என் மலர்
நீங்கள் தேடியது "Sudden fire in the car"
- பொதுமக்கள் போராடி அணைத்தனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே பயன்பாட்டில் இல் லாத சுரங்க நடைபாதை உள்ளது.
இதன் மேற்பகுதியில் சர்வீஸ் சாலையோரம் விஜயன் என்பவர் காரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக் கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களே போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முன்பகுதி எரிந்து நாசமானது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.






