என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண்களுக்கு அரிசி மூட்டையை வழங்கிய அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார்
    X

    மோடி குறித்த கேள்விக்கு சரியான பதில் அளித்த பெண்ணுக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் அரிசி மூட்டை வழங்கிய காட்சி. அருகில் செந்தில் குமார் எம்.எல்.ஏ. உள்ளார்.

    பெண்களுக்கு அரிசி மூட்டையை வழங்கிய அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார்

    • தூர்வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ.18 லட்சத்து 39 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படுகிறது.
    • ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் (100 நாள் வேலை) பாகூர் தொகுதி மதிகிருஷ்ணாவரம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட புதுகுப்பத்தில் உள்ள பெரிய குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தல், மதிகிருஷ்ணாவரம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட புதுகுப்பத்தில் உள்ள சோமு குட்டையை தூர்வாரி ஆழப்படுத்துதல், மதிகிருஷ்ணாவரம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட புதுகுப்பத்தில் உள்ள ஊமைக் குட்டையை தூர்வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ.18 லட்சத்து 39 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படுகிறது.

    இதேபோல் குருவிநத்தம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட பரம்படி வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்துதல், சோரியாங்குப்பம் கிராம பஞ்சாயத்து குட்பட்ட நாகம்மாள் கோவில் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல், சோரியங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி திருமண மண்டபம் முதல் தென்பெண்ணை ஆறு வரை உள்ள வாய்க்காலை தூர்வாரி ஆடப்படுத்துதல் பணிக்கு ரூ.15 லட்சத்து 94 ஆயிரத்திலும், என மொத்தம் ரூ.34 லட்சம் செலவில் பணிகள் நடைபெற உள்ளன.

    இந்த பணிகளை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக பொதுமக்கள் அமைச்சரிடம் சில கேள்விகள் கேட்டனர் பொதுமக்கள் கேட்டதாவது :-

    தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தை 100 நாள் வழங்க வேண்டும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பொதுமக்கள் அமைச்சரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அமைச்சர் கூறியதாவது:-

    தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் விரைவில் ரேஷன் கடை திறக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.

    மேலும் புதுகுப்பத்தில் 100 நாள் வேலை திட்டத்தை துவங்குவதற்கு முன்பு அமைச்சர் பொதுமக்களை பார்த்து குஜராத்தில் பெரிய அளவில் தலைவருடைய சிலை வைக்கப்பட்டுள்ளது அந்த தலைவருடைய பெயர் கூறுபவர்களுக்கு 25 கிலோ அரிசி பரிசாக வழங்கப்படும் என்றார். அமைச்சர் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளித்த பெண்னுக்கு 25 கிலோ அரிசியை அமைச்சர் சாய் .ஜெ.சரவணன்குமார் பரிசாக வழங்கினார். இதேபோல் இருளன்சந்தை பகுதியில் மோடி குறித்து அமைச்சர் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளித்த இருளன்சந்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 25 கிலோ அரிசியை பரிசாக வழங்கினார்.

    Next Story
    ×