் மாநில அளவில் வருகிற 8-ந்தேதி நடை பெறும்மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.






