என் மலர்
புதுச்சேரி

துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்த காட்சி.
துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ்
- முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு
- தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிப்பது போல் புதுவை மாநிலத்தில் பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிக்க வேண்டும்
புதுச்சேரி:
புதுவை துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் சங்க நிர்வாகிகள் சுமதி, தாயாரம்மாள், காயல்விழி, மங்கையர்கரசி, அம்சவள்ளி ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தினக் கூலியாக ரூ 300-க்குக் குறைவாக பெறும் துப்புரவு தொழிலாளர்கள் தினம் ரூ 50 அளவிற்கு பஸ்ஸிற்கு செலவு செய்கின்றனர். மீதி உள்ள கூலியில் பி,எப், இ.எஸ்.ஐ பிடித்தம் போக மிக சொற்பமான வருவாயில் குடும்பம் நடத்த சிரமப்படுகின்றனர். ஆகவே தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிப்பது போல் புதுவை மாநிலத்தில் பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிக்க வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story






