என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை மிரட்டல்.
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டராய புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவர் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் கண்காணிப்புபணியில் ஈடுபட்டு இருந்தபோது வேண்டராயபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், கதிரேசன், சந்தனகுமார் ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் மணல் அள்ள குழி தோண்டி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற வெங்கடசாமி, ஏன் அரசு புறம்போக்கு நிலத்தில்மணல் அள்ளுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் வெங்கடசாமியை ஜே.சி.பி. எந்திரத்தை ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து வெங்கடசாமி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஈஸ்வரன், சந்திரகுமார் ஆகியோர்களை தேடி வருகின்றனர்.
Next Story






