search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் புகார்"

    • திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்.
    • விட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தங்க நகைகளை காணவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் சாமியப்பா பிள்ளை வீதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா கமால் பாட்ஷா.

    இவரது மனைவி தாகிருநிசா பேகம் (வயது 58).

    இவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் எனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்.

    அதில் இருந்து 24 பவுன் தங்க நகைகளை மட்டும் வீட்டில் ஒரு அறையில் வைத்து விட்டு மீதி நகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றேன்.

    திரும்பி வந்து பார்த்தபோது வைத்திருந்த இடத்தில் 24 பவுன் தங்க நகைகளை காணவில்லை.

    வீட்டின் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனது வீட்டில் பணிபுரி வர்கள் மீது சந்தேகம் உள்ளது.

    காணாமல் போன நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான் மாவு அரைத்து தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில் சீட் சேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் பணம் போட்டு சேமித்து வந்தேன்.
    • 8 ஆண்டுகளாக பணம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி மற்றும் உறவினர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரை சந்தித்து விட்டு மனு அளித்தனர். அதன்பிறகு அவர் கூறும்போது:-

    நான் மாவு அரைத்து தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில் சீட் சேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் பணம் போட்டு சேமித்து வந்தேன். சீட்டு முடிவடையும் தருவாயில் இருக்கும் போது சீட்டு சேமிப்பு திட்டத்தின் உரிமையாளர் அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும் பிறகு தருவதாக கூறி என்னிடம் 3 லட்ச ரூபாயை கடந்த 2015-ம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

    இதுவரை 8 ஆண்டுகளாக பணம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது குறித்து கேட்டபோது அவர் பணம் தராமல் மிரட்டுகிறார். என்ன செய்வது என்றே தெரிய வில்லை கணவனை பிரிந்து வாழும் எனக்கு குடும்பம் நடத்துவதற்கு கூட சரிவர பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்போது பக்கவாதம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

    சிகிச்சைக்கு கூட தற்போது பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே என்னிடம் ஏமாற்றியவரிடம் இருந்து 3 லட்ச ரூபாயை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    • காவி உடையுடன் ஒருவர் தர்ணா

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் பேர்ணாம்பட்டு அருகே உள்ள ராஜாக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது மனைவி பி. ஜெயந்தி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் ராஜாக்கல் ஊராட்சி மன்ற தேர்தலில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். அதே வார்டில் வி. ஜெயந்தி என்பவரும் போட்டியிட்டார். அப்போது நான் தோல்வியடைந்ததாக கவும் வி. ஜெயந்தி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க பட்டார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் எனது வாக்கு விபரம் குறித்து விவரம் சேகரித்தேன்.அதில் பி. ஜெயந்தி ஆகிய நான் 119 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும் தற்போது பதவியில் உள்ள வி. ஜெயந்தி 64 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வெற்றி பெற்ற என்னை தோல்வி அடைந்ததாக கூறி ஏமாற்றி உள்ளனர். உண்மையான வெற்றி பெற்ற எனக்கு வாடு உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அணைக்கட்டு அருகே உள்ள ஓதியத்தூர் ஊராட்சி தாங்கல், கஜாபுரம், மலை கன்னிகாபுரம், புதுமனை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

    அதில் எங்கள் ஊராட்சியை 2 ஆக பிரிக்க வேண்டும். தாங்கல் உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்த்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    பேர்ணாம்பட்டு அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவ சூரிய நிலா என்பவர் காவி உடையுடன் குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதேமில்லத் அரங்கு முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

    தனக்கு சொந்தமான வீட்டு மனை நிலத்தை சிலர் அபகரித்து விட்டதாகவும் இது பற்றி புகார் அளித்தால் யாரும் உதவி செய்யவில்லை எனக் கூறி அவர் கோஷம் எழுப்பினார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி அவரை சமாதானம் செய்து அவரிடம் இருந்து மனு பெற்றுக்கொண்டார்.இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    • திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடைபெறவில்லை.
    • தொடர்ந்து என்னை கொடுமைபடுத்தியதால் மீண்டும் ரூ.25 லட்சத்தை பெற்றோரிடம் வாங்கி கொடுத்தேன்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தை லோகமானியா வீதி மேற்கு பகுதியை சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்.ஆராக வேலை செய்து வருகிறார்.

    இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவுசிக் கொமரலுஹர்சா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது எனது தந்தை ரூ.75 லட்சம் மதிப்பில் தங்க நகை, ரூ.10 லட்சம் வைர நகை, ரூ.10 லட்சத்தில் வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.10 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்தார்.

    இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடைபெறவில்லை. இதுகுறித்து கேட்டபோது ரூ.10 லட்சம் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்றார். நான் அதையும் பெற்று கொடுத்தேன். சிறிது நாட்கள் கழித்து எனது கணவர் என்னை கொடுமைபடுத்த தொடங்கினார்.

    அப்போது மேலும் ரூ.25 லட்சம் வரதட்சணை வேண்டும் என்றார். அதையும் நான் எனது பெற்றோரிடம் இருந்து வாங்கி கொடுத்தேன். இதை வைத்து எனது கணவர் தொழில் தொடங்கினார். ஆனால் அது நஷ்டம் அடைந்தது. பின்னர் மீண்டும் என்னிடம் பணம் கேட்டார். நான் தர மறுத்துவிட்டேன்.

    தொடர்ந்து என்னை கொடுமைபடுத்தியதால் மீண்டும் ரூ.25 லட்சத்தை பெற்றோரிடம் வாங்கி கொடுத்தேன். நாட்கள் கடந்தும் எங்களுக்குள் எந்த தாம்பத்ய உறவு நடக்கவில்லை. இதனால் நான் மனவேதனை அடைந்து வந்தேன்.

    சம்பவத்தன்று நான் எனது பணம் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு கேட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த எனது கணவர் என்னை கொடுமை படுத்தி துன்புறுத்தினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பெண்ணின் கணவர் கவுசிக் கொமரலு ஹர்சா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×