என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    10-ம் வகுப்பு கல்வி தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யலாம்
    X

    கோப்பு படம்.

    10-ம் வகுப்பு கல்வி தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யலாம்

    • தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தங்கள் வேலைவாய்ப்பு தகுதியை மாணவர்கள் பதியலாம்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை செயலர் முத்தம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்ய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைனில் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.

    2022-23-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் விபரங்கள் மட்டும் கல்வி இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு வேலைவாய்ப்பகத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே புதுவை, காரைக்கால் பிராந்திய 10-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிய வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம். தொழிலாளர் துறை இணையதளத்தில் சான்றிதழ் பதிவு செய்யும் செயலி லிங்க் தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தங்கள் வேலைவாய்ப்பு தகுதியை மாணவர்கள் பதியலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×