என் மலர்
வேலூர்
- பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
- பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது சூறையிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்
அணைக்கட்டு:
வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலஅகலமாக நடைபெற்றது இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் . அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சிம்ம வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம்,யானை வாகனம், குதிரை வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவம் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் அருள்மிகு எல்லையம்மன் அலங்கரிப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
வீதியில் வந்த தேரின் மீது பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது சூறையிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். திருத்தேர் முக்கிய மாட வீதிகளின் வழியாக சென்றது.
- ஒரு மாணவிடியை 4 பேர் காதலித்து வந்தனர்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
வாலிபர் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவியை அதே நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மேலும் 3 பேர் காதலித்து வந்தனர்.
அந்த மாணவியும் எல்லோரிடமும் காதலிப்பது போல் சரிசமமாக பேசி வந்துள்ளார்.
இது குறித்து 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு தெரிய வரவே, அவர் மாணவியை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக மாணவியை காதலித்து வரும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், கரடிகுடியில் உள்ள 2-ம் ஆண்டு மாணவனின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படு காயமடைந்த மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மாணவனின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆடி மாதத்தின் 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.
ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப் பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
வெட்டுவாணம்
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் கோபால புரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.
வெட்டுவாணம்
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.
- 13-ந் தேதி வரை அமல்
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
தெற்கு ரெயில்வேயில் குண்டக்கல் டிவிஷனில் ரயில் பாதை பராமரிப்பு பணிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் விழுப்புரம் திருப்பதி இடையிலான முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.30 மணி அளவில் புறப்பட்டு திருவண்ணா மலை, போளூர், ஆரணி, வேலூர் கண்டோன்மென்ட், காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் இந்த ரயில் காட்பாடி உடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல் மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு பாகாலா, சித்தூர், காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட் வழியாக விழுப்புரம் செல்லும் ரெயிலும் காட்பாடியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாலை 4.40 மணிக்கு திருப்பதிக்கு மீண்டும் திரும்பி புறப்பட்டு செல்லும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று தொடங்கி வரும் 13-ந் தேதி வரை அமலில் உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டம்
வேலூர்:
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பயன்பாட்டில் இருந்து முழுபாகம் சேதமடைந்த, ஒழுகும் நிலையில் இருந்த பஸ்கள் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டிருந்தது.
அதனுடன் பழைய வண்ணம் மாற்றப்பட்டு மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பஸ்கள் நீலம் மற்றும் சில்வர் வண்ணத்தில் இருந்தவை ஆகும். வண்ணத்தில் மட்டுமின்றி உட்கட்ட மைப்பிலும் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருக்கைகள், ஜன்னல்கள் மற்றும் ரீடிங் விளக்குகள் தரம் உயர்த்தி வடிவ மைக்கப்பட்டுள்ளது.
ரெக்சீன்கள் கொண்டு இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளதால் இவை எளிதில் அழுக்கு அடைவது இல்லை. முழுக்க முழுக்க புதியதாக பஸ் பாடி கட்டப்பட்டுள்ளதால் பளிச்சென்று காணப்ப டுகிறது.
தனியார் பஸ்களுக்கு போட்டியாக வடிமைப்பும், தரமும் அமைந்துள்ளது. நீண்டதூர வழித்தடங்களில் இந்த பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் முதற்கட்டமாக 12 பழைய பஸ்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்னும் சில வாரங்களில் இப்பணி முழுமையாக முடிக்கப்படும். அதன்பிறகு இந்த பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடி யாத்தம் அடுத்த புவனேஸ் வரிபேட்டையில் ஸ்ரீமுத் துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இத னால் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல் கின்றனர்.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி கோவிலுக்கு பூசாரி வந்தபோது, கோவி லுக்குள் இருந்த மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயி ரம் மதிப்பிலான பொருட் கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் கோவில் நிர்வாகத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு வாலிபர் கோவிலுக்குள் நுழைந்து, பொருட்களை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து அந்த வாலிபர் குறித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 22) என்பது தெரிந்தது.
இந்த நிலையில் நேற்று புவனேஸ்வரி பேட்டையில் சுற்றி திரிந்த நித்தியா னந்தத்தை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தியானந்தத்தை மீட்டனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கோவிலில் பொருட்களை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
- மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது
வேலூர்:
பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் 50 ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சி. அலமேலு வரவேற்று பேசினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் என். ரமேஷ் மற்றும் துணைத்தலைவர் என். ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிமொழி மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனையை தொடக்கி வைத்து பேசியதாவது:-
பணிமனையில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் மிகச் சிறந்த தேர்வு வினா தயாரிப்பா ளராகத் திகழ வேண்டும்.
நல்ல தரமான வினாக்களை தயாரித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதன் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுமை பெறச் செய்து தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்களாக வர வேண்டும்.
எந்த நேரத்திலும் கல்விப் பணி ஒன்றையே ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் வினாக்கள்தான் தமிழகத்திலேயே மிகச் சிறந்த வினாவாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்களது வாழ்க்கையில் எப்போதும் தேடல் வேண்டும்.
நிறைய புத்தகங்களை படியுங்கள். அதிக முயற்சி, கடுமையான பயிற்சி மேற்கொண்டு அரசுத் தேர்வுகளில் வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சியை 100 சதவீதம் பெறுவதற்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் சி. குமார் நன்றி கூறினார்.
- கண்காணிப்பி கேமராவில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர், வடுகன் தாங்கல் ஆகிய பகுதிகளில் காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பேக் கரி கடையில் கடையின் பூட்டை உடைத்து கடந்த மாதம் 25-ந் தேதி 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்டவை திருடுபோனது.
இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து திருட்டு தொடர்பாக கடைகளில் உள்ள சிசி டிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில், வடுகன் தாங்கல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) உள்பட வேலூரை சேர்ந்த 2 சிறுவர்கள் கடை யில் திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நேற்று மணிகண்டன் உள் ளிட்ட 3 பேரை போலீ சார் கைது செய்தனர்.
மணிகண்டனை வேலூர் சிறையிலும், சிறுவர்களை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.
- மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விரக்தி
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர், சைதாப்பேட்டை, சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25). ஆட்டோ டிரைவர்.
மதுவுக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் மது போதையில் வந்து அவரது மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
வெங்கடேசன் மாமியார் வீட்டிற்கு சென்று பலமுறை குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். அவர் வர மறுத்ததால் விரக்தியில் இருந்த வெங்கடேசன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்புக் காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று இரவு 8 மணியளவில் பக்தர்கள் பூஜை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.
- கலெக்டர் அதிரடி உத்தரவு
- நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், கால்நடை மருத்துவமனை, சிறிய வணிக வளாகங்கள், துணி கடைகள், உள்ளிட்டவைகள் உள்ளன.
சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி, மலைவாழ் மக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அணைக்கட்டுக்கு தான் அதிகம் வருகின்றனர். சிறிய வர்த்தக நகரமாக திகழும் இந்த அணை க்கட்டில் மக்கள் அதிகம் கூடுவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
அணைக்கட்டு பஜாரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. கடைகள், வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சேகரிக்கின்றனர்.
தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பை களை அணைக்கட்டு- வேலூர் சாலையில் உள்ள கெங்கநல்லூர் சந்தைமேடு அருகே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டு ஏற்படுகிறது. மலைபோல் குவிக்கப்படும் குப்பைகள் சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே தீயிட்டு கொளுத்து கின்றனர்.
அந்த சமயத்தில் கரும்புகை மண்டலம் உருவாகி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் கண்களில் எரிச்சலை உருவாக்குகிறது.
இது தொடர்பான செய்தி மாலைமலரில் புகைப்படத்துடன் வெளியானது.
இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அணைக்கட்டு சாலை யோரத்தில் குப்பகைளை தீ வைத்து எரிப்பதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது எரிந்து கொண்டிருந்த குப்பை களை தண்ணீர் ஊற்றி அணைத்து கொட்ட ப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இனிமேல் இங்கு குப்பைகள் கொட்ட கூடாது. சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை அகற்றாமல் வைத்திருந்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அணைக்கட்டு அல்லது கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க இடம் வழங்க வேண்டும்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை உரமாக மாற்றி உடனடியாக அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அணைக்கட்டு தாலுகா ஆஸ்பத்திரி மற்றும் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, வின்சென்ட்ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் 11 வகையான திரவியங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவற்றி செல்கின்றனர். மேலும் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதே போல் நேற்றும் தேய்பிறை முன்னிட்டு யாகசாலைகள்.
அமைக்கப்பட்டு 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் 11 வகையான திரவியங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அருகே அமைக்கப்பட்டு இருக்கும் வினாயகர்க்கு பூஜைகள் செய்யப்பட்டனர்.
பின்பு புனித கலச நீர் கொண்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
ஏரிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதாவெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செலயாளலர் செங்கடேசன் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






