என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
காங்கிரசின் நீலிக்கண்ணீரை மக்கள் நம்பமாட்டார்கள்
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆவேசம்
- 50 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?
புதுச்சேரி:
புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:
முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, 2024-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 3 மாதங்களில் புதுவைக்கு மாநில அந்தஸ்தை தருவார்கள் என கூறியிருப்பது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. 50 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?
ஆட்சி காலத்தில் எந்த முன்னேற்றத்தையும் புதுவையில் ஏற்படுத்தாத நாராயணசாமி இப்போதுதான் நித்திரையில் இருந்து விழித்துக் கொண்டதுபோல பேசுகிறார். 11 முறை சட்டமன்றத்தில் தீர்மானங்கள் போடப்பட்டு அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு அதை நிறைவேற்றாத நிலையில், மாநில அந்தஸ்து பற்றி பேச நாராயணசாமிக்கு எந்த அருகதையும் இல்லை.
நாராயணசாமி, புதுவை மாநிலத்திற்கு முற்றிலும் துரோகம் இழைத்தவர், தனி கணக்கை துவங்கி மாநிலத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன் சுமையை ஏற்படுத்திய வர். சிறு, குறு தொழி ற்சாலைகள், மில்கள், ஆலைகள் மூடப்ப ட்டதற்கும் ஆயிரத்திற்கும் மேற்ப ட்டவர்கள் வேலை வாய்ப்பை இழந்ததற்கும் காரணமானவர்.
2024ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நாராயணசாமி கனவு காண்கிறார். வாரிசு அரசியல், ஓட்டு வங்கி அரசியல் செய்யும் அரசியலை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். நடைபெற இருக்கும் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு 326 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பை நடுநிலை பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
எனவே தேர்தல் வர இருக்கும் இந்த தருணத்தில் ஓட்டு வங்கிக்காக நாராயணசாமியும், வைத்திலிங்கம் எம்பியும் மாநில அந்தஸ்து பற்றி பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இனியும் அவர்களின் நீலிக்கண்ணீரை மக்கள் நம்பமாட்டார்கள்.
புதுவையில் அமைதியான முறையில் கூட்டணி அரசு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதை சீர்குலைக்கும் எந்த முயற்சியும் இனி வெற்றிபெறாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






