என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் சுகாதார ஊழியர்களுக்கு ஒரே சீருடை: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
- காய்ச்சல் முகாம்களை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா , இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுவையில் டெங்கு நோய் பரவதை தடுக்கவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சமீபத்தில் தொடங்கப்பட்ட சந்திரயான் திட்டத்தை விரிவாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ ஊழியர்கள் அனைவருக்குமான பொதுவான ஒரே சீருடை வழங்கவும், டாக்டர்களின் வருகை பதிவினை கண்காணிக்கும் விதமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவையும் நிறுவவேண்டும்.
நிபா தொற்று பரவி வரும் சூழலில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளை உருவாக்க வேண்டும். சேவா பக் வாடா கொண்டாட்டத்தையொட்டி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தூய்மையாக வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.