என் மலர்tooltip icon

    வேலூர்

    • மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை சேர்ந்தவர் பிரதாப் (வயது 34), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் பிரதாப் தனது குடும்பத்தினரை பணிந்து, வேப்பங்குப்பத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். கள்ள காதலிக்கும், பிரதாப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ஊசூர் அருகே உள்ள ரெண்டேரிகொடி ஏரியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    வேலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி ஆடி அமாவாசை தினமான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப் பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    • மர்ம நபர்கள் ஒயரால் சஞ்சயை கழுத்தை இறுக்கி கொலை செய்து வீசி விட்டு சென்றுள்ளனர்.
    • போலீசார் லாரி செட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21), எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    தாய் தந்தையை இழந்த சஞ்சய் தனது அக்கா வீட்டில் தங்கி வேலை செய்தார். அக்காவுடன் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது லாரி செட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சஞ்சய் இன்று காலை சேண்பாக்கத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரும் சர்வீஸ் சாலையில் உள்ள அம்மாகண் செட் அருகே கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் ஒயர்கள் சுற்றப்பட்டு இருந்தது.

    மர்ம நபர்கள் ஒயரால் சஞ்சயை கழுத்தை இறுக்கி கொலை செய்து வீசி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் லாரி செட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    சஞ்சய்க்கு யாரேனும் எதிரிகள் உள்ளனரா? முன்விரோதம் உள்ளவர்களின் விவரம் மற்றும் செல்போனின் அழைப்புகள் உள்ளிட்டவைகளை கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் அருகே உள்ள தாங்கல் அம் மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம்.

    இவரது மகன் தாமோ தரன் (வயது 39). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் ராமு (28), ராஜேஷ் (28). தாமோதரன் வீட்டு கழிவுநீர் ராமு மற்றும் ராஜேஷ் வீட்டின் முன் பகுதியில் செல்கிறது. இது குறித்து ராமு, ராஜேஷ் ஆகிய இருவரும், தாமோதரனிடம் கேட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கழிவு நீர் அதிகமாக இவர்கள் வீட்டு முன் சென்றதால் மீண்டும் இவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டு தாமோதரன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சரவணன், மற்றும் ராமு, ராஜேஷ் ஆகி யோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் 4 பேரும் காயமடைந்தனர். தாமோதரன் மற்றும் ராமு ஆகிய 2 பேரும் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து 2 தரப்பினரும் பள்ளிகொண்டா போலீ சில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப் பதிவு செய்து சரவணன் மற்றும் ராமு ஆகிய 2 பேரை கைது செய்தார்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி கழிஞ்சூர் இளங்கோ தெருவை சேர்ந்தவர் கதிர வன் (வயது 43), டிரைவர்.

    இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து கதிரவனின் மனைவி சுகுணா விரு தம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகர மன்ற தலைவர் தேசியக்கொடியை ஏற்றினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, பொறியாளர் வே.சம்பத், மேலாளர் சுகந்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    தேசியக்கொடியை நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஏற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருண்முரளி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமலுவிஜயன் எம்எல்ஏ கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளூர்ரவி, ஏகாம்பரம், நகர மன்ற உறுப்பினர்கள் அரசு, கோவிந்தராஜ், மனோஜ், பாபு, நவீன்சங்கர், ஜாவித்அகமது, சுமதிமகாலிங்கம், ரேணுகாபாபு, இந்துமதிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 19-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனா ளிகள் உதவிகள் பெற அதற்கான அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் காட்பாடி, குடியாத்தம் ஆகிய தாலுகாக்களில் முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 19-ந் தேதி வேலூர் டவுன்ஹாலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே மாற்றுத்திறனா ளிகள் தங்களின் ஆதார்அட்டை, குடும்ப அட்டை, 4 புகைப்ப டத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தென்புதூர் கிராம ஒருவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது.

    நேற்று மாலை அந்த மந்தோப்பில் சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த வனக்காப்பாளர்கள் மனிவாசுகி, அஜித், வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்து நிலத்தில் இருந்த 30 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள இராசிமலை காப்பு காட்டில் விட்டனர்.

    • துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    வேலூர்:

    வேலூர் காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி உள்ளது. வேலூர் சிஎம்சி யில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வந்து செல்லும் பயணிகள் காட்பாடி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்க்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் பஸ்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    காட்பாடி சாலையில் உள்ள கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் கால்வாயில் உள்ள அடைப்புகளை அப்புறப்படுத்தவில்லை.

    இதனால் அங்குள்ள தங்கம் விடுதிகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கால்வாயில் அடைப்பு உள்ளதால் கழிவு நீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.

    அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்தபடி கடந்து செல்கின்றனர். இதேபோல் பெங்களூர் சாலையில் உள்ள டி மண்டி தெருவில் அரிசி பருப்பு எண்ணெய் மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி உள்ளது.

    இதனால் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் கழிவு நீரை கடந்து செல்ல கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வாரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீரென மாயமானார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லியை சேர்ந்தவர் உமாபதி (வயது 55). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    இவரது மனைவிகள் இருவரும் பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில், கடந்த 7 மாதங் களாக குடியாத்தம் அருகே உள்ள பக்கிரிபல்லியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். மேலும், இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று முன்தினம் இவர் திடீரென மாயமானார். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் உமாபதி இறந்த நிலையில் பிணமாக மிதந்து கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உமாபதி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • மலை கிராம மக்கள் அவதி

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    அப்போது காட்பாடி அடுத்த செஞ்சி கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    எங்கள் ஊரில் 2. 58 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்காக பயன்படுத்தி வருகிறோம் திடீரென்று தற்போது பக்கத்தில் உள்ள நிலத்துக்காரர்கள் அந்த சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து சுற்றுச்சுவர் அமைத்து எரிமேடை கட்டி கொடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    இதேபோல் நஞ்சுக்கொண்டாபுரம் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது எங்கள் கிராமத்தின் வழியாக வேலூர் முதல் அமிர்தி உயிரியல் பூங்கா வரை செல்லும் சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை துத்திக்காடு ஊராட்சி முதல் நஞ்சுக்கொண்டாபுரம் வழியாக அமிர்தி வன உயிரியல் பூங்கா வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சேதம் அடைந்து உள்ளது.

    இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சாலை ஜமுனாமரத்தூர் தாலுகா உள்ளடக்கிய சுமார் 150 மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.

    • வேலூர் கோட்டையில் துணிகரம்
    • செல்போனை பறிக்க முயற்சி

    வேலூர்:

    வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வேலூர் கோட்டை கொத்தளம் பகுதியில் சிலர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முபாரக் (வயது 34) என்பவர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களில் ஒரு வாலிபரிடம் செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த வாலிபரை முபாரக் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. உடனே பொதுமக்கள் சத்தம் போடவும் முபாரக் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அவரை கோட்டை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீஸ்காரர் தமிழரசன் பிடிக்க முயன்றார். அப்போது முபாராக் கையில் வைத்திருந்த உடைந்த கண்ணாடி பாட்டிலால் தமிழரசனை குத்தி விட்டு தப்பி ஓடினார். பின்னர் அவர் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அங்குள்ள வாகனங்களை சேதப்படுத்தி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே அவரை போலீஸ்காரர் பாலாஜி தடுக்க முயன்றார். அவரையும் முபாரக் பாட்டிலால் குத்தினார்.

    வாலிபர் கைது

    அதற்குள் அங்கு வந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீசார் முபாரக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களையும் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து முபாரக்கை அண்ணா சாலையில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அப்போது முபாரக் தப்பி ஓடினார். உடனே முபாரக்கை விரட்டி சென்று போலீசார் பிடித்தனர்.

    அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    போலீசார் விசாரணையில் முபாரக் போதையில் இருந்ததும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×