என் மலர்
புதுச்சேரி

பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி அரசு மருத்துமனையில் நடந்த ரத்ததான முகாமை மத்திய மந்திரி நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பா.ஜனதாவினர் கொண்டாட்டம்
- பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. முகாமை மத்திய மந்திரி நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
- கோவிந்தசாலை குடியிருப்பில் அன்னதானம், தேத்தாம்பாக்கம் திடல், கூனிச்சம்பட்டு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை பா.ஜனதாவினர் நாடு முழுவதும் கொண்டாடினர்.
புதுவையில் அனைத்து தொகுதியிலும் பா.ஜனதாவினர் அனைத்து தொகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். புதுவை அரசு மருத்துவமனையில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. முகாமை மத்திய மந்திரி நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம்செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து வில்லியனூர் பட்டாணிக்கடை செந்தில்நகரில் நலத்திட்ட உதவிகள், கரிக்கலாம் பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம், அரியாங்குப்பம் அருந்ததிபுரம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
புதுவை ரெயில்நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் அன்னதானம் நடந்தது. புதிய பஸ் நிலையத்தில் மோடி ஆட்டோ சங்கம் பெயர் பலகை திறப்பு விழா, கோவிந்தசாலை குடியிருப்பில் அன்னதானம், தேத்தாம்பாக்கம் திடல், கூனிச்சம்பட்டு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாக்களில் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜகவினர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று மாலையிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது.






