என் மலர்
புதுச்சேரி

வி.மணவெளியில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
- மூத்த நிர்வாகி பழனிசாமி அண்ணாவின் நினைவு களை எடுத்து ரைத்தார்.
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் செயலாளர் அரிகரன் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி வி.மணவெளி- திருக்காஞ்சி மெயின் ரோட்டில் அண்ணா பிறந்த தினம் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன் தலைமையில் நடைபெற்றது.
தொகுதி பிரதிநிதி சபாபதி அவைத் தலைவர்கள் தட்சிணா மூர்த்தி, என்.எஸ்.ரமேஸ், கிருஷ்ணமூர்த்தி, கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். அண்ணாவின் புகைப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மூத்த நிர்வாகி பழனிசாமி அண்ணாவின் நினைவு களை எடுத்து ரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பாலகுரு, நடராஜன், வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், லட்சுமணன், முருகன், சவுந்திர மூர்த்தி, கோபிநாதன், புருஷோத்தமன், டைலர் முருகன், கந்தசாமி, ஜீவா, வேல்முருகன், சிவா, அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் செயலாளர் அரிகரன் நன்றி கூறினார்.






