என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முன் விரோத தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்
    X

    கோப்பு படம்.

    முன் விரோத தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

    • ராஜி தகாத வார்த்தைகளால் திட்டி தனுஷ் குமாரை தடியால் தாக்கினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    காட்டேரிக்குப்பம் அருகே சந்தை புதுக்குப்பம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சுதர்சன் இவரது மகன் தனுஷ் குமார் (வயது 18) இவருக்கும் தமிழக பகுதியான தொள்ளாமூரை சேர்ந்த ராஜீ என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனுஷ் குமார் சந்தை புதுக்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள மைதானத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த ராஜி தகாத வார்த்தைகளால் திட்டி தனுஷ் குமாரை தடியால் தாக்கினார்.

    மேலும் இனிமேல் எங்களிடம் பிரச்சினை வைத்துக்கொண்டால் வெட்டிக் கொலை செய்து விடுவேன் என்று தனுஷ் குமாரை மிரட்டி விட்டு சென்றார். இந்த தாக்குதலில் காயமடைந்த தனுஷ் குமார் காட்டேரி குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தனுஷ் குமாரின் தாய் மஞ்சுமாலா காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×