என் மலர்

  புதுச்சேரி

  குயில்தோப்பு அபகரிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை
  X

  கோப்பு படம்.

  குயில்தோப்பு அபகரிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. வலியுறுத்தல்
  • சி.பி.ஐ விசாரித்தால் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட்டுவார் என ஒரு பொய்யான தகவலை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளது வன்மையாக கண்டிக்க த்தக்கது.

  புதுச்சேரி:

  புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

  புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதையே முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமி வாடிக்கை யாக கொண்டிருப்பதை வன்மை யாக கண்டிக்கிறோம்.

  அதேபோன்று சட்டமன்ற நில ஆர்ஜித விவகாரத்தில் சி.பி.ஐ விசாரித்தால் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட்டுவார் என ஒரு பொய்யான தகவலை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளது வன்மையாக கண்டிக்க த்தக்கது.

  புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்க்கின்ற விதத்தில் இருந்த குயில் தோப்பு அபகரிப்பை சி.பி.ஐ. விசாரித்தால் யார் மாட்டுவார்கள் என்பதை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உணர வேண்டும். குயில் தோப்பை அபகரித்து யார் ? என்பதை சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் உண்மை நிலை இவ்வாறு இருக்க முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் பா.ஜனதாவுக்கு துண்டு போட்டு வைத்திருப்பதாக கேவலமாக பேசி வருகிறார்.

  ஆனால் உண்மையில் தி.மு.க.விடம் தனக்கு ஒரு இடத்தை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி தான் துண்டு போட்டு வைத்து எதற்கெடுத்தாலும் தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

  புதுவை மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை முழுமையாக வீட்டுக்கு அனுப்பிய முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமியின் கண்மூடித்தனமான தி.மு.க. ஆதரவு பேச்சால் கொஞ்சநஞ்சம் இருக்கும் தி.மு.க.வையும் புதுவை மாநிலத்தில் முழுமையாக தொடைத்தெரியும் காலம் விரைவில் ஏற்படும்.

  இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

  Next Story
  ×