என் மலர்
வேலூர்
- 2 மாதத்தில் உண்டியல் காணிக்கை ரூ.2.80 லட்சம் வசூல்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாயகி உடனுறை உத்திர ரங்கநாதர் கோவில் உள்ளது.
இங்கு வேலூர் மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலை த்துறை செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் தக்கார் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 2 மாதத்தில் ரூ. 2.80 லட்சம் காணிக்கை பணம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் மிகவும் சிறப்பு மிக்க எல்லையம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமைகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாளும் நடக்கிறது.
முதல் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, 3 முறை குலத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நரசிம்மாமூர்த்தி மற்றும் கணக்காளர் சரவணபாபு, மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்
- போக்குவரத்து பாதிப்பு
வேலூர்:
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காரில் டிரைவர் உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.
வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பில் மோதியது.
இதில் கார் முன்பகுதி சேதமானது. காரில் பயணம் செய்த 3 பேர் லேசான காய்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அப் பகுதி பொதுமக்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.
- ரத்தசோகையால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந்து பாதுகாக்கிறது
- சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
வேலூர்:
தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
அன்றைய தினம் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு (கர்ப்பிணி தாய்மார்கள் மற் றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்கமாத் திரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங் கள், அங்கன்வாடி மையங் கள், பள்ளிகள் மற்றும் கல்லூ ரிகளில் நடத்தி குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் குழந்தையின் ஆரோக் கியம் மேம்படுவதுடன் ஊட் டச்சத்து குறைபாடு இல்லா மல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிக ரிக்கவும் உதவுகிறது.
ரத்த சோகை பிரச்சினை இருக்காது. மேலும் ரத்தசோகை யால் ஏற்படும் பின்விளைவு களில் இருந்து பாதுகாக்கிறது.
வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 3,51,998 பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய 1,03,112 பெண்களுக்கும் என மொத் தம் 4,55,110 பேருக்கு, மாவட்டத்தில் 7,68,762 மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள தாகவும் சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.
- சத்துவாச்சாரியில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டது
- சிறுவர்களின் இத்தகைய செயல் காண்போரை வியக்க வைத்துள்ளது
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 2-வது மண்ட லத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் எதிரே கடந்த சில நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் உடைந்து சுமார் ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதை அறிந்த அப்பகுதியில் விளையாடி க்கொண்டிருந்த சிறுவர்கள், இது பொது மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதை என்பதால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க பள்ளம் ஏற்பட்டுள்ள வழியே வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிறுவர்களே தங்கள் கை பட ஒரு அட்டையில் "இங்கு பள்ளம் உள்ளது, வழி இல்லை. மாற்று பாதையில் செல்லவும்" என்பதை வலியுறுத்தும் வகையில் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகைகளை வைத்து ள்ளனர்.
அதோடு மட்டும் இல்லாமல் நீண்ட நேரமாக அங்கு நின்று அவ்வழி யாக வரும் வாகன ஓட்டுகளுக்கு அறிவுறுத்தியும் உள்ளனர்.
பள்ளி சிறுவர்களின் இத்தகைய செயல் காண்போரை வியக்க வைத்துள்ளது.
- உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 65) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர்.
இவருக்கு கடந்த 4 வருடத்திற்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அறுவைசிகிச்சை செய்துள்ளார்.
மேலும் கடந்த 10-ந் தேதி மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவே வெங்கடேசன் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார் மேலும் இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கேலி கிண்டல் செய்ததாக புகார்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபா ளையத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையை ஒட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரைமீது தினமும் மாலை நேரத்தில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை போதை வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.
ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் போதை வாலிபர்கள் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று வேப்பங்குப்பம் ஏரிக்கரை மீது அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த வாலிபர்கள், சாலையில் நின்றுக்கொண்டு கேலி கிண்டல் செய்ததோடு, பெண்களிடம் அத்து மீறியதாக தெரிகிறது.
இது குறித்து பொதுமக்கள் தகவலின் பேரில் வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி, போலீசில் புகார் செய்தார்.
விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் கேலி கிண்டல் செய்து கொண்டிருந்த வாலிபர்கள் மற்றும் மது அருந்து கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர். அப்போது போதை வாலிபர்கள் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினர்.
ஏரியின் கரைமீது மது அருந்தவோ, பொழுதை கழிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இருப்பினும் அவ்வப்போது போதை ஆசாமிகள் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது. எனவே தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
- 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி ரங்கப்பன்கொட்டாய் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாஉமாபதி தலைமை தாங்கி, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து, ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் ஊராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.
அதனை அகற்ற 4 மாதத்திற்க்கு முன்பு அதிகாரிகள் அனைவரும் அனுமதி வழங்கியபிறகும் கூட தற்போது வரை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளது. எனவே ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி ஏரியை தூர் வார வேண்டும்.
உத்திர காவேரி ஆற்றில் இருந்து ஒடுகத்தூர் வழியாக ஏரிக்கு தண்ணீர் எடுத்துவர அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும். இல்லை என்றால் வருகிற அக்டோபர் மாதம் நடைப்பெறும் கிராமசபை கூட்டத்தை அனைவரும் புறக்கனிக்கப்போவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 15 மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் முதியோர் உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், புதிய வீடு கேட்டு 30-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். இதற்கு அடுத்த 2 மாதத்திற்க்குள் அனைவருக்கும் வீடு கட்ட அனுமதி பெற்றுதரப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் கூறினர்.
மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலா 2 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அதேபோல் முதியோர்களுக்கு மூட்டு வலி போக்கும் நிவாரணி, அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
- விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது
- வேளாண் அதிகாரிகள் தகவல்
வேலூர்:
காட்பாடி யூனியனில் 41 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில், பெரும்பாலானவை விவசாய நிலங்களை சார்ந்த கிராமங்களாகும்.
இதனால், காட்பாடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய விலையில் விதைகள், உரம் வகைகள், விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு சாகுபடிக்குதேவையான நெல் (கோ-51), ஆர்என்ஆர், உளுந்து, துவரை, கேழ்வரகு உள்ளிட்ட விதைகள் வந்துள்ளதாகவும், விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, ஆதார் கார்டு நகலை அலுவலகத்தில் கொடுத்துவிதைகளை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காக்கவும், அதிக மகசூல் தரக்கூடிய நுண்ணூட்டசத்து, திரவ உயிர் உரங்கள் ஆகியவையும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
தேவையானவர்கள் பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் காட்பாடி யூனியனில் மணிலா 2,500 ஹெக்டேர், நெல் 750 ஹெக்டேர், கரும்பு 350 ஹெக்டேர், காய்கறி வகைகள் 50 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வேளாண் துறை தெரிவித்தனர்.
- தண்டனை குறைத்து விடுதலை செய்யப்பட்டனர்
- ஜெயிலில் செய்த வேலைகளுக்காக உழைப்பூதிய தொகை வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் ஜெயிலில் சுதந்திர தினத்தையொட்டி பொன்னுசாமி என்கிற சித்திக் (வயது 77)
ஜாகிர் உசேன் (50) இருவரும் தண்டனை குறைப்பு பெற்று நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிப்பதற்கான சான்றுகளை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் வழங்கினார்.
மேலும் அவர்கள் சிறையில் செய்த வேலைகளுக்காக உழைப்பூதியத்துக்கான தொகையினையும் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு தலைமையில், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் அரிசி பருப்பு, உப்பு புளி மிளகாய், உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வின் போது உதவி சிறை அலுவலர் அருள்குமரன் சிறை கண்காணிப்பு உதவி ஆய்வாளர் டி.மீனாட்சிசுந்தரம் தலைமை காவலர் கே.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தீயணைப்பு படை வீரர்கள் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று குடிநீர் தொட்டியில் புகுந்துள்ளது.
தண்ணீர் தொட்டியில் இருந்து சத்தம் வருவதைகண்ட வினோத்குமார் அருகே சென்று பார்த்தார். அப்போது நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 4 அடி நீளம் கொண்ட நாகபாம்பை பிடித்தனர்.
அதேபோல், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரது வீட்டில் நேற்று மாலை 5 அடி நீளம் முள்ள நாகபாம்பு ஒன்று புகுந்தது.
இதுகுறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பதுங்கி இருந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தனர்.
தொடர்ந்து, பிடிபட்ட 2 பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 2 நாகபாம்புகளை ஒடுகத்தூர் காப்பு காட்டில் கொண்டு பத்திரமாக விட்டனர்.
- அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்
- வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
வேலூர்:
இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களின் நினைவாக தானம் செய்வார்கள். மேலும் காக்கைக்கு உணவு படைப்பார்கள்.
ஆடி அமாவாசை
ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட சிறப்பானதாகும்.
இது போன்ற விரத நாட்களில் முன்னோர்கள் கூட்டமாக வந்து நம்முடன் தங்கி இருந்து, அவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யும் முறைகளை பார்த்து, மனம் குளிர்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள் என சொல்லப்படுகிறது.
அதன்படி ஆடி அமாவாசை ஒட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்க ரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.
விரதம்
பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.
ஆடி அமாவாசை யொட்டி திருஷ்டி பூசணிக்காய், பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்தது.
மாத தொடக்கத்தில் வந்த அமாவாசை விட, இன்று அமாவாசை தினத்தில் அதிகமானோர் அமாவாசை தினத்தை கடைப்பிடித்து விரதம் இருந்து வழிபட்டனர். அமாவாசையை யொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






