search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீனவர்களுக்கு மானியம் உயர்வு
    X

    கோப்பு படம்.

    மீனவர்களுக்கு மானியம் உயர்வு

    • கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூலப்பொருள் செலவினத்திற்கான இழப்பீடு ஆகியவற்றை உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுகுறித்து கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    புதுவையில் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான இடு ெபாருள் மானியத் திட்டத்தின்கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 500 லிருந்து ரூ.8 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

    மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொழிற்பயிற்சி நிறுவனங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவோருக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூலப்பொருள் செலவினத்திற்கான இழப்பீடு ஆகியவற்றை உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதன்படி தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற, எஸ்.எஸ்.எல்.சி, ஐ.டி.ஐ, மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 லிருந்து ரூ.4, 500 ஆகவும், பட்டம், தொழில் நுட்பத்தில் பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 லிருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும், தொழில்நுட்பத்தில் பட்டம்,முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

    சிறப்பு உயர்திறன் பயிற்சி உதவித் தொகை மேல்நிலை கல்வி, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 லிருந்து ரூ.7 ஆ யிரத்து 500 ஆகவும், பட்டம், பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டு வரும் மூலப்பொருள் செலவினங்க ளுக்கான இழப்பீட்டுத் தொகை தற்போது வழங்கப்படும் நபர் ஒன்றுக்கு ரூ.300 லிருந்து ரூ.900 ஆக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உயர்வு 1.4..2023-ந் தேதி முதல் கணக்கிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×