என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தனியார் இரும்பு கம்பெனியில் பல ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.
    • போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஒடிசாவில் இருந்து ெரயிலில் கொண்டு வரப்பட்டு கஞ்சா விற்பனை செய்த தனியார் கம்பெனி ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட னர்.

    கரிக்கலாம்பாக்கம் தனியார் இரும்பு கம்பெனி யில் வேலை பார்த்து வருபவர் ரமேஷ் மாலிக் (வயது 46).ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கரிக்கலாம்பாக்கம் தனியார் இரும்பு கம்பெனியில் பல ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா சென்றிருந்த ரமேஷ் மாலிக் அங்கிருந்து ஒரு கிலோ கஞ்சாவை ரயில் மூலம் கொண்டு வந்து முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்த பிரதாப் (25) என்பவரிடம் கொடுத்து பல மடங்கு விலைக்கு விற்பனை செய்ய கொடுத்துள்ளார்.

    பிரதாப் அவரது நண்பர்கள் வில்லியனூர் காவிரி நகரை சேர்ந்த கரண் (26), தினேஷ் ஆகிய 3 பேரும் ரமேஷ் மாலிக் கொண்டு வந்து கொடுக்கும் கஞ்சாவை வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

    குறிப்பாக சிறுவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளனர். நேற்று வில்லியனூர் காவிரி நகரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ரமேஷ் மாலிக், பிரதாப், கரண், தினேஷ் ஆகிய 4 பேரையும் வில்லிய னூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
    • மாகி மருத்துவத்துறை முனைப்புடன் செயல்பட்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தட்டாஞ்சாவடி பகுதியில் நில ஆர்ஜிதம் பற்றி விபரம் தெரியாமல் பேசுகிறார். ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் முதல்-அமைச்சராக இருந்தபோது, அந்த இடம் கையகப்படுத்த நோட்டீஸ் தரப்பட்டது. ரூ.80 லட்சம் மாநில அரசு டெபாசிட் கட்டியது.

    அந்த நோட்டீஸ் அனுப்பியதோடு சரி. 4 ஆண்டு எந்த நடவடிக்கையும் ரங்கசாமி அரசு எடுக்க வில்லை. வருவாய்த்துறை நில ஆர்ஜிதத்தை ரத்து செய்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வைத்திலிங்கம் முதல்- அமைச்சராக இருந்தபோது நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது என பொய்யான தகவலை கூறுகிறார்.

    நில உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டூ உத்தரவுப்படி நிலம் திருப்பி அளிக்கப்பட்டது. சபாநாயகர் செல்வம் தனது புகாரை நிரூபிக்க வேண்டும். அவர் சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் முதலில் ரங்கசாமிதான் மாட்டுவார். இதற்கு ரங்கசாமி பதில்கூற வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சபாநாயகர் செல்வம் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    புதுவையில் டெங்கு அதிகமாக பரவி வருகிறது. புதுவை அரசு முன்னெ ச்சரிக்கை எடுக்காத தால் 2 பெண்கள் பலியாகியுள்ளனர். அரசு மெத்தனத்தாலும், சுகாதார த்துறை காலம்கடந்த நடவடிக்கையாலும் இந்த பலி ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதித்த பின் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்கிறோம், கொசு மருந்து தெளிக்கிறோம் என்கிறார்கள். முன்னெச்சரிக்கையோடு ஏன் இந்த பணிகளை மேற்கொள்ளவில்லை?

    நிபா வைரசால் கேரளாவில் 5 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். மாகி முன்னள் அமைச்சர் வல்சராஜ், எம்.எல்.ஏ. ரமேஷ்பரம்பத் ஆகியோரை தொடர்புகொண்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

    கோழிக்கோடு நகரம் புதுவையின் மாகி பகுதிக்கு அருகில் உள்ளது. நிபா வைரஸ் கொரோனாவை விட கொடியது. மாகி மருத்துவத்துறை முனைப்புடன் செயல்பட்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் மாமூல் கேட்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. ரங்கசாமி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றவுடன், மாமூல் வசூலிக்கும் கூட்டமும் வெளியே வந்துவிடும். கட்சி பாகுபாடின்றி காங்கிரஸ், தி.மு.க., என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மாமூல் கேட்கும் கூட்டம் சட்டசபையை சுற்றி வருகிறது. கட்ட பஞ்சாயத்து செய்கின்றனர்.

    முதல்-அமைச்சர், சபாநாயகர் அந்த கூட்டத்தை சட்டசபைக்குள் நுழைய விடக்கூடாது என கூறியுள்ளனர்.

    இதைத்தான் நான் தொடர்ந்து புகார் கூறி வருகிறேன். அவர்களின் வேலையே மாமூல் வசூலி ப்பதுதான். இவர்கள் மிரட்டி பணம் பறிக்கின்றனர். புதுவையில் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழும் கூட்டம் அதிகமாக உள்ளது. காவல்துறைக்கு மாமூல் மாதந்தோறும் சரியாக செல்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு
    • ரூ.9.50 லட்சம் வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் பல்டி அடித்த கதை புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் வைத்திலிங்கமும், நாராயணசாமியும் தொடர்ந்து பொய்களை கூறி வருகின்றனர். இதனால் புதுவை சட்டமன்றத்துக்கு நில ஆர்ஜிதம் செய்த நிலத்தை திருப்பி கொடுத்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வைத்திலிங்கம்

    எம்.பி. வேண்டுகோளை ஏற்று நானே அனுப்பி வைக்கிறேன்.

    எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் இதை சட்டமன்றத்தில் விவாதிக்கவும் தயாராக உள்ளேன். என் மடியில் கனமில்லை, வழியில் எந்த பயமும் இல்லை. ஏற்கனவே ரூ.9.50 லட்சம் வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் பல்டி அடித்த கதை புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும். 9 ஆண்டாக ஆர்ஜிதம் செய்த நிலத்தை இழுத்தடித்து ஒப்படைத்தது ஏன்? என விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய உள்ளேன்.

    2018-ல் அந்த நிலம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு அனுப்ப சட்டமன்ற செயலரிடம் மனு தயாரிக்க சொல்லியுள்ளேன். சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்தி விரைவில் மனுவை தயாரிப்பார்.

    ஏற்கனவே நான் சட்டமன்றத்தில் கட்ட பஞ்சாயத்து செய்வோர் வரக்கூடாது என கூறியிருந்தேன். சமீபத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனு அளித்தனர். அதனடிப்படையில் குற்றவாளிகளை சட்டசபைக்குள் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
    • அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    பாகூர்:

    புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சை வள்ளி. இவர் புதுவையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் துப்புரவளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு இறந்து விட்டார்.

    இவர்களுக்கு கமலேஷ் (வயது 17), ரிஸ்வான் (12) 2 மகன்கள். கமலேஷ் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தான்.

    இவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனில் ப்ரீ பையர் எனும் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவும் கமலேஷ் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். இன்று காலை செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்காக தனது தாய் பச்சை வள்ளியிடம் பணம் கேட்டான். அதற்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் தருவதாக கமலேஷிடம் கூறிவிட்டு பச்சையம்மாள் வேலைக்கு சென்று விட்டார்.

    விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்தும் செல்போனில் விளையாட முடியாத வேதனையில் இருந்த கமலேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் பச்சைவள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பச்சைவள்ளி பதறி அடித்து கொண்டு வீட்டு வந்தார். அங்கு மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போனில் விளையாடுவதற்கு ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அன்பழகன் தாக்கு
    • இந்து மதத்தை அவமானப்படுத்தி பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாகும். ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேசத்தை மக்களிடம் தி.மு.க கொண்டு செல்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடந்தது.

    அ.தி.மு.க. அவை தலைவர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் கோபால், பொதுக்குழு உறுப்பினர் நாக.லோகநாதன், முன்னாள் தொகுதி தலைவர் துரைசாமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன், புதுவை மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் 500-க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு புடவை வழங்கினர்.

    தொடர்ந்து மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்த போதுதான் சாராத எந்த மதத்தையும் புன்படுத்தும் கருத்துக்களை உயிர் மூச்சு உள்ளவரை பேசாதவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியை பின்பற்றுவர் எடப்பாடி பழனிசாமி.

    பிற மதம் சுப நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை அவமானப்படுத்தி பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாகும். ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேசத்தை மக்களிடம் தி.மு.க கொண்டு செல்கிறது.

    ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு மாபெரும் இயக்கம் அ.தி.மு.க.

    புதுவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு நல்ல திட்டங்களுக்கு கோரிக்கை வைப்பதும், அதனை செயல்படுத்த போராட்டம் நடத்துவதும் அ.தி.மு.க. மட்டுமே. இதனை மக்கள் நன்கு உணர வேண்டும்.2024-ல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் மகத்தான வெற்றியை பெறும். எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக வர இருக்கிறார். அதற்கு புதுவை தொகுதி தேர்தல் வெற்றி அவசியமானது.

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    கூட்டத்தில் மாநில ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, ஆர்.வி.திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச் செயலாளர்கள் உமா, குணசேகரன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, வி.கே.மூர்த்தி, காந்தி, உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ்.சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் ,, மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உருளையன்பேட்டை தொகுதி அவைத் தலைவர் ராஜா நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை
    • பாதிப்பை நோய் மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்த முடிய வில்லை.

    புதுச்சேரி:

    ஈ.ஐ.டி. பாரி அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கி ணைப்பு குழுவினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 2022-23-ம் ஆண்டு கடுமையான வெப்பத் தாக்கத்தினால் கரும்பு பயிர்களில் புதிய நோய்கள் உருவாகி முழுவதும் வேரிலிருந்து காய்ந்து அழிந்து வருகிறது. இந்த பாதிப்பை நோய் மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்த முடிய வில்லை.

    இதனால் கரும்பு விவசாயிகளுக்கு கடுமையான விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை விவசாயிகளுக்கு இலவசமாக கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளது.

    எனவே விவசாயத்துறை வல்லுநர்களும், காப்பீடு நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து கரும்பு பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு வழங்கி கரும்பு விவசாயிகளை காத்திட வேண்டும்.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழக பகுதியில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதுபோல புதுவை கரும்பு ஆணையர் புதுவையில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய சர்க்கரை ஆலைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
    • தொகுதி முக்கிய பிரமுகர்கள் வாழுமுனி, ராமபுத்திரன், சங்கர், ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 751 குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடைபெற்றது. தொகுதி

    எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    பா.ஜ.க. அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டையைவழங்கி சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக காமராஜ் வரவேற்றார். இதில் தொகுதி முக்கிய பிரமுகர்கள் வாழுமுனி, ராமபுத்திரன், சங்கர், ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பச்சையப்பன் நன்றி கூறினார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைக்கிறார்
    • விழாவுக்கு வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகிக்கிறார். திருநாவுக்கரசு வரவேற்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை கே.ஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கழகம் சார்பில் 15-ம் ஆண்டு கைப்பந்து போட்டிகள் திருக்கனூர் போலீஸ் நிலையம் எதிரே நடக்கிறது.

     7 மணிக்கு கைப்பந்து போட்டிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கு வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகிக்கிறார். திருநாவுக்கரசு வரவேற்கிறார். செந்தில் வாழ்த்துரை வழங்குகிறார்.

    இன்றும், நாளை (ஞாயிற்றுக்கிழமையும்) நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.22 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.18 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 6-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 7-ம் பரிசாக ரூ.8 ஆயிரம், 8-ம் பரிசாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறப்பு பரிசாக ரூ.4 ஆயிரம், சிறந்த ஆட்டநாயகனுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

    பரிசுத்தொகையை ஊர் பிரமுகர்கள் வழங்கு கின்றனர். பரிசுக கோப்பைகளை விஜய் மக்கள் இயக்க மண்ணாடிப்பட்டு தொகுதி தலைவர் பாரதிதாசன் வழங்குகிறார். பந்து மற்றும் வலைகளை பரந்தாமன், மருதையன், வீரர்கள், விளையாட்டுக்கு தேவையான வசதிகளை தேவநாதன், சதீஷ், ராமு, ராதாகிருஷ்ணன், அருள்குமார் ஆகியோர் வழங்குகின்றனர். 

    • மது குடித்து கும்பல் புவன்ராஜை சரமாரியாக தாக்கியது. இதனால் புவன்ராஜ் அலறல் சத்தம் போட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வீரா உள்ளிட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் திருமண நிலைய வீதியை சேர்ந்தவர் புவன்ராஜ்(வயது26). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி கேண்டினில் சமையல் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு புவன்ராஜ் அவரது நண்பர் விஜயுடன் வீட்டின் அருகே உள்ள நெல் களத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அருகே கரியமாணிக்கம் காலனியை சேர்ந்த வீரா(20) மற்றும் அவருடன் 8 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்.

    இதனை புவன்ராஜ் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த வீரா மற்றும் அவருடன் மது குடித்து கும்பல் புவன்ராஜை சரமாரியாக தாக்கியது. இதனால் புவன்ராஜ் அலறல் சத்தம் போட்டார்.

    இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த புவன்ராஜியின் அண்ணன் பிரதீப்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

    இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    பின்னர் தாக்குதலில் காயமடைந்த புவன்ராஜை அவரது அண்ணன் பிரதீப்ராஜ் மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பிரதீப்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரா உள்ளிட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் இல்லாமல் அரசால் மக்களை நோய் நொடியின்றி எப்படி காப்பாற்ற முடியும்.?

    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெங்கு காய்ச்சலை தடுக்கவும், மற்ற காய்ச்சல்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இதர நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கும் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பது தான் உண்மையான நிலைமை.

    மேலும் சுகாதார துறையில் 100-க்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.போதுமான டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் இல்லாமல் அரசால் மக்களை நோய் நொடியின்றி எப்படி காப்பாற்ற முடியும்.?

    இப்போது மருந்து வாங்கியதில் பெரிய தவறுகளும், மோசடிகளும் நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தி ருக்கிறது. எனவே மாநில அரசின் ஆலோசனை கூட்டங்கள் பெயரளவில் இல்லாமல் மருந்துகள், சிகிச்சைகள், பணியாளர்கள் போன்ற மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தும் உண்மையான முயற்சியாக இருக்க வேண்டும். எத்தனை நோயாளிகள் வந்தாலும் அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு சுகாதாரத்துறை செயல்பட வேண்டும்.

    இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறி யுள்ளார்.

    • மூத்த நிர்வாகி பழனிசாமி அண்ணாவின் நினைவு களை எடுத்து ரைத்தார்.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் செயலாளர் அரிகரன் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி வி.மணவெளி- திருக்காஞ்சி மெயின் ரோட்டில் அண்ணா பிறந்த தினம் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன் தலைமையில் நடைபெற்றது.

    தொகுதி பிரதிநிதி சபாபதி அவைத் தலைவர்கள் தட்சிணா மூர்த்தி, என்.எஸ்.ரமேஸ், கிருஷ்ணமூர்த்தி, கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். அண்ணாவின் புகைப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மூத்த நிர்வாகி பழனிசாமி அண்ணாவின் நினைவு களை எடுத்து ரைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பாலகுரு, நடராஜன், வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், லட்சுமணன், முருகன், சவுந்திர மூர்த்தி, கோபிநாதன், புருஷோத்தமன், டைலர் முருகன், கந்தசாமி, ஜீவா, வேல்முருகன், சிவா, அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் செயலாளர் அரிகரன் நன்றி கூறினார். 

    • காய்ச்சல் முகாம்களை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளை உருவாக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா , இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    புதுவையில் டெங்கு நோய் பரவதை தடுக்கவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சமீபத்தில் தொடங்கப்பட்ட சந்திரயான் திட்டத்தை விரிவாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மருத்துவ ஊழியர்கள் அனைவருக்குமான பொதுவான ஒரே சீருடை வழங்கவும், டாக்டர்களின் வருகை பதிவினை கண்காணிக்கும் விதமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவையும் நிறுவவேண்டும்.

    நிபா தொற்று பரவி வரும் சூழலில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளை உருவாக்க வேண்டும். சேவா பக் வாடா கொண்டாட்டத்தையொட்டி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தூய்மையாக வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×