என் மலர்
புதுச்சேரி

மாணவர்களுக்கு அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவண்யா நோட்டு-புத்தகம் வழங்கிய காட்சி.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம்
- இலவச நோட்டு புத்தகம் உள்ளிட்ட எழுது பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சபாபதி, மணிபாரதி, ரவி, மாலா, ராயம்மாள், சூசைராணி, உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அ.ம.மு.க. மற்றும் அன்னை தெரேசா பவுண்டேஷன் மற்றும் சரண் டிரஸ்ட் சார்பில் அன்னை தெரேசா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுச்சேரி கம்பன் நகர் பகுதியில் இயங்கி வரும் சுப்பையா அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் உள்ளிட்ட எழுது பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்நிகழ்ச்சியில் புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. இணை செயலாளரும், அன்னை தெரேசா பவுண்டேஷன் தலைவரும் சரண் டிரஸ்ட், நிறுவனருமான லாவண்யா தலைமை தாங்கி இதனை வழங்கினார்.
சரண் டிரஸ்ட் துணைத்தலைவர் மாரி ஆறுமுகம், செயலாளர் அழகானந்தம், பொருளாளர் சரண்யா, தொகுதி செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெ. பேரவை செயலாளர் காண்டீபன், அ.ம.மு.க. மூத்த நிர்வாகி ரகுபதி, கதிர்காமம் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் லூர்து, மோகன் குமார், ழீழ்பேர், சண்முகம், முத்துப்பாண்டி, சபாபதி, மணிபாரதி, ரவி, மாலா, ராயம்மாள், சூசைராணி, உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






