என் மலர்
விருதுநகர்
10.60 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி தமிழகம் சாதனை படைத்துள்ளதாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி தளவாய்புரம் ஊராட்சியில் நடந்த கொரோனா மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாமை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகளின் வீடு தேடி சென்று வீடுவீடாக தடுப்பூசி முகாமை முன்னின்று தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய அவர், இந்தியாவிலேயே துரிதநடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு கொரோனாவில் இருந்து மக்களை முழுமையாக காப்பாற்றிய ஒரே முதல்வர் நம் தமிழக முதல்வர்தான். தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 10.60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறு ப்பேற்று 2-வது ஆண்டில் அடியெடுத்துவைத்தவுடன் சட்டமன்றத்தில் ராஜபாளையம் நகர்ப்புற பகுதிகளில் 5 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அறிவிப்பு செய்துள்ளார் என்றார்.
இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பேரூர் தி.மு.க. செயலாளர் இளங்கோவன், கிளை செயலாளர் தங்க மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திறந்தவெளியில் உணவுப்பொருட்கள் விற்பதை தடுக்க கோரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் 20க்கும் மேற்பட்ட டீக்கடைகள்,10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பஜார் பகுதி எந்த நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.
இங்கிருந்துதான் கூமாபட்டி, கான்சாபுரம் ,நெடுங்குளம், மகாரா ஜபுரம், அழகாபுரி, பேரையூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட ஊர்களு க்கு பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள், கார்கள் பிரிந்து செல்கிறது.
பஜார் பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுப்பொருட்கள் திறந்தவெளியில் வைத்து விற்கப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவது மட்டுமில்லாமல், பஜார் பகுதியில் வழியாக செல்லும் வாகனங்கள் மூலமாக உருவாகும் தூசிகள் உணவுப்பொருட்களில் படிவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதனால் பொதுமக்க ளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உ ள்ளதாகவும், பேக்கரிகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஜார் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரி, டீ கடைகளில் திறந்தவெளியில் உள்ள உணவுப் பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்ததூர் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த மாணவி மாயமானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோ விலில் தனியாருக்குச் சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் உள்ளே கலைக்கல்லூரி, நர்சிங் கல்லூரி, என்ஜினீ யரிங் கல்லூரி என பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாண விகள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகள் கலசலிங்கம் கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று சுப்புராஜ் போலீசில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கலை கழகத்தில் படிக்கும் சில மாணவிகள் காணாமல் போய் விடுவதாகவும், சில நேரங்களில் ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் கிருஷ்ணன்கோவில் போலீசில் பெற்றோர்கள் இதற்கு முன்பு புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சிவகாசி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் இசக்கி நாராயணன் (வயது25). இவர் கார் வாட்டர் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த சிலர் உனக்குப் பெண் கிடைக்காது என்று கூறி உள்ளனர். இதனால் மனமுடைந்த இசக்கி நாராயணன் மது குடித்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி ராமர் கொடுத்த புகாரின்பேரில் மாரநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்-2 குழந்தைகள் மாயமானார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சின்ன காரியாபட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அருகில் நடந்த கோவில் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை திருவிழா பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
இரவு வீடு திரும்பிய கணேசன் மனைவி மற்றும் குழந்தைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்தார். அவர்களை தேடி பார்த்தபோது எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை.
இதுபற்றி அவர் காரியா பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகின்றனர்.
2-வது கணவரின் உறவினரை காணவில்லை என கோர்ட்டில் பெண் புகார் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரைகுளம் தெருவை சேர்ந்தவர் அனிதா(47). இவரது2-வது கணவர் கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த மாதம் 5-ந்தேதி இவர் கேரளாவில் இறந்து விட்டார். அவரது உறவினர் கேரளாவைச் சேர்ந்த சித்தாரங்கதன் என்ற குஞ்சுமோன். அனிதாவின் 2-வது கணவர் இறந்தபோது அனிதாவிற்கு உதவியாக அனைத்து உதவியும் செய்துள்ளார்.
இதனால் அனிதாவுக்கும், குஞ்சுமோனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழில் செய்யவேண்டுமென அனிதாவிடம் தெரிவித்த குஞ்சுமோன் ஸ்ரீவில்லி புத்தூர் தெற்கு பட்டியில் வீடு பிடித்து தங்கி இருந்தார்.
அதன் பிறகு கடந்த 3 நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அனிதா தனியார் விடுதிக்கு சென்று விசாரித்தபோது அறையை காலி செய்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
பல இடங்களில் தேடி பார்த்தும் குஞ்சுமோனை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து அனிதா ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குஞ்சுமோனை தேடி வருகின்றனர்.
உறவினர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது40) கார்டிரைவர். சமீபத்தில் இவரது சகோதரியின் மகன் (மருமகன்)விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து சிவக்குமாரின் அண்ணன் மகன் ஒருவரும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.”
அடுத்தடுத்து உறவினர்கள் விபத்தில் சிக்கியதால் அடுத்து தனக்கும் ஆபத்து ஏற்படும் “என்று சிவகுமார் கருதினார். இதுபற்றி அவர் தனது வீட்டில் கூறியதால் அவர்கள் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வீட்டிலேயே இருக்க வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாக வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சிவகுமார் தூக்கில் தொங்கினார் .அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி சிவகுமாரின் மனைவி ராணி ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்ட பணிகளை ஆய்வு செய்து மாணவர்களுக்கு கலெக்டர் பாடம் கற்பித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மீசலூர் கிராமத்தில் உள்ள சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் செயல்பட்டு வரும் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்” பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாததால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடை வெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டு களாக கொரோனாவின் தாக்கத்தினால் குழந்தை யினுடைய கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் இணையதள வசதி இல்லாத ஏழை குழந்தைகளுக்கு கடந்த கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு குழந்தையினுடைய ஆரம்ப கால கட்ட கல்வி வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். அந்த ஆரம்ப காலகட்ட கல்வி வளர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டால் அது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், தன்னார்வலர் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருவது குறித்தும், மாணவர்களின் வருகை குறித்து கேட்டறிந்தேன். விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 3695 மையங்களில் 3658 தன்னார்வலர்கள் மூலமாக 72044 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மாணவர்கள் தனக்கென்று ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு எவ்வளவு தோல்வி வந்தாலும் தளராமல் முயற்சி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டு, நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி, விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன், வட்டார கல்வி அலுவலர் ராமலட்சுமி ஆகியோர் இருந்தனர்.
ராஜபாளையம் நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத்தில் வைத்து ராஜபாளையம் நகராட்சி பகுதியில் சொத்து வரி உயர்வு குறித்து நான் கோரிக்கை மனு மூலம் அமைச்சர் கே.என்.நேரு கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு நிலை நகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியை விட ராஜபாளையம் நகராட்சியில் தான் சொத்து வரி வீதம் 20.80% (6 மாதம்) மற்றும் அடிப்படை வரி விகிதம் அதிகமாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறினேன்.
அதற்கு அமைச்சர் தற்போதைய பொது சொத்து வரி சீராய்வு நடவடிக்கை சமயத்தில் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படாத வகையில் சொத்து வரியை குறைக்க நகராட்சிகளின் ஆணையாளர் மூலம் ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் நகராட்சிகளின் ஆணையாளர் பொன்னை யாவை நான் நேரில் சந்தித்தபோது அமைச்சர் ராஜபாளையம் நகராட்சிக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி மற்ற சிறப்பு நிலை நகராட்சியில் உள்ளது போல் சொத்து வரி விதிப்பை சரி செய்ய வேண்டி தொலை பேசியில் தெரிவித்ததை அடுத்து நகராட்சி நிர்வாக செயலாளருக்கு அறிக்கை சமர்பித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
எனவே சொத்துவரி குறைக்கப்பட்ட விபரம் விரைவில் வந்து சேரும் என்பதை ராஜபாளையம் நகர் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டராய புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவர் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் கண்காணிப்புபணியில் ஈடுபட்டு இருந்தபோது வேண்டராயபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், கதிரேசன், சந்தனகுமார் ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் மணல் அள்ள குழி தோண்டி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற வெங்கடசாமி, ஏன் அரசு புறம்போக்கு நிலத்தில்மணல் அள்ளுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் வெங்கடசாமியை ஜே.சி.பி. எந்திரத்தை ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து வெங்கடசாமி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஈஸ்வரன், சந்திரகுமார் ஆகியோர்களை தேடி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் ரசாயன மாம்பழங்களை பறிமுதல் செய்ய முயன்ற அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மாமரங்கள் உள்ளன.
இந்த ஆண்டு சரியாக விளைச்சல் இல்லாததால் பருவம் தவறிய நிலையில் தாமதமாக மாங்காய்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேந்திரன், ராஜாமுத்து, கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ராஜபாளையம் ஏ.கே.டி. தினசரி சந்தையில் சோதனையிட வந்தனர்.
அங்குள்ள மாம்பழ குடோனை சோதனையிட்டபோது ரசாயன பொருட்க ளை கண்டறிந்து அதை பயன்படுத்தக் கூடாது என கூறி அந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றனர். இதற்காக வாகனங்களை அதிகாரிகள் தயார் செய்தனர்.
இதற்கு வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் திரண்டு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் பிடி வாதமாக இருந்ததால் அவர்களை கடைக்குள்ளேயே சிறை வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து வந்து அதிகாரிகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து ராஜ பாளையம் தெற்கு காவல் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் செய்தனர்.
அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களை தாக்க முயற்சித்தல் உள்பட பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் தி.மு.க. கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் நேருஜி நகரைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 33). இவர் அண்மையில் நடந்த விருதுநகர் நகராட்சி தேர்தலில் 5வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஆஷா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் கூறியுள்ளார். அதில், எங்கள் பகுதியில் வசிக்கும் மேனகா (24), மாரீஸ்வரி (33), கலைச்செல்வி (43) ஆகியோர் சம்பவத்தன்று எனது வீட்டின் முன்பு நின்று கொண்டு என்னைப்பற்றி அவதூறாக பேசினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட 3 பெண்கள் மீது விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் விருதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






