என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.
    • கிளை செயலாளர்கள் அகிலன், சரவணன், மற்றும் முரளி, ஸ்டிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வழியாக வேளாங்கண்ணி சென்ற பக்தர்களுக்கு உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் காந்தி வீதி – ரெயில்வே நிலையம் சந்திப்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின் தலைமை தாங்கினார்.

    தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரை க்கண்ணன், தொகுதி பொருளாளர் சசிகுமார், தொண்டரணி ராஜேஷ், வீரய்யன், சேட்டு, கிளை செயலாளர்கள் அகிலன், சரவணன், மற்றும் முரளி, ஸ்டிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு
    • தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிப்பது போல் புதுவை மாநிலத்தில் பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிக்க வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் சங்க நிர்வாகிகள் சுமதி, தாயாரம்மாள், காயல்விழி, மங்கையர்கரசி, அம்சவள்ளி ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தினக் கூலியாக ரூ 300-க்குக் குறைவாக பெறும் துப்புரவு தொழிலாளர்கள் தினம் ரூ 50 அளவிற்கு பஸ்ஸிற்கு செலவு செய்கின்றனர். மீதி உள்ள கூலியில் பி,எப், இ.எஸ்.ஐ பிடித்தம் போக மிக சொற்பமான வருவாயில் குடும்பம் நடத்த சிரமப்படுகின்றனர். ஆகவே தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிப்பது போல் புதுவை மாநிலத்தில் பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிக்க வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுக்கூட்டம் நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
    • தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அரசு, மற்றும் தொகுதி, கிளைக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அரியாங்குப்பம் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.

    தொகுதி செயலாளர் சீத்தாராமன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், கோபாலகிருஷ்ணன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சிவசங்கரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில், அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க. சார்பில் வீராம்பட்டி னத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவச் சிலையை, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா,

    எம்.பி.யை அழைத்து வருகிற 5-ந் தேதி திறப்பது அன்று மாலை அரியாங்குப்பம் மெயின் ரோட்டில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன் மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார், மாநில மீனவர் அணி தலைவர் ரமேஷ், தொகுதி துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பிரதிநிதி தினகரராசு, மாநில துணை அமைப்பாளர்கள் கலிவரதன், வினோத்குமார், முகுந்தன், பாலபாரதி, சுப்பராயன், மதிவாணன், ஜபருல்லா, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அரசு, மற்றும் தொகுதி, கிளைக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சந்தேகமடைந்த குடும்பத்தினர் பழைய வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தவளகுப்பம் முத்து முதலியார் நகரில் தனியார் அப்பார்ட் மெண்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்தவர் கிருஷ்ண மூர்த்தி வயது 57) இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    கிருஷ்ண மூர்த்திக்கு சொந்தமாக அபிஷேக பாக்கத்தில் நிலம் மற்றும் வீடு உள்ளது.தினமும் காலை கிருஷ்ண மூர்த்தி நிலத்தை பார்வையிட்டு விட்டு பழைய வீட்டு தோட்டத்தில் பூக்களை பறித்து வருவது வழக்கம். அதுபோல் கிருஷ்ண மூர்த்தி பழைய வீட்டுக்கு பூப்பறிக்க சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

    இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பழைய வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ண மூர்த்தியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ண மூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது மகன் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வையாபுரி மணிகண்டன் கோரிக்கை
    • வியபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     புதுவை பெரியமார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று 4 கட்டமாக பிரித்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பெரியமார்க்கெட் வியாபாரிகள் அடங்கிய குழுவை அமைத்து வியாபாரிகளின் வசதிக்கு ஏற்ப புதிய வரைபடம் தயாரித்த பின்னர்தான் கட்டுமான பணியை தொடங்க வேண்டும்.

    கட்டுமான பணியினால் வியபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

    எனவே தற்காலிக இடமாற்றம் செய்யப்படும் கடை வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரமும், அடிக்காசு வியாபாரிகளுக்கு ரூ.25 ஆயிரமும், காலி செய்யப்படும் கடைகள், அடிக்காசு கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

    கடைகள், அடிக்காசு கடைகளை காலி செய்த நாள் முதல், கட்டுமான பணிகளை முடித்து வியாபாரிகளிடம் மீண்டும் கடைகளை ஒப்படைக்கும் வரை இந்த நிவாரணத்தை வழங்குவதாக முதல்- அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்றது.
    • போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக் குளவிநாயகர் மருத்து வக் கல்லுாரியில் என். எஸ்.எஸ்., மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

    கல்லூரி நுழைவாயிலில் தொடங்கிய போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    ஓட்டம் திருபுவனை ஆரம்ப சுகாதார மையத் தில் நிறைவு பெற்றது. போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த மலர்விழி, சங்கீதா, சத்ஹா பாத்திமா, பிரீதிகா, தனு ஸ்ரீ, கபிலன், தஸ்வந்த், ஹேமந்த்வட்டிகுட்டி, நித்திஷ் மற்றும் கிரிராஜன் ஆகியோரை, கல்லுாரி இயக்குநர் ராஜகோவிந்தன் கவுரவித்தார்.

    ஏற்பாடுகளை கல்லூ ரியின் ரெட்ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் ரினா மோகன், உடற்பயிற்சி இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிகரம் 2023 விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
    • இவ்வாண்டிலும் இவ்விருதினை தொடர்ந்து பெறுவது என்பது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது‌.

    புதுச்சேரி:

    தமிழ்நாட்டின் செய்தி தொலைக்காட்சி நிறுவனமானது சிகரம் விருது என்ற விருதுகள் வழங்கும் விழாவினை ஆண்டுதோறும் கல்வி சேவையில் சிறந்து விளங்குவோரை அங்கிகரிக்கும் நோக்கத்தோடு நடத்தி வருகிறது.

    அதன் அடிப்படையில் இவ்வாண்டிற்கான சிகரம் 2023 விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடத்தியது.இதில் பல்வேறு கல்வியாளர்கள், வல்லுநர்கள் ,கல்வி நிறுவனத்தினர் பலர் பங்கேற்றனர்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .

    இந்நிகழ்வில் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிகரம்-2023 சிறந்த உயர்கல்விக்கான விருது சிறப்பு விருந்தினர்கள் மூலம் வழங்கப்பட்டது.

    இதனை துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து துறைக்கு இவ்விருதானது 2-வது முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

    கடந்தாண்டு மற்றும் இவ்வாண்டிலும் இவ்விருதினை தொடர்ந்து பெறுவது என்பது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது.

    இவ்விருதானது எங்கள் கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி மாணவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவதற்காக மேற் கொள்ளும் நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடு களை அடிப்படையாகவும் , ஆராய்ந்து இவ்விருது வழங்கப் பட்டுள்ளது.

    இது எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. என்றார்.

    இவ்விருதினை பெறுவதற்கு தனது சிறந்த பங்களிப்பினை அளித்த துறையின் டீனுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள் வாழ்த்தினையும் பாராட்டையும் தெரி வித்தனர்.

    • முருங்கபாக்கம் அரவிந்தர் நகர் பகுதியில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
    • விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து 18 வயது நிரம்பியவர்களையும், அந்தப் பகுதிக்கு புதிதாக குடியேறியவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணிகளை மேற்கொள்ளு மாறு கட்சியின் தேசிய தலைமை, மற்றும் மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    அந்த வகையில் அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் முருங்கபாக்கம் அரவிந்தர் நகர் பகுதியில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார். பார்வையாளராக மாவட்ட செயலாளர் ராஜ் கலந்து கொண்டார் .

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுச் செயலாளர்கள் பிச்சைமுத்து, முருகவேல், தொகுதி துணை தலைவர் புகழேந்தி, கிளை தலைவர்கள் ராமமூர்த்தி, தியாகராஜன், மணி, வசந்தி, ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச நோட்டு புத்தகம் உள்ளிட்ட எழுது பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சபாபதி, மணிபாரதி, ரவி, மாலா, ராயம்மாள், சூசைராணி, உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அ.ம.மு.க. மற்றும் அன்னை தெரேசா பவுண்டேஷன் மற்றும் சரண் டிரஸ்ட் சார்பில் அன்னை தெரேசா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுச்சேரி கம்பன் நகர் பகுதியில் இயங்கி வரும் சுப்பையா அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் உள்ளிட்ட எழுது பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்நிகழ்ச்சியில் புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. இணை செயலாளரும், அன்னை தெரேசா பவுண்டேஷன் தலைவரும் சரண் டிரஸ்ட், நிறுவனருமான லாவண்யா தலைமை தாங்கி இதனை வழங்கினார்.

    சரண் டிரஸ்ட் துணைத்தலைவர் மாரி ஆறுமுகம், செயலாளர் அழகானந்தம், பொருளாளர் சரண்யா, தொகுதி செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெ. பேரவை செயலாளர் காண்டீபன், அ.ம.மு.க. மூத்த நிர்வாகி ரகுபதி, கதிர்காமம் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் லூர்து, மோகன் குமார், ழீழ்பேர், சண்முகம், முத்துப்பாண்டி, சபாபதி, மணிபாரதி, ரவி, மாலா, ராயம்மாள், சூசைராணி, உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோதலில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்.
    • தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் பாரதியார் பல்கலைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த பல்கலைக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த பல்கலைக்கூடத்தில் துறை வாரியாக முதல்வர் முதல் மாணவர்கள் வரை பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொறுப்பு முதல்வராக இருந்த போஸ் மாற்றப்பட்டார்.

    அதன்பிறகும் பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார். முகம் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாணவர்களிடையே நடந்த மோதலால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பைக் மோதியதில் காயமடைந்த பெண், சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • சம்பவ இடத்திற்குவந்த போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை சாலையில் எந்நேரமும் மக்கள் கூட்டம் இருக்கும்.

    குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருகைதந்து கடற்கரை அழகை ரசிப்பார்கள். மேலும் பலர் நடைபயிற்சியும் மேற்கொள்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு கடற்கரை சாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடியிருந்தனர். இரவு 11:15 மணிக்கு டூப்ளக்ஸ் சிலையில் இருந்து போலீஸ் தடைகளை மீறி பைக் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது.

    இந்த பைக் தாறுமாறாக ஓடி தலைமை செயலகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட பெண் மீது மோதியது.

    பைக் மோதியதில் காயமடைந்த பெண், சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சம்பவ இடத்திற்குவந்த போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் மரக்காணத்தைச் சேர்ந்த கார்த்திக் வேலு (வயது 28) என்பதும், நண்பர்களுடன் மதுகுடிக்க புதுச்சேரி வந்த இவர், போதையில் கடற்கரைச் சாலையில் பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.

    விபத்து ஏற்பட்ட போது கார்த்திக்வேலு பைக்கில் வைத்திருந்த முழு பிராந்தி பாட்டில் தரையில் விழுந்து உடைந்து கிடந்தது.

    இந்த சம்பவத்தால் கடற்கரை சாலையில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

    • இந்தியா கூட்டணி சார்பில் 2 முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
    • தேர்தலை எதிர்கொள்ளவும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.

    அகில இந்திய அளவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    இந்தியா கூட்டணி சார்பில் 2 முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளவும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் பா.ஜனதா சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும் டெல்லியில் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் துரிதப்படுத்தியுள்ளன.

    புதுவையில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போதைய எம்.பி. வைத்தி லிங்கமே மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.

    ஆளும்கட்சி கூட்டணி தரப்பில் பா.ஜனதா போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓராண்டுக்கு முன்பே புதுவை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அவர் மாதம் 2 முறை புதுவை வந்து கட்சி தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளார்.

    பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் சேர்க்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. தொகுதிதோறும் வாக்காளர் சந்திப்பு இயக்கமும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் புதுவை பா.ஜனதாவினர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். புதுவையை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட வேண்டும் என கட்சித்தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களின் பெயரும் வேட்பாளராக பேசப்படுகிறது. இதனிடையே பா.ஜனதாவை ஆதரிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. பா.ஜனதா சார்பில் எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதா கட்சி கூட்டங்களில் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பா.ஜனதாவில் செயல்பட்டு வந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தேர்தலில் வெற்றி பெற்ற பின் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் ஏற்கனவே வணிகர்கள் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தனக்கு வணிகர்கள், தான் சார்ந்த சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இது போல் பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா நிர்வாகி ஆகியோரும் விரும்புவதாக கூறப்படுகிறது.

    அவர்கள் தனித்தனியாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    ×