search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமைச்சர்கள் ஊழலை தவிர வேறு எதுவும் செய்வதில்லை
    X

    விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.

    அமைச்சர்கள் ஊழலை தவிர வேறு எதுவும் செய்வதில்லை

    • பரிசளிப்பு விழா லாஸ்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே நடந்தது.
    • காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா, பரிசளிப்பு விழா லாஸ்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே நடந்தது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பரிசுகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் பெத்த பெருமாள், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், பாலன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-

    புதுவையில் ரங்கசாமி ஆட்சியில் சாராய ஆறுதான் ஓடுகிறது. என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. ரூ.20 லட்சம் கொடுத்தால் யார் வேண்டு மானாலும் பார் வைக்க உரிமம் பெறலாம். இதுதான் ரங்கசாமியின் ஆட்சி.

    பல்வேறு துறைகளில் ஊழல். அமைச்சர்களும் ஊழலை தவிர வேறெதுவும் செய்வதில்லை. புதுவையில் உண்மை யான முதல்-அமைச்சர் தமிழிசைதான். டம்மி முதல்-அமைச்சர் ரங்கசாமி. நிதியில்லாமல் திட்டங்களை அறிவித்து விட்டு மாநிலத்தை குட்டிச்சு வராக்கிவிட்டார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும். அதற்கு புதுவையில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி போல சண்டை போடாமல், சமாதானமாக மோடியிடம் எதை வேண்டுமானாலும் வாங்கி வருவேன் என ரங்கசாமி கூறினார். ஆனால் மோடியிடம்கூட அவர் கேட்பதில்லை. கேட்காமலேயே எனக்கு தரவில்லை என சொல்வதில் நியாயமில்லை. அவர்களிடம் கேட்டு கொடுத்து விட்டால் உங்களை விட மக்கள் சந்தோஷப்படுவார்கள்.

    புதுவைக்கு தனி அரசு பணியாளர் தேர்வாணையம் வேண்டும். தேர்தல் வாக்குறு தியில் கூறியது என்ன ஆனது? என மத்திய மந்திரியிடம் கேட்டேன். அதை அப்போதே மறந்து விட்டோம் என அவர் கூறியது எனக்கு வேதனை யாக இருந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் மத்தியில் இருப்பவர்களிடம் தேவையானதை கேட்டு பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×