என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துவாச்சாரியில் ஏல சீட்டு நடத்தி மோசடி
    X

    சத்துவாச்சாரியில் ஏல சீட்டு நடத்தி மோசடி

    • போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
    • ஏராளமானவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற்றம்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

    அவரி டம் பல ஆண்டுகளாக அதேப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி வந்துள்ளனர். ஒவ் வொருவரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பல்வேறு சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தனர்.

    முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கு பணத்தை அந்த நபர் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது. இந்த நிலையில் அந்த நபர் மற்றும் இதில் தொடர்புடைய அவரது குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்களிடம் போலீசார் அப்போது அவர்கள் கூறுகையில்:-

    ஏலச் சீட்டு நடத்தி பலலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள நபரிடம் ஏராளமானவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். தலைமறைவாகிய அவரை பிடித்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றனர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×