என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malnutrition free mal for healthy living"

    • ரத்தசோகையால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந்து பாதுகாக்கிறது
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    அன்றைய தினம் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு (கர்ப்பிணி தாய்மார்கள் மற் றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்கமாத் திரைகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங் கள், அங்கன்வாடி மையங் கள், பள்ளிகள் மற்றும் கல்லூ ரிகளில் நடத்தி குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    இதன் மூலம் குழந்தையின் ஆரோக் கியம் மேம்படுவதுடன் ஊட் டச்சத்து குறைபாடு இல்லா மல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிக ரிக்கவும் உதவுகிறது.

    ரத்த சோகை பிரச்சினை இருக்காது. மேலும் ரத்தசோகை யால் ஏற்படும் பின்விளைவு களில் இருந்து பாதுகாக்கிறது.

    வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 3,51,998 பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய 1,03,112 பெண்களுக்கும் என மொத் தம் 4,55,110 பேருக்கு, மாவட்டத்தில் 7,68,762 மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள தாகவும் சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

    ×