என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

    உறவினர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது40) கார்டிரைவர். சமீபத்தில் இவரது சகோதரியின் மகன் (மருமகன்)விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.

     இதைத்தொடர்ந்து சிவக்குமாரின் அண்ணன் மகன் ஒருவரும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.”

    அடுத்தடுத்து உறவினர்கள் விபத்தில் சிக்கியதால் அடுத்து தனக்கும் ஆபத்து ஏற்படும் “என்று சிவகுமார் கருதினார். இதுபற்றி அவர் தனது வீட்டில் கூறியதால் அவர்கள் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வீட்டிலேயே இருக்க வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    நீண்ட நேரமாக வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சிவகுமார் தூக்கில் தொங்கினார் .அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி சிவகுமாரின் மனைவி ராணி ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    இந்தச் சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×