என் மலர்
புதுச்சேரி
- பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. முகாமை மத்திய மந்திரி நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
- கோவிந்தசாலை குடியிருப்பில் அன்னதானம், தேத்தாம்பாக்கம் திடல், கூனிச்சம்பட்டு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை பா.ஜனதாவினர் நாடு முழுவதும் கொண்டாடினர்.
புதுவையில் அனைத்து தொகுதியிலும் பா.ஜனதாவினர் அனைத்து தொகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். புதுவை அரசு மருத்துவமனையில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. முகாமை மத்திய மந்திரி நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம்செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து வில்லியனூர் பட்டாணிக்கடை செந்தில்நகரில் நலத்திட்ட உதவிகள், கரிக்கலாம் பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம், அரியாங்குப்பம் அருந்ததிபுரம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
புதுவை ரெயில்நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் அன்னதானம் நடந்தது. புதிய பஸ் நிலையத்தில் மோடி ஆட்டோ சங்கம் பெயர் பலகை திறப்பு விழா, கோவிந்தசாலை குடியிருப்பில் அன்னதானம், தேத்தாம்பாக்கம் திடல், கூனிச்சம்பட்டு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாக்களில் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜகவினர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று மாலையிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது.
- இந்து முன்னணி நிர்வாகிகளிடம் போலீசார் வலியுறுத்தல்
- கடலில் கொண்டு கரைப்பதற்கும் அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை யொட்டி புதுவை நகரப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை, இந்து முன்னணி சார்பில் 120 இடங் களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள் ளது.
சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இதேபோல் கோவில்கள் உள்பட பல் வேறு இடங்களிலும் சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
இதைத்தொடர்ந்து 5 நாட் கள் சிறப்பு பூஜைகள் செய் யப்படுகின்றன. விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அதனை கடலில் கொண்டு கரைப்பதற்கும் அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
மேலும் வருகிற 22-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்ப
டுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன் னிட்டு வீடுகளில் வைத்து வழிபட சிறிய சிலைகளின் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. மண் சிலைகள் ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதுவையில் விநாயகர் சதுர்த்திவிழா கொண்டா ட்டம் தொடர்பாக எஸ்பி சுவாதிசிங் தலைமையில் துறை அதிகாரிகள், விழா பேரவை, இந்து முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிழக்கு எஸ்.பி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எஸ்பி பக்த வச்சலம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், வெங்கடாஜலபதி, தனசெல்வம், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்கனவே அறிவித்துள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். நடனமாடக்கூடாது. பொது மக்களுக்கு தொல்லை தரக்கூடாது. அமைதியாக ஊர்வலம் நடத்த வேண்டும். சிலைகளை முன்கூட்டியே வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிலைகளை கரைக்க 3 கிரேன் பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்
- எம்.எல்.ஏ.வும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதி அக்காசாமி மடம் வீதியில் முதல்கட்டமாக ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் 175 மீட்டர் சாலை, தார் சாலையாக மாற்றப்படுகிறது.
சின்னையாபுரம் குபேர் பாடசாலை அருகில் உள்ள மண் பாதையை சிமெண்ட் சாலையாக மாற்ற ரூ.5 லட்சத்தில் பணிகள் நடக்கிறது. குமரகுரு பள்ளம் பகுதியில் உள்ள நகராட்சி சமுதாய நலக்கூடத்திற்கு இரும்புத் தகடு கூரை கொண்ட முதல் மாடி கட்டிடம் ரூ.38 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சுரேந்திரகுமார் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் குடும்பத்தினர் வழங்கினர்
- கோவிலில் மகா மண்டபம் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
புதுச்சேரி:
பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு உருளையன்பேட்டை தொகுதி அருந்ததி நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் கோவில் திருப்பணிக்காக குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.11 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவிலில் மகா மண்டபம் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை மந்திரி நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, ஜான்குமார், சிவசங்கரன், அசோக் பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்தவர் நித்தீஷ்கண்ணா(வயது25). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் சினிமா பார்த்து விட்டு பின்னர் எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே சென்று பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளை காணாமல் நித்தீஷ்கண்ணா அதிர்ச்சியடைந்தார்.
யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நித்தீஷ்கண்ணா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தி போலீஸ் ஏட்டு செல்வி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
- வீட்டு அறையில் உள் தாள்ப்பால் போட்டு கொண்டு இருந்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதி யான நேருநகர் அன்னை தெரசா நகரைச்சேர்ந்தவர் நெல்சன்-ஜெயமேரி. இவர்களுக்கு ஸ்டாலின் அஜய் (வயது28), அபினேஷ் ராஜ் (26). ஆகிய மகன்கள் இருந்தனர். ஸ்டாலின் அஜய் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தி போலீஸ் ஏட்டு செல்வி என்பவர் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு ஸ்டாலின் அஜய் சென்று வருவது வழக்கம். ஸ்டாலின் அஜய் சித்தி வீட்டில் இருக்கும் போது, வீட்டு அறையை உள்பக்க மாக மூடிகொண்டு இருப்பது வழக்கமாம்.
இந்நிலையில், ஸ்டாலின் அஜய் வேலைக்கு போகா மல், வீட்டு அறையில் உள் தாள்ப்பால் போட்டு கொண்டு இருந்தார். மாலை வரை ஸ்டாலின் அஜய் வெளியே வராததால், சித்தி மற்றும் பெற்றோர் சந்தேகம் அடைந்து, கதவை தட்டினர். திறக்காததால், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் ஸ்டாலின் அஜய் புடவையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, அபினேஷ் ராஜ் காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பிப்டிக் தெருவை சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி வசந்தா (வயது62). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே டேவிட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வசந்தாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வசந்தா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து தனிமையில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வசந்தா தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எந்திரத்தின் பெல்டில் வசந்தாவின் சேலை சிக்கி கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்தா பலத்த காயமடைந்தார்.
உடனே அங்கிருந்த மற்ற ஊழியர்கள் வசந்தாவை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகள் ஷகிலா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேசிய அளவிலான இன்னவேட்டர்ஸ் தின நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் திட்டங்களை சமர்ப்பித்தனர்.
- விழாவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பொறியாளர் தினம் இன்னவேட்டர்ஸ் தினமாக கொண்டாடப் பட்டது.
2 நாட்களாக நடை பெற்ற தேசிய அளவிலான இன்னவேட்டர்ஸ் தின நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் திட்டங்களை சமர்ப்பித்தனர்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலை வர் மற்றும் மேலாண் இயக் குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி இயக் குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். தலைமை விருந்தினராக லெனோவா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார்.
கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயகுமார், அகாடமிக் டீன்கள் அன் புமலர், அறிவழகர், கல்லூரி ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்து லட்சுமி, அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை டீன் முகம்மது யாசின், சட்ட கல்வித்துறை சந்திரசேகர், பிசியோதெரபி டீன் சிதம்பரம், பார்மஸி டீன் தனலட்சுமி மற்றும் எஸ்.எம்.வி ஸ்கூல் முதல்வர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
- கூட்டமாக மது அருந்தியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
- மது அருந்திய நபரில் ஒருவர் போலீஸ் ஏட்டு மணிமாறனை தகாத வார்த்தையால் திட்டினார்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் மற்றும் சண்முகபுரம் பகுதிகளில் உள்ள வெட்டவெளியில் மது பாட்டில்களை வாங்கி வந்து தினமும் பலர் கூட்டம் கூட்டமாக மது அருந்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் மது குடிப்பதால் மது அருந்துபவர்களுக்குள் அடிக்கடி மோதல் மற்றும் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மாந்தோப்பு சுந்தர் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அங்கு மது அருந்துபவர்களை புதுவை மற்றும் தமிழக போலீசார் விரட்டி விடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஆரோவில் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு மணிமாறன், மற்றொரு போலீஸ்காரர் தங்கமணி ஆகிய இருவரும் சாதாரண உடையில் புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதியான பூத்துறை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கூட்டமாக மது அருந்தியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் மது அருந்திய நபரில் ஒருவர் போலீஸ் ஏட்டு மணிமாறனை தகாத வார்த்தையால் திட்டினார்.
மேலும் நான் யார் என்று தெரியுமா என கூறி ஏட்டு மணிமாறனின் செல்போனை பறித்தார். உடனே மணிமாறன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து போலீசாரை வரவழைத்தார்.
இதற்கிடையில் மது அருந்திய நபர் ஏட்டு மணிமாறனை சரமாரியாக தாக்கினார். மேட்டுப்பாளையம் போலீசார் வந்தவுடன் அங்கு மது அருந்திய 3 பேரையும் வாகனத்தில் ஏற்றி ஆரோவில் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அவர்களிடத்தில் நடத்திய விசாரணையில் தலைமை காவலர் மணிமாறனை தாக்கியது காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை வீரராக பணியாற்றும் முனுசாமி என்பதும் மற்றொருவர் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படைவீரராக பணியாற்றும் வசந்த் என்பதும் இவர்களுடன் மது அருந்திய மற்றொருவர் பெட்ரோல் பங்க் ஊழியர் பார்த்திபன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஊர்க்காவல் படை வீரர் முனுசாமி தாக்கியதில் முதுகு பக்கத்தில் உள் காயம் ஏற்பட்ட ஏட்டு மணிமாறன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் ஏட்டு மணிமாறனை ஊர்க்காவல் படை வீரர் முனுசாமி தாக்கிய சம்பவம் வீடியோவாக சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
- இயற்கை சூழல் வெளிநாட்டவரையும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
- மாங்குரோவ் வேர்களை தோண்டி பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் ஆறு மற்றும் கடலும் சந்திக்கும் முகத்துவாரத்தில் மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் இயற்கையாக அமைந்துள்ளன.
2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் இருந்து இந்த பகுதியை மாங்குரோவ் காடுகள் காப்பாற்றியது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து முருங்கப்பாக்கம் ஆற்று பகுதியில் கூடுதலாக மாங்குரோவ் காடுகளை வளர்ந்து வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான 216 ஏக்கர் பரப்பளவில் மிக சிறப்பாக வளர்ந்துள்ள இந்த மாங்குரோவ் காடுகள் பறவைகளின் புகலிடமாக இருப்பதுடன் நகர பகுதியில் இருந்து நீர் வழியே வரும் பிளாஸ்டிக் குப்பைகளை கடலுக்குள் செல்லாமல் தடுத்து வருகிறது.
முருங்கம்பாக்கம் ஆற்றில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் நீர்வழிப்பாதையில் எழில் கொஞ்சும் பசுமையான மரங்கள் என இயற்கையாய் இங்கு சுற்றுலா மையம் உருவாகியுள்ளது.
இந்த இயற்கை சூழல் வெளிநாட்டவரையும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
ஆனால் இந்த இயற்கை அரணுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மண்புழு எடுக்கும் கும்பல் ஒரு மாதத்திற்கு 2 ஏக்கர் என மாங்குரோவ் வேர்களை தோண்டி பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது.
இவற்றை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.இந்த காடுகளை காக்க போராடி வரும் பியூச்சர் இண்டியா டிரஸ்ட் பொறுப்பாளர் ராஜமனோகர் தலைமையில் 5 பேர் தங்களது கோரிக்கையை நூதன முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்ட இடத்திலேயே மாங்குரோவ் காடுகளை மீட்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்து மிக பிரமாண்ட வகையில் பிரதமர் மோடி பெயர் மற்றும் தேசிய கொடியை அமைத்துள்ளனர்
மாங்குரோவ் காடுகளை மீட்டு அதற்கு பிரதமரின் பிறந்த நாளையொட்டி பிரதமரின் பெயரை வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அதற்காக 190அடி நீளமும் 45 அடி அகலமும் கொண்ட பிரதமரின் பெயரை 5 நபர்கள் இணைந்து 11 நாட்களாக உருவாக்கியுள்ளனர்.
- ஜே.சி.ஐ. ஜெகதீஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.
- பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜே.சி.ஐ. செயலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
பாண்டிச்சேரி ஜே.சி.ஐ. சார்பில் பொதுதேர்வில் முதலிடம் பிடித்த அரசு பள்ளிகள் மற்றும் விருது வழங்கும் விழா ஓட்டல் கிரீன் பேலஸ்சில் நடைபெற்றது. தேசிய தலைவர் இளையராஜா வரவேற்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவுரவ விருந்தினராக ஜே.சி.ஐ. அக்ரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த பள்ளிகளுக்கு விருதுகள் மற்றும் புலவர் ஆதிகேசவன் மற்றும் காயத்திரி, சுபலட்சுமி, முன்னாள் ஜே.சி.ஐ. தலைவர் சிவராம கிருஷ்ணன் மற்றும் ஜே.சி.ஐ. ஜெகதீஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.
விழாவில் முன்னாள் மண்டல தலைவர் பாலாஜி, முன்னாள் மண்டல அலுவலர் சித்தா னந்தன், முன்னாள் தலைவர்கள் முருகானந்தம், மோகன்தாஸ், தேவநாதன், ஆட்சி மன்ற குழு உறுப்பி னர்கள் அகிலன், செந்தில், பிரகாஷ், சந்துரு மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜே.சி.ஐ. செயலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.
- முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் நடைபெற்றது.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியளித்த மாணவர்களையும், ஆசிரி யர்களையும் பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனரும், முதல்வருமான சரோஜாபாபு தலைமை தாங்கினார்.
துணை முதல்வர் மதிவாணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னர்களாக ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் இயக்குனர் வெற்றிச்செல்வன், இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியளித்த மாணவர்களையும், ஆசிரி யர்களையும் பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினர்.
மேலும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
தொடர்ந்து மாண வர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.






