என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ. 73 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள்
    X

    அமைச்சர் லட்சுமிநாராயணன் பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    ரூ. 73 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள்

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்
    • எம்.எல்.ஏ.வும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன் தொகுதி அக்காசாமி மடம் வீதியில் முதல்கட்டமாக ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் 175 மீட்டர் சாலை, தார் சாலையாக மாற்றப்படுகிறது.

    சின்னையாபுரம் குபேர் பாடசாலை அருகில் உள்ள மண் பாதையை சிமெண்ட் சாலையாக மாற்ற ரூ.5 லட்சத்தில் பணிகள் நடக்கிறது. குமரகுரு பள்ளம் பகுதியில் உள்ள நகராட்சி சமுதாய நலக்கூடத்திற்கு இரும்புத் தகடு கூரை கொண்ட முதல் மாடி கட்டிடம் ரூ.38 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சுரேந்திரகுமார் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×