என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரிவாளுடன் கைது
திருத்தங்கல்லில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது
திருத்தங்கல்லில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் ரோந்து சென்ற போலீசாரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்து விசாரித்ததில் தடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். உடனே போலீசார் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது வாள் மற்றும் அரிவாள் வைத்திருந்தது தெரியவந்தது. 2 பேரும் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 27), மற்றும் 17 வயது வாலிபர் என தெரியவந்தது.
ஆயுதங்கள் வைத்திருந்தது குறித்து விசாரித்ததில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ், சகோதரர் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை கொலை செய்வதற்காக ஆயுதங்களை வைத்திருந்தாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சுரேஷ் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
Next Story






