என் மலர்
புதுச்சேரி

புலவர் ஆதிகேசவனுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஜே.சி.ஐ. அக்ரி கணேஷ் ஆகியோர் விருது வழங்கிய காட்சி.
ஜே.சி.ஐ. பாண்டிச்சேரி சார்பில் புலவர் ஆதிகேசவனுக்கு விருது
- ஜே.சி.ஐ. ஜெகதீஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.
- பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜே.சி.ஐ. செயலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
பாண்டிச்சேரி ஜே.சி.ஐ. சார்பில் பொதுதேர்வில் முதலிடம் பிடித்த அரசு பள்ளிகள் மற்றும் விருது வழங்கும் விழா ஓட்டல் கிரீன் பேலஸ்சில் நடைபெற்றது. தேசிய தலைவர் இளையராஜா வரவேற்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவுரவ விருந்தினராக ஜே.சி.ஐ. அக்ரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த பள்ளிகளுக்கு விருதுகள் மற்றும் புலவர் ஆதிகேசவன் மற்றும் காயத்திரி, சுபலட்சுமி, முன்னாள் ஜே.சி.ஐ. தலைவர் சிவராம கிருஷ்ணன் மற்றும் ஜே.சி.ஐ. ஜெகதீஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.
விழாவில் முன்னாள் மண்டல தலைவர் பாலாஜி, முன்னாள் மண்டல அலுவலர் சித்தா னந்தன், முன்னாள் தலைவர்கள் முருகானந்தம், மோகன்தாஸ், தேவநாதன், ஆட்சி மன்ற குழு உறுப்பி னர்கள் அகிலன், செந்தில், பிரகாஷ், சந்துரு மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜே.சி.ஐ. செயலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.






