என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை மரம் மீது இடி விழுந்தது."

    • தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது
    • அதிகாரிகள் நேரில் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 34) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பசு மாடு வளர்த்து வந்தார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் ஊசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது மாட்டின் கொட்டகைக்கு அருகில் உள்ள தென்னை மரம் மீது இடி விழுந்தது.

    அப்போது அருகில் இருந்த கொட்டகையில் இடி விழுந்தது. இதில் கொட்டகையில் கட்டியிருந்த பசு மாடு இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தென்னை மரத்தில் இடி விழுந்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்ததை அந்த பகுதி மக்கள் பார்வையிட்டு தங்கள் செல்போனில் பதிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன், கால்நடை பராமரிப்புத் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    இடி தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ேசாகத்தை ஏற்படுத்தியது.

    ×