என் மலர்
புதுச்சேரி
- கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருபுவனை சின்னபேட் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது45). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
மது பழக்கத்துக்கு ஆளான நாகராஜன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி முத்துலட்சுமி கண்டித்த போது அவரிடம் நாகராஜன் தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த நாகராஜன் நேற்று அப்பகுதியில் உள்ள சாராயக்கடை எதிரே மயங்கி அதே இடத்தில் இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- கவர்னர் தமிழிசை ஒப்புதல்
- மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூலப்பொருள் செலவினத்திற்கான இழப்பீடு ஆகியவற்றை உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
புதுவையில் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான இடு ெபாருள் மானியத் திட்டத்தின்கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 500 லிருந்து ரூ.8 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொழிற்பயிற்சி நிறுவனங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவோருக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூலப்பொருள் செலவினத்திற்கான இழப்பீடு ஆகியவற்றை உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற, எஸ்.எஸ்.எல்.சி, ஐ.டி.ஐ, மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 லிருந்து ரூ.4, 500 ஆகவும், பட்டம், தொழில் நுட்பத்தில் பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 லிருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும், தொழில்நுட்பத்தில் பட்டம்,முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு உயர்திறன் பயிற்சி உதவித் தொகை மேல்நிலை கல்வி, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 லிருந்து ரூ.7 ஆ யிரத்து 500 ஆகவும், பட்டம், பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டு வரும் மூலப்பொருள் செலவினங்க ளுக்கான இழப்பீட்டுத் தொகை தற்போது வழங்கப்படும் நபர் ஒன்றுக்கு ரூ.300 லிருந்து ரூ.900 ஆக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உயர்வு 1.4..2023-ந் தேதி முதல் கணக்கிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.
சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.
- டி.சி.எஸ். நிறுவனத்தின் அதிகாரி கணேஷ் திருநாவுக்கரசு கலந்துரையாடினார்.
- அதிகாரி ஜெயக்குமார் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கலித்தீர்த்தாள் குப்பத்தில் இயங்கும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்.ஐ.டி.) கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் அனைத்து துறை என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுடன் நாட்டின் மிகப்பெரிய தொழிற்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தின் அதிகாரி கணேஷ் திருநாவுக்கரசு கலந்துரையாடினார்.
அப்போது அவர், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரி வதற்கான திறன்களை மேம்படுத்துவது, எதிர்கால தொழில் நுட்பத்தின் தேவை கள் குறித்து எடுத்து கூறினார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்க மளித்தார். இந்நிகழ்ச்சியினை எம்.ஐ.டி. கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் மலர்கண் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரியின் வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- 4042 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.
- ஊர் பொதுமக்கள் மற்றும் புதுவை களப் பணியாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
புதுச்சேரி:
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம் தங்கசாமி நினைவு நாளையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 4042 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.
அதன்படி புதுவை மண்ணாடிப்பட்டு கொம்யூன், கலிதீர்த்தான்குப்பம் கிராமத்தில் நாகலிங்கம் என்பவரின் சொந்தமான நிலத்தில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் புதுவை களப் பணியாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- அ.தி.மு.க. வலியுறுத்தல்
- சி.பி.ஐ விசாரித்தால் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட்டுவார் என ஒரு பொய்யான தகவலை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளது வன்மையாக கண்டிக்க த்தக்கது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதையே முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமி வாடிக்கை யாக கொண்டிருப்பதை வன்மை யாக கண்டிக்கிறோம்.
அதேபோன்று சட்டமன்ற நில ஆர்ஜித விவகாரத்தில் சி.பி.ஐ விசாரித்தால் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட்டுவார் என ஒரு பொய்யான தகவலை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளது வன்மையாக கண்டிக்க த்தக்கது.
புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்க்கின்ற விதத்தில் இருந்த குயில் தோப்பு அபகரிப்பை சி.பி.ஐ. விசாரித்தால் யார் மாட்டுவார்கள் என்பதை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உணர வேண்டும். குயில் தோப்பை அபகரித்து யார் ? என்பதை சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் உண்மை நிலை இவ்வாறு இருக்க முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் பா.ஜனதாவுக்கு துண்டு போட்டு வைத்திருப்பதாக கேவலமாக பேசி வருகிறார்.
ஆனால் உண்மையில் தி.மு.க.விடம் தனக்கு ஒரு இடத்தை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி தான் துண்டு போட்டு வைத்து எதற்கெடுத்தாலும் தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
புதுவை மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை முழுமையாக வீட்டுக்கு அனுப்பிய முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமியின் கண்மூடித்தனமான தி.மு.க. ஆதரவு பேச்சால் கொஞ்சநஞ்சம் இருக்கும் தி.மு.க.வையும் புதுவை மாநிலத்தில் முழுமையாக தொடைத்தெரியும் காலம் விரைவில் ஏற்படும்.
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
- அன்பழகன் வழங்கினார்
- கண்ணம்மா தோட்டம் ரைஸ் மில் எதிரில் பாண்டுரங்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தந்தையும், புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவருமான பாண்டுரங்கனின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையொட்டி அரியாங்குப்பம் தொகுதி அருந்ததிபுரம் கண்ணம்மா தோட்டம் ரைஸ் மில் எதிரில் பாண்டுரங்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இங்கு புதுவை மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக 1000-க்கும் மேற்ப்பட்ட ஏழைகளுக்கு சேலை உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு.மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில துணை செயலாளர்கள் பி.எல் கணேசன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, , காந்தி,
உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்,
மாநில இலக்கியணி செயலாளர் ராமசாமி,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், மாநில இலக்கியணி துணை தலைவர் தட்சணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் ராஜா, பாஸ்கரன், சிவக்குமார், நடேசன், சம்பத், கருணாநிதி, கமல்தாஸ், வேலவன், கோபால், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன் நாக.லோகநாதன்,
உழவர்கரை நகர அவைத் தலைவர் டாக்டர் கணேஷ் , உழவர்கரை நகர முன்னாள் துணை செயலாளர் விமலா ஸ்ரீ, மாநில மாணவர் அணி முன்னாள் பொருளாளர் பார்த்தசாரதி, தொகுதி தலைவர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சமூதாய மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் பலியானர்கள்.இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் புதுவை பா.ம.க. சார்பில் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவை முழுவதும் நடந்தது.
நெட்டப்பாக்கம் தொகுதி எம்.ஆர்.எப். பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் எம்.ஆர்.எப். தொழிற்சாலை நுழைவாயில் முன்பு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
பா.ம.க. மாநில அமைப்பாளர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் புருஷோத்தமன் தொகுதி தலைவர் குரு, தொகுதி செயலாளர் சிவா, எம்.ஆர்.எப். தொழிற்சங்க தலைவர் விஜயன், பண்டரிநாதன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் பெரியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், கே.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான சிவா தலைமையில் தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வன்முறை ஒழிப்பு எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், அருட்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் காமராஜர் சாலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், ஆர்.வி. திருநாவுக்கரசு மாநில பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, நாகமணி, காந்தி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி,மாநில இலக்கியணி பொருளாளர் குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். புதுவை மாநில அ.ம.மு.க. சார்பில் தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணை செயலாளர் லாவண்யா, கட்சியின் மூத்த நிர்வாகி ரகுபதி, மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் புஷ்பா, மூர்த்தி, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், பரிதிமால் கலைஞன், வேதபிரகாஷ், முருகன், செல்ல என்ற தமிழ்செல்வன், செந்தில் என்ற குமரவேலு, ஜான் மற்றும் உழவர்கரை தொகுதியை சேர்ந்த லூர்து, கில்பர்ட், மோகன்குமார், பிரவீன், சக்திவேல், சண்முகம், பிரதாப், கணேஷ், வினோத், அமலா, சரளா, உமா, சந்திரா, அமலர்சந்திரா, விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சலீம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேவபொழிலன், புதிய நீதி கட்சி சார்பில் பொன்னுரங்கம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுபோல் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் மற்றும் திராவிட அமைப்புளை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
- முன்னாள் எம்.பி ராமதாஸ் வலியுறுத்தல்
- அரசு இதை ஏற்காமல் மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து தர 5 ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
புதுவை அரசு இதை ஏற்காமல் மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நான் எம்.பி.யாக இருந்த போது மத்திய அரசிடமிருந்து ரூ.47.76 கோடியில் மீன் பிடி துறைமுகம் உருவாக்க ப்பட்டது.
துறைமுகம் கட்டி 15 ஆண்டாகிறது. இப்போது அங்கு மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதனால் படகுகளை நிறுத்த முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. மீனவர்களி டையே கடும் போட்டி நிலவி, பிரச்சினைகள் எழுகிறது. எனவே துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது அவசியம். ஏலம் விடும் கூடம், தகவல் தொடர்பு மையம், மீன்வளத்துறை அலுவலகம், படகுகள் பழுதுபார்ப்பு மையம் அமைக்கலாம். மத்திய அரசு மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த பிரமதரின் மத்திய சம்பவதா என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
100 சதவீத மத்திய அரசு மானியத்துடன் காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தலாம். புதுவைக்கு வரும் மத்திய அமைச்சர்கள் உதவ தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதை பயன்படுத்தி, புதுவை அரசு துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் கடைபிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திராகாந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசு கூறியது போல கோடி பேருக்கு வேலை தரவில்லை. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள்கூட ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், பொதுச் செயலாளர்கள் திருமுருகன், வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜா குமார், அமைப்புசாரா பிரிவு தலைவர் செல்வநாதன்,வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
- பாரதிபூங்கா, தாயவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியுடன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையை புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் புதுவையில்
குவிந்தனர். நேருவீதி, காமராஜர் சாலை, அண்ணாசாலை, காந்தி வீதி, புஸ்சி வீதி உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாரதிபூங்கா, தாயவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.






