என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    கோப்பு படம்.

    வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

    வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே சென்று பின்னர் வெளியே வந்து பார்த்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்தவர் நித்தீஷ்கண்ணா(வயது25). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் சினிமா பார்த்து விட்டு பின்னர் எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே சென்று பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளை காணாமல் நித்தீஷ்கண்ணா அதிர்ச்சியடைந்தார்.

    யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து நித்தீஷ்கண்ணா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×