என் மலர்
நீங்கள் தேடியது "இழப்பீட்டு"
- நீதிபதி வழங்கினார்
- ஏராளமான வழக்குகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது
வேலூர்:
சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட பொறுப்பு நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார்.
இதில் விபத்து இழப்பீடு சொத்து பிரச்சனை உள்ளிட்ட ஏராளமான வழக்குகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது.
கடந்த 2021 -ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது விருதம்பட்டை சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாலதி காட்பாடியிலிருந்து குடியாத்தம் சென்ற போது போலீஸ் வேன்மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு விபத்து இழப்பீடு தொகையாக ரூ.72 லட்சத்துக்கான இழப்பீட்டுத் தொகையை நீதிபதி சாந்தி வழங்கினார்.






