search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மனநலம் பாதித்த இளைஞர் வயிற்றில் இருந்து ஹேர்பின், பிளேடு, ஊக்குகள், எண்டோஸ்கோபி கருவி மூலம் அகற்றம்
    X

    வாலிபரின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஹேர்பின், பிளேடு, ஊக்குகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மனநலம் பாதித்த இளைஞர் வயிற்றில் இருந்து ஹேர்பின், பிளேடு, ஊக்குகள், எண்டோஸ்கோபி கருவி மூலம் அகற்றம்

    • வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
    • வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை கடும் வயிற்றுவலி காரணமாக சிகிச்சை பெற அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர்.

    அப்போது அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அந்த வாலிபரின் வயிற்றில் பிளேடு, ஹேர்பின், ஊக்குகள் குவியலாக இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.

    தொடர்ந்து அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.

    இதுகுறித்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சசிக்குமார் கூறியதாவது:-

    வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் அந்த வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனால் மறுநாளே அவர் உடல் நலத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்த செயல்முறை சவாலாக இருந்தது. குறிப்பாக வயிற்றில் இருந்த ஹேர்பின்கள், ஊக்குகள் போன்றவை உடல்நலத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதை அகற்ற அதிக தொழில்நுட்பதிறன் தேவைப்படும். அதனை எங்கள் மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்து சாதனை படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×