என் மலர்
நீங்கள் தேடியது "அமிர்தி சாலை"
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- மலை கிராம மக்கள் அவதி
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
அப்போது காட்பாடி அடுத்த செஞ்சி கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது:-
எங்கள் ஊரில் 2. 58 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்காக பயன்படுத்தி வருகிறோம் திடீரென்று தற்போது பக்கத்தில் உள்ள நிலத்துக்காரர்கள் அந்த சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து சுற்றுச்சுவர் அமைத்து எரிமேடை கட்டி கொடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இதேபோல் நஞ்சுக்கொண்டாபுரம் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது எங்கள் கிராமத்தின் வழியாக வேலூர் முதல் அமிர்தி உயிரியல் பூங்கா வரை செல்லும் சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை துத்திக்காடு ஊராட்சி முதல் நஞ்சுக்கொண்டாபுரம் வழியாக அமிர்தி வன உயிரியல் பூங்கா வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சேதம் அடைந்து உள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சாலை ஜமுனாமரத்தூர் தாலுகா உள்ளடக்கிய சுமார் 150 மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.






