என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் 100.9 டிகிரி சுட்டெரிக்கும் வெயில்
    X

    வேலூர் மாவட்டத்தில் 100.9 டிகிரி சுட்டெரிக்கும் வெயில்

    • பொதுமக்கள் அவதி
    • குளிர்பான கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர்

    வேலூர்:

    கோடைகாலம் முடிந்த போதிலும் வேலூரில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி கடந்த சில நாட்கள் மழை பெய்து குளிர்ச்சியை தந்தது. இந்நிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் வேலூர் மாவட்டத்தில் 100.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

    இதனால் மக்கள் மீண்டும் குளிர்பான கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    Next Story
    ×