என் மலர்
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நகையை பறித்து சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.
இவருடைய மகன் சுதர்சன் நேற்று அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மடவார்வளாகம் அய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி புறப்பட்டார்.
சுதர்சனை வழியனுப்பு வதற்காக அவருடைய தாய் சுமதி மற்றும் அவரது சகோதரி சாந்தி ஆகியோர் கோவிலுக்கு சென்றனர். இருவரும் சுதர்சனை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கோலப்பொடி தயாரிக்கும் மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் சுமதி அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் ஹெல் மெட் மற்றும் முககவசம் அணிந்திருந்ததால் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களில் அவர்களது முக அடையாளம் சரிவர தெரிய வில்லை.
நகையை பறிகொடுத்த சுமதி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்.
சிவகாசியில் செல்போன் டவரில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி
சிவகாசி ரிசர்வ் லைன் முத்துராமலிங்க காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பரது மகன் சண்முக சதீஷ் (வயது 20) இவர் இதே பகுதியில் உள்ள கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்தார்.
நேற்று இரவு ஹவுசிங் போர்டு அருகில் உள்ள செல்போன் டவர் அருகில் சண்முக சதீஷ் மர்மமான முறையில் கால் உடைந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முக சதீஷின் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரியில் படித்துக் கொண்டே சண்முக சதீஷ் சிவகாசியில் உள்ள ஒரு ஓட்டலில் பகுதி நேர வேலைக்கு சென்று வந்துள்ளார்.வேலை பார்த்த சம்பளத்தை அவர் வீட்டில் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தாக தெரிகிறது.
இதில் விரக்தியடைந்த சண்முக சதீஷ் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசில் மாணவரின் தந்தை சுந்தர்ராஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சிவகாசி மாநகராட்சி பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியினர் ஆர்வமாக உள்ளனர்.
சிவகாசி:
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது அருகில் இருந்த திருத்தங்கல் நகராட்சியை சிவகாசியோடு இணைத்து புதிய மாநகராட்சி தொடங்கப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை அதிகாரிகள் 48 வார்டுகளாக பிரித்துள்ளனர். இதில் திருத்தங்கல் பகுதியில் 24 வார்டுகளும், சிவகாசி பகுதியில் 24 வார்டுகளும் உள்ளது.
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் ஆதிதிராவிட மக்கள் போட்டியிட வசதியாக 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 4 வார்டுகள் பெண்களுக்கும், 3 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 வார்டுகள் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் 21 வார்டுகள் பெண்கள் (பொது) என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் எந்தெந்த வார்டுகள் யாருக்கு என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து நகராட்சி உயர்அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அரசின் உத்தரவுப்படி வார்டு பிரிக்கும் பணி நடைபெற்றது. அதில் சில திருத்தம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் சிவகாசி மாநகராட்சி வார்டு விவரங்கள் குறித்த தகவல் வெளியாகும் என்றார்.
சிவகாசி மாநகராட்சிக்கு தற்போது தான் முதல் தேர்தல். இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர் முதல் மேயர் என்ற பெருமை இருக்கும். இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி தேர்தல் பணிகளில் அதிகாரிகள் வேகம் காட்டி வருவதை போல் அரசியல் கட்சியினரும் வேகம் காட்டி வருகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனித்தனியே தங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
சிவகாசி மாநகராட்சி பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியினர் ஆர்வமாக உள்ளனர்.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (வயது 64), பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்ததால், அவருக்கு லேசான பாதிப்புதான் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டம் நடப்பதற்கு முன்பாக அவருக்கு எடுத்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கே.தொட்டியபட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 24), ஆட்டோ டிரைவர். நேற்று இவர் தனது ஆட்டோவை ஓட்டிக் கொண்டு தொட்டியபட்டி யில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தார்.
தனியார் மில் அருகே சென்றபோது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மாரீஸ்வரன் படுகாயம் அடைந்தார்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாயார் பொம்மக்காள் கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
சாத்தூரில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக அந்த சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வன்னிமலை கிராமத்தைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயது தொடர்பான ஆவணங்களை பார்த்த போது அவர் திருமண வயதை எட்டவில்லை என தெரியவந்தது. இதுதொடர் பாக குழந்தை திருமணம் தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
குழந்தை பெற்ற பெண், தனது அத்தை மகன் கார்த் திக்கை 3 ஆண்டுகளாக காத லித்துள்ளார். தொடர்ந்து அவருடன் இருக்கன்குடி கோவிலில் திருமணம் செய்துள்ளார். ஆனால் அப்போது அவருக்கு 17 வயது என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் காதல் திருமணம் செய்தவர்கள் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில்தான் அந்த பெண் கர்ப்பம் அடைந்து குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் பெண்ணுக்கு 18 வயது ஆகாததால் குழந்தை திருமண சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி அருகே நகை அடகு நிறுவன பெண் மேலாளர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த வி.புதூரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா. இவர் தனியார் நகை அடகு நிறுவனத்தில் மேலாள ராக பணியாற்றி வருகி றார். அடகு வைத்த நகை களை திருப்பி கூடுதல் விலை தருவதாக இந்த நிறுவனம் சார்பில் அறிவிக் கப்பட்டுள்ளது.
அதன்படி சமுசிகாபுரத்தைச் சேர்ந்த முருகேசுவரி (38) தனது நகைகளை ரூ.82 ஆயிரத்துக்கு அடகு வைத்திருப்பதாகவும், அதனை திருப்பி தரவேண் டும் எனவும் கேட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தனியார் நகை அடகு நிறுவனம் அந்த நகையை திருப்பி ரூ.84 ஆயிரம் தருவதாக உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக லட்சுமி பிரியாவுக்கும், முருகேசு வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது-.
இந்த முன்விரோதத்தில் லட்சுமிபிரியா இருசக்கர வாகனத்தில் வந்தபோது முருகேசுவரி, அவரது மகள் கார்த்திகா (19) ஆகியோர் வழிமறித்து தாக்கியதாக கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசுவரி மற்றும் கார்த்திகாவை கைது செய்தனர்.
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் -சங்கரன்கோவில் விலக்கில் குடிநீர் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம் -சங்கரன்கோவில் விலக்கு பகுதியில் 6 தெருக்கள் உள்ளன. 6 தெருக்களிலும் கடந்த 15 தினங்களாக குடிநீர் வரவில்லை. அருகிலுள்ள தோப்புப்பட்டி தெரு, ஸ்ரீரங்கபாளையம் தெரு போன்ற பகுதிகளுக்கு 8 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், இரு வாரங்களாக இந்த 6 தெருக்களிலும் குடிநீர் வராததால் அந்தப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்தனர்.
அதன்படி 6 தெருக்களைச் சேர்ந்த பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் சங்கரன் கோவில் விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்கவும் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன் கோவில், திருநெல்வேலி செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
விருதுநகரில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை வங்கி ஊழியர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர்:
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 5 மற்றும் 1½ வயதில் குழந்தைகள் உள்ளனர்.
கண்ணன் மதுரை திருமங்கலத்தில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வங்கி ஊழியராக இருந்து வந்த அவரது தந்தை கிருஷ்ணன் இறந்ததை தொடர்ந்து, அவரது வேலை கருணை அடிப்படையில் கண்ணனுக்கு கிடைத்தது.
வேலைக்காக தினமும் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு கண்ணன் சென்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு மனைவி கற்பகத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதே போல் இன்று காலையும் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கற்பகத்தை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஆத்திரத்தில் மனைவியை கொன்றதை நினைத்து கண்ணன் வேதனை அடைந்தார். அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைய முடிவு செய்தார்.
அப்போது கண்ணனின் 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்களை வீட்டிலேயே விட்டு விட்டு விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கற்பகம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் வந்த பிறகே கண்ணன், அவரது மனைவியை கொலை செய்த தகவல் அக்கம், பக்கத்தினருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் ஏராளமானார் திரண்டு விட்டனர். விசாரணைக்கு பின் கற்பகத்தின் உடலை போலீசார் அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து கணவர் கண்ணனை கைது செய்தனர்.
நடத்தை சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை வங்கி ஊழியர் கொலை செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு ஊரடங்கு காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. ரெயில் பயணிகள் வசதிக்காக ஆட்டோக்கள் இயங்கின.
விருதுநகர்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் 252 பஸ்களும் இன்று இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ரெயில்கள் இயக்கப்பட்டதால் ரெயில் நிலையத்தில் இருந்து செல்வோர் வசதிக்காக ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.
விருதுநகரில் சிறிய டீக்கடைகள் கூட மூடப்பட்டிருந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி பஸ் நிலையங்களும் இன்று வெறிச்சோடியே காணப்பட்டது.
திருத்தங்கல்லில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் ரோந்து சென்ற போலீசாரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்து விசாரித்ததில் தடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். உடனே போலீசார் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது வாள் மற்றும் அரிவாள் வைத்திருந்தது தெரியவந்தது. 2 பேரும் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 27), மற்றும் 17 வயது வாலிபர் என தெரியவந்தது.
ஆயுதங்கள் வைத்திருந்தது குறித்து விசாரித்ததில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ், சகோதரர் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை கொலை செய்வதற்காக ஆயுதங்களை வைத்திருந்தாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சுரேஷ் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள பனையடிப்பட்டி ஊராட்சி, அல்லம்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த 5-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி, தொழிலாளர்கள் மஞ்சளோடைப்பட்டி முனியசாமி, கன்னகுடும்பன்பட்டி காசி, கொம்மங்கிபுரம் அய்யம்மாள், தென்காசி மாவட்டம், கிழவிகுளம், காமாட்சிபுரம் செந்தில் ஆகியோர் பலியானார்கள்.
விபத்து தொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, தனது தாயார் பூமாரி பெயரில் ஆலைக்கான உரிமம் பெற்றிருப்பது தெரியவந்தது.
விபத்து தொடர்பாக கருப்பசாமி, அவரது தாயார் பூமாரி, ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்பசாமி இறந்து விட்ட நிலையில் மற்ற 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பூமாரியை போலீசார் இன்று கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.