என் மலர்
வேலூர்
- கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
- குடிபோதையில் தந்தையை மகனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை, மாசிலா மணி தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவரது மகன் சரத்குமார் (27) சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் சரத்குமார் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தேவராஜிக்கும், சரத்குமாருக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தேவராஜ் தன் மகன் சரத்குமாரை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை தேவராஜ் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த தேவராஜியின் மனைவி மற்றும் மகள் அலறியடித்துக்கொண்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று தேவராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.
குடிபோதையில் தந்தையை மகனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 6 டாஸ்மாக் கடைகள் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன
- மதுக்கடைகளை மாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலுார்:
வேலுார் மாநகரில் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொது இடங்களில் மது அருந்தும் கும்பல், அந்தவழியாக செல்பவர்களிடம் போதையில் கலாட்டா செய்வதும் வாடிக்கையா கிவிட்டது.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துபவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
மேலும் இனிமேல் பொது இடங்களில், மக்களுக்கு இடையூறாக மது அருந்திவிட்டு தகராறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
வேலுாரில், ஆற்காடு சாலையில் மட்டும் மொத்தம் 6 டாஸ்மாக் கடைகள் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன. இதனால், இப்பகுதியில், மாலை 6 மணிக்கு மேல் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிடுகிறது.
டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கிவிட்டு சாலையோரத்தில் உள்ள கடைகள், விடுதிகள்,காலி இடங்கள் என எல்லா இடங்களிலும் சாவகாசமாக அமர்ந்து குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர்.
இதனால், அப்பகுதி வழியாக மக்கள் செல்லவே முடியாத நிலை உள்ளது. மேலும், இப்பகுதிகளில் பெரும்பாலும் சி.எம்.சி-க்கு சிகிச்சைக்கு வரும் வெளிமாநிலத்தவர் அதிகளவில் தங்கியுள்ளனர். குடிபோதையில் அவர்களை தாக்குவது, பெண்களை கேலி செய்வதும் அதிகரித்து விட்டது.
குறிப்பாக, 'எலைட்" எனப்ப டும் வெளிநாட்டு மது வகைகளை விற்பனை செய்யும் கடைக்கு அருகே உள்ள வீடுகளின் வாசல் பகுதிகள் எல்லாம் இரவு 7 மணிக்கு மேல் குடிகா ரர்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால், பலர் வீட்டையே காலி செய்து சென்றுவிட்டனர்.
இதை கட்டுப்படுத்த போலீசார் இப்பகுதியில் கட்டாய ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் அல்லது குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளை மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்த் உள்ளனர்.
- பஸ் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டதால் ஆத்திரம்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
வேலூ:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நஞ்சுகொண்டாபுரம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.
பாகாயம், கணியம்பாடி, பெரிய பாலம்பாக்கம், ஏ.டி.காலனி, அருந்ததியர் காலனி, கிருஷ்ணாவரம் வழியாக செல்லும் இந்த அரசு பஸ் வழித்தடம் கடந்த சில நாட்களாக மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நஞ்சுண்டாபுரம் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர்.
ஆனால் பஸ் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யும் வளர நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- வேலூரில் நாளை நடக்கிறது
- கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அழைப்பு
வேலுார்:
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (25-ந் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகிக்கிறார்.
வேளாண், பொறியியல், மின்வாரியம், ஆவின், கூட்டுறவு சங்கங்கள், போக்குவரத்து உட்பட எல்லாதுறை அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
எனவே, விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்
- மறைமுக தேர்தல் நடந்தது
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக 8-வது வார்டு உறுப்பினர் குப்புசாமி என்பவர் பதவி வகித்து வந்தார்.
அவர் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்தநிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று மறைமுக தேர்தல் நடந்தது.
இதில் 7-வது வார்டு உறுப்பினர் ரேணு என்பவர் மட்டும் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் அவரைத் தொடர்ந்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.
- பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம்
- பல மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் லத்தேரியை அடுத்த செஞ்சி பகுதியைச் சேர்ந்த கே.ராமன் (வயது 44) என்பவர் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் ஒரு மாணவி ஆசிரியர் ராமன் தன்னிடம் சில்மிஷம் செய்ய முயன்றதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆசிரியர் ராமனிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியை அகிலா தகவல் தெரிவித்தார்.
பள்ளியில் மாணவியிடம், ஆசிரியர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தி யில் பரவியது. இதனால் பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியை ஜி.அகிலா, மாவட்ட கல்வி அலுவலர் எம்.அங்குலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் எம்.எஸ்.அமர்நாத், ஜி.எஸ். அரசு மற்றும் பிரமுகர்கள் பள்ளி வளாகத்தில் விசா ரணை நடத்தினர்.
தொடர்ந்து பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ராமன் சில்மிஷம் செய்ததாக ஏராளமான மாணவிகள் குற்றம் சாட்டினார்கள்.
மேலும் மாலை வரை போராட்டம் நடைபெற்றதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம், ஆசிரியர் ராமன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.
இதனையடுத்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர் பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு இன்று பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு
- வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது
வேலூர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.
எழுத்து தேர்வு
மொத்தம் 621 பணியிடங்களுக்கான அறிவிப்பில் விண்ணப்பித்த வர்களுக்கான முதற்கட்ட எழுத்துத்தேர்வு வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடை பெறவுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட் டத்தில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தேர்வு நடக்கிறது.
ஆகஸ்ட் 26-ந் தேதி பொதுப்பிரிவினர் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு 100 மதிப்பெண்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு காலையில் நடக்கிறது. அதில் மொத்தம் 7,613 பேர் பங்கேற்கின்றனர்.
அன்றைய தினம் பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல் தேர்வு 70 மதிப்பெண்கள்தேர்வு நடைபெற உள்ளது.
பாதுகாப்பு பணி
தொடர்ந்து, மறுநாள் 27-ந் தேதி போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல், சட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகம் தொடர்பாக 85 மதிப்பெண்களுக்கான 2-ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. இதில், 1,081 பேர் பங்கேற்க உள்ளனர்.
வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் நடைபெறும் தேர்வு பணியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோனி இவரது மனைவி ஷைனி.
இவர்கள் வீட்டில் நேற்று தனது குடும்பத்துடன் இருந்த போது திடீரென பாம்பு நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பாம்பை பிடித்தனர்.
பின்னர் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை வனத்துறையினர் அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.
- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல்
- தரமான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பில் 24 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தயார் செய்யப்படும் 20 லிட்டர், 5 லிட்டர், ஒரு லிட்டர் கேன்களில் தண்ணீர் நிரப் பப்பட்டு வீடுகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கேன்களில் விற்பனை செய்யப்ப டும் குடிநீர் சில இடங்களில் தரமற்று இருப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவ னங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப் பட்டு, அவற்றை சரிசெய்ய வேண்டும் என அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தரமான குடிநீரை பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என்றனர்.
- 45 நாட்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கின்றனர்
- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலுார் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் காட்பாடி, சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள 52 திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்பப்படுகிறது.
அங்கு மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை தரம்பிரித்து, அதில் ஈரப்பதம் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு, 45 நாட்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கின்றனர்.
இந்த மையங்களில், மாதத்திற்கு 25 முதல் 30 டன் வரை இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை நுண்ணுயிர் உரம், விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-
திடக்கழிவு மேலாண்மை நிலையங்களில் கிட்டத்தட்ட 250 டன் இயற்கை உரம் தயார் நிலையில் உள்ளது. இப்போது வீட்டு தோட்டங்களில் செடிகள் வளர்க்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நேரில் வந்து உரத்தை இலவசமாக பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.
- கொலை மிரட்டல் விடுத்ததை அதிமுகவினர் ரசித்தனர்
- குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் குடியாத்தம் அமுலு விஜியன் எம்.எல்.ஏ. தலைமையில் மேயர் சுஜாதா வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்ட திமுகவினர் மனு அளித்தனர்.
அதில் கூறி இருப்பதாவது, மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி. கனிமொழி கருணாநிதி ஆகியவர்களை ஆபாசமாகவும் அவதூறாகவும் பாட்டு பாடியும் பேசி கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதை முன் வரிசையில் அமர்ந்து அனைத்து அதிமுக தலைவர்களும் அதனை ரசித்து ஏளனமாக கைத்தட்டி சிரித்து வந்தனர்.
லட்சக்கணக்கான அதிமுகவின் தொண்டர்கள் முன்னிலையில் இப்படி பேசியது மட்டுமல்லாமல் அதனை அவர்களது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பினார்கள்.
பொதுவெளியில் அரசியல் தலைவர்களை விமர்சனம் என்ற பெயரில் தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தியும், உண்மைக்கு மாறான தனிப்பட்ட முறையில் ஆபாசமாகவும், அவதூராகவும் அநாகரிகமாகவும் கொலை மிரட்டல் விடுத்து வேண்டுமென்றே பேச வைத்து பாட்டு பாட வைத்து அதனை ரசித்த அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநாடு நடத்திய நிர்வாகிகள், பாடலை பாடிய நபர்கள் மீது பொது நலனுக்கு குந்தகம் மற்றும் மேற்படி சட்டத்துக்கு புறமான செயலை செய்த நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- சீமை கருவேல மரங்களை அகற்றினர்
- கரைகளை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெல்வாய் ஊராட்சியில் உள்ள ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரியில் சீமைக் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீரை ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் உறிஞ்சு விடுகிறது.
இதனால் ஏரி நிரம்பிய சில மாதங்களிலேயே தண்ணீர் வற்றிபோகிறது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் வேலூர் எக்ஸோனாரா இன்ட ர்னேஷனல் தொண்டு நிறுவனம் தானாக முன்வந்து, நெல்வாய் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி ஏரியை தூர்வார அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர். அதன்படி தொண்டு நிறுவனத்துக்கு ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்கினார்.
அதன்படி ஏரியில் உள்ள சீமை கருவள மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கருவேல மரங்கள் முழுவதாக அகற்றி, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது கணியம்பாடி ஒன்றியகுழு தலைவர் திவ்யாக மல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, தாசில்தார் செந்தில், உடன் இருந்தனர்.






