என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
    X

    கோப்பு படம்.

    தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

    • மது குடித்து கும்பல் புவன்ராஜை சரமாரியாக தாக்கியது. இதனால் புவன்ராஜ் அலறல் சத்தம் போட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வீரா உள்ளிட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் திருமண நிலைய வீதியை சேர்ந்தவர் புவன்ராஜ்(வயது26). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி கேண்டினில் சமையல் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு புவன்ராஜ் அவரது நண்பர் விஜயுடன் வீட்டின் அருகே உள்ள நெல் களத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அருகே கரியமாணிக்கம் காலனியை சேர்ந்த வீரா(20) மற்றும் அவருடன் 8 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்.

    இதனை புவன்ராஜ் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த வீரா மற்றும் அவருடன் மது குடித்து கும்பல் புவன்ராஜை சரமாரியாக தாக்கியது. இதனால் புவன்ராஜ் அலறல் சத்தம் போட்டார்.

    இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த புவன்ராஜியின் அண்ணன் பிரதீப்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

    இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    பின்னர் தாக்குதலில் காயமடைந்த புவன்ராஜை அவரது அண்ணன் பிரதீப்ராஜ் மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பிரதீப்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரா உள்ளிட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×